Recipes

Recipe Image
முள்ளங்கி வெஜிடபிள் பிங்கர்ஸ்| Radish Vegetable Fingers

பிங்கர்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. இவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் முதன்மையான இடத்தில் இருப்பவை. மேலும் உணவு பிரியர்களுக்கும் இவை மிகவும் பிடித்தமான ஒரு உணவு. என்ன தான் பிங்கர்ஸ்ஸில், சிக்கன் பிங்கர்ஸ் மிகவும் பிரபலமாக இருந்தாலும் வெஜிடபிள் பிங்கர்ஸ்க்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் பிங்கர்ஸ் எவ்வாரோ அது போன்றே சைவ பிரியர்களுக்கு வெஜிடபிள் பிங்கர்ஸ். ஏனென்றால் வெஜிடபிள் பிங்கர்ஸ்க்கு இளம் தலைமுறையினர் மத்தியில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான்.

Recipe Image
வேர்க்கடலை பட்டர் குக்கீஸ் | Groundnut Butter Cookies

வேர்க்கடலையை நொறுக்குத்தீனியாகச் சாப்பிடாதவர்கள் உலகில் யாரேனும் இருக்கிறார்களா? உலர்ந்த வெவ்வேறு பயிறுகளோடு வேர்க்கடலையையும் கலந்து உலகின் பல தெருக்களில் விற்கிறார்கள். வேர்க்கடலை பட்டரை சாண்ட்விச்சில் தடவி சாப்பிடுவதும் வழக்கமாக இருக்கிறது. வேர்க்கடலைக்கென்று அதற்கே உரிய மணமும் ருசியும் உண்டு. குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடுகின்ற ஸ்னாக்ஸ் வகைகளை செய்தால் சத்தம் மில்லாமல் அனைத்தையும் மகிழ்ச்சியாக சாப்பிட்டு முடிப்பார்கள். அப்படி அவர்கள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகளில் ஒன்றான வேர்க்கடலை குக்கீஸை ஆரோக்கியமான வகையில் செய்து கொடுத்தால் நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.