Recipes

Recipe Image
ராஜ்மா மசாலா | Rajma Masala Recipe in Tamil

உங்கள் வீட்டில் ராஜ்மா என்னும் சிவப்பு காராமணி உள்ளதா? அதைக் கொண்டு ஒரு அற்புதமான ரெசிபி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் வடஇந்தியாவில் மிகவும் பிரபலமான பஞ்சாபி ராஜ்மா மசாலா செய்யுங்கள்.ரெட் கிட்னி பீன்ஸ் அல்லது சிவப்பு பீன்ஸ் அல்லது ராஜ்மா என அழைக்கப்படும் இந்த அற்புத உணவுப்பொருட்கள் ஏராளமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. இந்த பஞ்சாபி ராஜ்மா மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

Recipe Image
கோதுமை ரவா புட்டிங் |‌‌ Wheat Rava Pudding Recipe in Tamil

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் குளிர்ச்சியாக சாப்பிட வேண்டும் என்று விரும்புவோம். சிலருக்கு புட்டிங் மிகவும் பிடிக்கும். அதிலும் அதில் சேர்க்கக் கூடிய கேரமல் சுவைக்காகவே அதை விரும்பி சாப்பிடுவார்கள். புட்டிங் சற்று விலை கூடுதலாக இருக்கும் என்பதால் என்னதான் பிடித்த உணவாக இருந்தாலும் அடிக்கடி சாப்பிட முடியாது. ஆனால் இனி அப்படி இல்லை. நீங்கள் நினைக்கும் போதெல்லாம் 15 நிமிடத்தில் உங்கள் கை பக்குவத்தில் செய்து சாப்பிடலாம். பள்ளி முடித்து வரும் உங்கள் குட்டிஸ்களுக்கு இந்த கோதுமை ரவை புட்டிங்கை செய்து கொடுங்கள்.

Recipe Image
பாலக் முறுக்கு | Palak Murukku Recipe in Tamil

பொதுவாக முறுக்கு என்றாலே அனைவருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ். பல வகை முறுக்கு இருக்கிது அதில் வெண்ணைய் முறுக்கு சிறப்பு வாய்ந்த ஒன்று. பொதுவாக பண்டிகை காலங்களில் தயாரிக்கப்படும் மொறுமொறுப்பான சுவையான பலகாரம் ஆகும். முறுக்கு நம் பாரம்பரிய பலகாரத்தில் ஒன்று. பலருக்கு பிடித்த ஒரு நொருக்கு தீனி என்றால் அது முறுக்கு தான். பாலக் முறுக்கு சுவையான ஸ்நாக்ஸ் என்பதோடு மட்டுமல்லாமல், அது நம் உடல் நலனுக்கு உகந்த ஸ்நாக்ஸ் ஆகும். ஏனென்றால், இவை பெரும்பாலும் சத்தான தானியங்கள் மற்றும் நன்மை தரும் மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

Recipe Image
பச்சை பயறு சுக்கா | Pasi Payaru Sukka Recie in Tamil

பச்சைபயிறு சாப்பிடுவதால் உடலுக்கு மிகவும் நல்லது இதில் புரதச்சத்து உள்ளது பச்சை பயிரை நீரில் 6 மணி நேரம் ஊரவைத்து பின் இரவில் வெள்ளை துணியில் அந்த பச்சை பயிரை போட்டு காற்று போகாதவாறு அந்த துணியில் இரவு முழுவதும் கட்டி வைத்து பின் காலையில் எடுத்து பார்த்தால் முலைப்பு வந்திருக்கும் அதனை சாப்பிட்டால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. பயறு வகைகள் உடலுக்கு மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். ஏனெனில் பயறுகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.

Recipe Image
மாங்காய் கார குழம்பு |Mango Kara Kulambu

நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு. இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். இது பெரும்பாலோனோர் பலவகையாக இந்த கார குழம்பு செய்து சாப்பிடுவார்கள். அந்த வகையில் மாங்கா குழம்பு என்பது ஒரு காரமான தென்னிந்திய கறி ஆகும், இது இனிப்பு மற்றும் காரமான புளி குழம்பில் சமைக்கப்பட்ட மாம்பழங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள வெந்தய விதைகள்‌ மற்றும் வெல்லம் சேர்க்கப்படுவது இந்த குழம்பு செய்முறையை சுவையில் தனித்துவமாக்குகிறது.

Recipe Image
செம்பருத்திப்பூ புதினா சர்பத் | Hibiscus Mint Sarbath Recipe in Tamil

கோடைகாலம் ஆரமித்துவிட்டது. கோடை வெயில் தாக்கத்தில் இருந்து உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க அதிகமாக தண்ணீர் பருகுதல், பல ஜூஸ் குடித்தால் போன்ற ஆரோக்கியம் முறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், வெயிலுக்கு இதமான செம்பருத்திப்பூ புதினா சர்பத் செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம். செம்பருத்திப்பூ புதினா சர்பத் குளிர்ச்சியான, ஆரோக்கியம் நிறைந்த பொருட்களை கொண்டு செய்யப்படும் குளிர்பானம். இது போன்ற வீட்டிலேயே சுத்தமாக செய்யப்பட்ட , சத்தும் நிறைந்த குளிர்பானங்களை செய்து குடிப்பதால் உடல் ஆரோக்கியமும் மேம்படும் சுவையும் அபாரமாக இருக்கும்.

Recipe Image
ஹோட்டல் ஸ்னடல் குலாப் ஜாமூன்| Hotel Gulab Jamun Receipe in Tamil

நாவிற்கு சுவை நிறைந்த பிரபலமான இந்திய இனிப்பு குலாப் ஜாமூனின் பதிப்பாகும். குலாப் ஜாமூன்களுடன் ஒப்பிடும் போது இவை அளவில் பெரியதாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும். மாவில் சேர்க்கப்படும் சர்க்கரையால் இது கருமை நிறத்தைப் பெறுகிறது.இது சாதாரண குலாப் ஜாமூன்களை விட அதிக நேரம் ஊறவைக்க வேண்டும். ஒரு முறை இந்த ஜாமூனை சுவைத்தாள் போதும் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். இந்த அழகான அடர் கருப்பு வண்ண ஜாமூன்கள், சாதாரண மற்ற ஜாமூன்களை விட இனிப்பானவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குலாப் ஜாமூன் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.