கேரளா பனங்கிழங்கு கார புட்டு | Kerala Pangilangu Kara Puttu
புட்டு கேரளாவின் பாரம்பரிய காலை உணவுகளில் ஒன்று. புட்டு வழக்கமாக வாழைப்பழம், அப்பளம் அல்லது கடலை கறியுடன் பரிமாறப்படுகிறது. வீட்டில் புட்டு செய்வது மிகவும் எளிதானது. பொதுவாக ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு நல்லது. இட்லி, கொழுக்கட்டை, புட்டு என செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தினமும் ஒரே உணவை சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும். பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதனால் காலை உணவு வித்தியாசமான வகையில் இருக்க பனங்கிழங்கு புட்டு செய்து கொடுங்கள்.