முள்ளங்கி பரோட்டா | Radish Parotta Recipe in Tamil
            பரோட்டா தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு உணவு வகை. இவை எந்த அளவுக்கு பிரபலம் என்றால் பரோட்டாவிற்கு என ஒரு தனி உணவுப் பிரியர்கள் கூட்டமே உண்டு. உணவு பிரியர்களையும் பரோட்டாவையும் அவ்வளவு எளிதில் பிரித்து விட முடியாது. பிரியாணிக்கு அடுத்தப்படியாக உணவு பிரியர்கள் அதிகம் விரும்பி, தேடி தேடி உண்ணும் உணவாக உள்ளது பரோட்டா. பரோட்டாவிலும் ஏகப்பட்ட வெரைட்டிகள் உள்ளன. பன் பரோட்டா, சில்லி பரோட்டா, வாழை இலை பரோட்டா, கிழி பரோட்டா, கொத்து பரோட்டா, கறி பரோட்டா, கொஸ்து பரோட்டா என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பரோட்டா பிரியர்கள் அதிகம் விரும்பி உண்பது கொத்து பரோட்டா. ரோட்டுக்கடை கொத்து பரோட்டா என்றால் இன்னும் ஸ்பெஷல். நாம் இன்று முள்ளங்கி பராத்தா எப்படி செய்வது என்று பார்ப்போம்.