ஹரியாலி சிக்கன் 65 | Hariyali Chicken 65
சிக்கன் 65 என்பது இந்தியா முழுவதும் பிரபலமான சிக்கன் உணவாகும். வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சிக்கன் 65 செய்வது மிகவும் எளிது. சிக்கன் என்றால் பெரியவர் முதல் சிறியவர் வரை யாருக்குதான் பிடிக்காது. அதுவும் சிக்கனில் 65 செய்து சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும். சிக்கன் 65 ஒரு சுவையான மற்றும் மொறுமொறுப்பான உணவுவகை. இது மாலை நேர சிற்றுண்டியாக அல்லது மதிய நேரத்தில் பிரியாணி, நெய் சோறு, ஆகியவற்றுடன் பரிமாறலாம். இது எலும்பில்லாத சிக்கன், மிளகாய்தூள், மஞ்சள்தூள், மற்றும் இதர இந்திய மசாலா வகைகளுடன் சேர்த்து செய்யப்படுகிறது.