Recipes

பெங்கால் ரசகுல்லா | Bengal Rasagulla Recipe in Tamil

இனிப்புகள் என்றாலே பொதுவாக உணவுப் பிரியர்களுக்கு மட்டும் அன்றி எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் குறிப்பாக சில இனிப்பு வகைகள் மிகவும் பிரசித்தி. அந்தப் பிரசித்தி வாய்ந்த ஒரு இனிப்பு வகை தான் ரசகுல்லா. குலாப் ஜாமூனுக்கு அடுத்த படியாக பலரும் விரும்பி சாப்பிடுவது ரசகுல்லா தான். இவை கிழக்கு இந்தியாவில் உள்ள மேற்கு வங்கத்தில் உதயமானது என்று கூறுகிறார்கள். அனைத்து வயதினருக்கும் பிடித்த ஸ்வீட் பட்டியலில் நிச்சயம் ரசகுல்லாவும் ஒன்றாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ரசகுல்லாவை வீட்டில் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தாபா ஸ்டைல் சென்னா மசாலா | Dhaba Style Channa Masala Recipe in Tamil

உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு சைடு டிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? என்னதான் வீட்டில் பூரிக்கு மசாலவும், குருமாவும் செய்தாலும் குடும்பத்துடன் சைவ உணவகங்களுக்கு சென்றால் வாங்கி சாப்பிடுவது இந்த சென்னா மசாலா தான். அப்படியானால் ஹோட்டலில் கொடுக்கப்படும் சன்னா மசாலாவை வீட்டிலேயே செய்து கொடுங்கள். இதனால் 2 சப்பாத்தி சாப்பிடுபவர்கள் 4 சப்பாத்தி சாப்பிடுவார்கள். இது பஞ்சாபில் இருந்து பெறப்பட்ட சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை.

பீச் ஸ்டைல் மாங்காய் | Beach Style Mangai Recipe in Tamil

கோடைகாலம் துவங்கி விட்டாலே முதலில் நம் நினைவிற்கு வருவது மாங்காய் தான். மாங்காய் வந்த பிறகு மாம்பழம் வர துவங்கும். கோடை காலத்தில் குழந்தை, பெரியவர் அல்லது வயது வித்தியாசம் இல்லாமல் யாரும் பார்க்கத் தயங்காத இடமாக கடற்கரை உள்ளது. பீச்சுக்கு போனாலே முதலில் கண்ணில் படுவது மாங்காய் மசாலா தான். அருமையாக நீள நீளமாக வெட்டி அதில் மாங்காய்க்கு தேவையான மசாலாவை தூவி பேப்பரில் மடித்து கொடுப்பார்கள். நம்மில் பலரும் கடற்கரைக்குச் சென்றால் அங்கு கடலின் அழகினை ரசிக்கிரோமோ இல்லையோ அங்கு உள்ள அனைத்து உணவுகளையும் சுவைக்க மறப்பதில்லை.

வாழைத்தண்டு தோசை | Banana Stem Dosa Recipe in Tamil

தென்னிந்தியாவில் அதிக மக்கள் விரும்பி சாப்பிடும் முக்கிய உணவுளில் ஒன்று தோசை. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தோசை என்றால் மிகவும் பிடிக்கும். சுவையாகவும், விரைவில் செய்து சாப்பிடும் அளவுக்கு இருக்கும். மேலும் இது ஒரு ஆரோக்கியமான உணவு. தோசையில் பல வகைகள் உண்டு. கல் தோசை, வெங்காயத் தோசை, ரவா தோசை, பொடி தோசை, முட்டை தோசை, கோதுமை தோசை, மசாலா தோசையென அடுக்கிக்கொண்டே போகலாம். இதுவரை நீங்கள் எத்தனையோ தோசைகளை செய்து சுவைத்திருப்பீர்கள். இந்த வாழைத்தண்டு தோசை சட்னி, சாம்பார் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.