குடைமிளகாய் புளிக்குழம்பு | Capsicum Puli Kuzhambu
            உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தபடும் மிளகாய் வகைகளில் குடமிளகாயும் ஒன்று. இது காய்கறிகளுக்கு சுவை மற்றும் மணம் தரும் வண்ணமயமான காய்களுள் ஒன்றாகவும், மிளகிற்கு நிகரான சுவை உடைய ஒன்றாகவும் உள்ளது. மேலும், சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு என பல வண்ணங்களில் கிடைக்கும் இந்த மிளகாய் அதிக காரம் இல்லாததாகவும் உள்ளது. நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த புளிக்குழம்பு. இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம்.