Recipes

காஷ்மீர் சிக்கன் கறி | Kashmiri Chicken Curry Recipe in Tamil

ஞாயிற்றுக்கிழமை என்றாலே நம் வீட்டில் பெரும்பாலும் அசைவ உணவாக இருக்கும். சிக்கன் கிரேவி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை அசைவ பிரியர்கள் மட்டுமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கிறது என்றால் அது மிகை அல்ல. சிக்கன் கிரேவியை இந்தியாவிலேயே வெவ்வேறு இடங்களில் அங்கங்கு இருக்கும் சமையல் முறைக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்களோடு மக்கள் செய்து சுவைக்கிறார்கள். சிக்கன் கிரேவி நாம் சாதத்தில் ஊற்றி உண்பதற்கும் அட்டகாசமாக இருக்கும்.

பன்னீர் ஜிலேபி | Paneer Jalebi Recipe in Tamil

தமிழ் உணவு கலாச்சாரத்தில் இனிப்பு வகைகளுக்கு என தனி இடம் உண்டு. இனிப்பு வகைகளில் ஒன்றான ஜிலேபி வட இந்தியர்களின் பிரதான இனிப்பு வகையாக உள்ளது. வட இந்தியாவில் தோன்றினாலும் இப்போது நமது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இந்த ஜிலேபி சுவைக்கு அடிமையானவர்கள் இருக்கின்றனர். இந்த இனிப்பு வகை பொதுவாக பண்டிகைகளின் போதும் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கும் தயாரித்து மகிழ்வர். இது மிகவும் மொறுமொறுப்பாக மென்மையாக இருப்பதோடு வாயில் போட்டதும் அப்படியே ஜூஸியாக உருகக் கூடியதாகவும் உள்ளது. இதை சர்க்கரை பாகுவில் ஊற வைப்பதால் இந்த ஜூஸின் தன்மை இதுக்கு கிடைக்கிறது.