Recipes

கோங்குரா முட்டை குழம்பு | Gongura Egg Kulambu Recipe in Tamil

கோங்குரா முட்டை குழம்பு. கறி குழம்பு சுவையில் கோங்குரா முட்டை குழம்பு இப்படி செஞ்சு சாப்பிட்டுங்க! இந்த குழம்புக்கு அவ்வளவு ருசியா. ருசி மட்டும் இல்லைங்க. இது அவ்வளவு ஆரோக்கியத்தை தரக்கூடிய குழம்பும் கூட. முட்டை குழம்பு என்றாலே தேங்காய் அரைத்து ஊற்றி முட்டை சுவையுடன், காரமும் கலந்து தான் இருக்கும். ஆனால் இந்த கோங்குரா முட்டை குழம்பு அப்படி இல்லை நல்ல காரசாரமாக சிறிது புளிப்பு சுவையுடன் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கோங்குரா முட்டை குழம்பு வைத்து சாப்பிட்டால் அசைவம் சாப்பிட்ட உணர்வு கிடைக்கும். வாங்க ஒரு காரசாரமான கோங்குரா முட்டை குழம்பு எப்படி வைப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கரூர் எள்ளு குழம்பு | Sesame Seeds Kuzhambu

எள் குழம்பு இந்த நாட்களில் மறக்கப்பட்ட நமது பாரம்பரிய குழம்புகளில் ஒன்றாகும். இது எள் விதைகள் மற்றும் வறுத்த தேங்காய் ஆகியவற்றிலிருந்து மிகவும் சுவையாக இருக்கிறது. எள்ளு குழம்பு செய்யும் வழக்கமான முறை மற்ற குழம்பு வகைகளில் இருந்து சற்று வித்தியாசமானது. எள்ளு குழம்பு என்பது எள்ளைக் கொண்டு செய்யப்படும் கறி. இது ஒரு தென்னிந்திய செய்முறையாகும், இது மக்கள் பொதுவாக சாதம், ஆப்பம் அல்லது தோசையுடன் பரிமாறுவார்கள். கூடுதல் சுவைகள் மற்றும் ஊட்டச்சத்துக்களுடன் கிரேவியை வளப்படுத்த கூடுதல் காய்கறிகளையும் சேர்க்கலாம். எள் விதைகள் பல சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன.

மாங்காய் அடை தோசை | Raw Mango Adai Dosa

நம்மில் பலரும் தினசரி அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் ஒன்று தோசை. வீட்டில் எந்த உணவு வைக்க நேரம் இல்லை என்றால் உடனே கடைக்கு சென்று தோசை மாவு வாங்கி வந்து தோசை சுடுவது பலருக்கு வழக்கமான ஒன்று. அப்படி எப்போதும் அரிசி மாவு தோசையை மட்டும் சாப்பிட்டு அழுத்து போனவர்களுக்கு ஒரு புது விதமான அடை தோசை செய்து கொடுத்தால் ரொம்ப பிடித்தமாக இருக்கும். தென்னிந்திய உணவு வகைகளில் மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று அடை. எனவே, அடை தோசை ஒரு கிண்ணம் சாம்பார் மற்றும் சட்னியுடன் இணைக்கப்படும் போது, ​​ஆரோக்கியமான மற்றும் நிறைவான காலை உணவுக்கு சரியான தேர்வாகும்.

பப்பாளிக்காய் குருமா | Raw Papaya Kurma Recipe in Tamil

சப்பாத்தி, பூரி, தோசை, மற்றும் இட்லிக்கு அசத்தலான சைடிஷ் குருமா தான். அதிலும் குறிப்பாக சப்பாத்தி குருமா காம்பினேஷனின் ருசி தனி தான். பலரையும் கவர்ந்த இந்த காம்பினேஷன் ஓட்டல்களில் மட்டுமல்ல பெரும்பாலான இல்லத்திலும் காலை நேர டிஃபன் ஆகவோ அல்லது இரவு நேரங்களில் சமைத்து சுவைக்கின்றனர். தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் இந்த குருமா வெவ்வேறு இடங்களில் வித விதமாக சமைத்து உண்கின்றன. அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் மற்றும் மட்டன் குருமா எவ்வாறோ, சைவப் பிரியர்களுக்கு வெஜிடபிள் மற்றும் காலிபிளவர் பட்டாணி குருமா. இவை செய்வது மிகவும் சுலபம். இப்பொழுது சுவையான பப்பாளி காய் குருமா செய்வதற்கு எளிமையான செய்முறையை காண்போம்.

கொத்தமல்லி சாதம் | Coriander Rice Recipe Tamil

மதிய உணவாக குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்காகவே இந்த ரெசிபிதான் இன்று பார்க்க போகிறோம். கொத்தமல்லி சாதம் மதிய உணவாக இந்த சாதத்தை செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள்.இந்த சாதத்தை செய்வதும் சுலபம் தான், குறைந்த நேரத்தில் அட்டகாசமான சுவையில் செய்து விடலாம். குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. மீண்டும் எப்பொழுது செய்வீர்கள் என்று கேட்பார்கள். இந்த சாதத்துடன் உருளை கிழங்கு வறுவல் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.கொத்தமல்லி சாதம் எப்படி செய்வதென்று கீழ கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.