Recipes

Recipe Image
பீட்ரூட் வடை | Beetroot VadaI Recipe in Tamil

மாலை வேளையில் வீட்டில் உள்ளோர் மொறுமொறுப்பாகவும், சூடாகவும் ஏதேனும் சாப்பிட கேட்கிறார்களா? அவர்களுக்கு வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? அப்படியானால் அந்த பீட்ரூட்டைக் கொண்டு வடை செய்து கொடுங்கள். இந்த பீட்ரூட் வரை செய்வது மிகவும் சுலபம். மேலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். பீட்ரூட் துருவல் மற்றும் ஊறவைத்த பருப்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட பிரபலமான தமிழ் உணவு வகைகளில் இருந்து ஒரு சின்னமான ஆழமான வறுத்த சிற்றுண்டி.

Recipe Image
கிராமத்து வெண்டைக்காய் காரக்குழம்பு | Village Style Ladys Finger Gravy

நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு. இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். இது பெரும்பாலோனோர் பலவகையாக இந்த கார குழம்பு செய்து சாப்பிடுவார்கள். கொண்டைக்கடலை, சேனைக்கிழங்கு கார குழம்பு, வெங்காய கார குழம்பு, கத்தரிக்காய் காரக்குழம்பு, முருங்கைக்காய் காரக்குழம்பு,என பல வகைகள் உண்டு. கார குழம்பு பொதுவாக முருங்கை, கத்தரி போன்ற காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் வெண்டைக்காயால் செய்யப்படும் காரக் குழம்பு பெரிதும் ஆசைக்குறியது.

Recipe Image
பனங்கிழங்கு உப்புமா | Panakilangu Upma Recipe in Tamil

இன்று காலை என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் தோசை, இட்லி சாப்பிட்டு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு போரடித்துவிட்டது என்று சொல்கிறார்களா? உங்கள் வீட்டில் பனங்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு உப்புமா செய்து கொடுங்கள். இன்றைய தலைமுறையினர் ரவா உப்புமா என்பது தமிழ் நாட்டில் தடை செய்ய வேண்டிய ஒரு உணவுப் பொருளாகவே பெரும்பாலும் பார்த்து வருகின்றனர். ஆகாத மருமகன் வீட்டுக்கு வந்தா உப்புமாவைக் கிண்டி வை!’ என நம்மூரில் ஒரு பழமொழியே உண்டு. அதனால் ரவை உப்புமாவிற்கு மாறுதலாக பனங்கிழங்கு உப்புமா செய்தால் உப்புமா பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

Recipe Image
வேர்க்கடலை பேடா | Peanut Peda Recipe in Tamil

கோவா பேடா அல்லது பால்கோவா பேடா இந்திய இனிப்பு வகைகளுள் சுவை மிகுந்தது. பண்டிகை, கல்யாணம் வந்தாலே இந்த பேடாவைத் தான் தயார் செய்வார்கள். பேடா என்பது இந்தியாவில் புகழ்பெற்ற ஸ்வீட்ஸ் வகை ஆகும். பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சிகளின் போது இந்த ஸ்வீட்டை விரும்பி செய்வர். பால் இதன் முக்கிய பொருளாகும். இந்தியாவின் எல்லா மூலை முடுக்கு கடைகளிலும் இது கிடைக்கக்கூடியது. இந்த வேர்க்கடலை பேடாவை எளிதாக கூடிய விரைவில் செய்து முடித்திடலாம். இதன் இனிப்பு சுவை நாவை சொட்டை போட வைக்கும். யாரும் வேண்டாம் என்று சொல்லாத அளவிற்கு எல்லாருக்குமே பிடித்தமான ஒரு ஸ்வீட்ஸ் ரெசிபி.