Recipes

கம்பு கார தோசை | pearl millet dosa recipe in tamil

முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் வயதானவர்கள் வீட்டில் அடிக்கடி சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொண்டதால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்போது இயந்திர மற்றும் நவீன வாழ்க்கையில் துரித உணவுகள் மற்றும் மேற்கத்திய உணவுகள் என்று இன்றைய தலைமுறையினர் பலரும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள மறந்து விட்டார்கள் என்று கூறலாம். இதனால் பலரும் டயபடிஸ், உடல் பருமன், இரத்த கொதிப்பு என்று இன்னும் பல வகையான வியாதியால் அவதிப்பட்டு வருகின்றனர். உணவு முறைகளில் சிறு மாற்றம் செய்து அதனை முறையாக பின்பற்றினாலே பல விதமான நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அப்படி சத்தான உணவுகளில் ஒரு வகையான கம்பு சேர்த்து ஒரு ரெசிபியை காண உள்ளோம்.‌

கத்திரிக்காய் மசாலா | Brinjal Masala Recipe In Tamil

பிரியாணி பிரியர்களுக்கு இந்த கத்திரிக்காய் மசாலா ரொம்பவே பிடிக்கும். ஏன் நான் பிரியாணியை கத்திரிக்காய் மசாலாவுடன் சாப்பிடும் போது தான் பிரியாணி பிரியர்கள் எல்லாம் பிரியாணி சாப்பிட்ட ஒரு திருப்தியே கிடைக்கும். அப்படி சுவையான இந்த கத்திரிக்காய் மசாலாவ வீட்டுல நம்ம செய்ய போறோம். அதுக்கு நம்ம எப்பவுமே ரொம்ப  ஃப்ரெஷ்ஷான கத்திரிக்காய பயன்படுத்தி செய்யணும். ஃப்ரெஷ்ஷான கத்திரிக்காய் பயன்படுத்தி செய்தால் மட்டும் தான் இந்த கத்திரிக்காய் கிரேவி ரொம்பவே சுவையா இருக்கும்.  சரி வாங்க சுவையான இந்த கத்திரிக்காய் மசாலா எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.

கோதுமை கீரை பக்கோடா | Wheat Greens Pakoda In Tamil

ரொம்ப ரொம்ப ஈசியா சட்டுனு வீட்டில் இருக்க கூடிய பொருட்களை வைத்தே ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான பக்கோடா செய்வது எப்படி. இந்த பக்கோடாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். கூடவே உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரை வகைகளும் இதோடு சேர்ந்து நம்முடைய வயிற்றுக்குள் செல்லும்.மலை வேலையில், பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த பக்கோடா செய்து பாருங்களேன். மிகவும் அருமையாக அனைவர்க்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.  எந்த கீரை இருந்தாலும் சரி அது உங்களுடைய விருப்பம் தான். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பச்சை மிளகாய் தக்காளி தொக்கு | green chilli tomato thokku recipe in tamil

உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி மட்டும் தான் உள்ளதா? ஆனால் சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும் தக்காளி பச்சை மிளகாய் தொக்கு செய்து சுவையுங்கள். இந்த தக்காளி பச்சை மிளகாய் தொக்கு செய்வது மிகவும் சுலபம் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சப்பாத்திக்கு மட்டுமல்ல இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி என சாப்பிட்டு போரடித்துவிட்டாலும் அதற்கும் ஒரு அருமையான ரெசிபி தான் தக்காளி பச்சை மிளகாய் தொக்கு. இதை பக்குவமாக செய்தால் 10 நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. பெரும்பாலான வீடுகளில் பொதுவாக தக்காளி தொக்கிற்கு காய்ந்த மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் தூள் தான் சேர்ப்பார்கள். தக்காளி தொக்கில் மிளகாய்த்தூளுக்கு பதில் காரத்துக்கு பச்சை மிளகாய் சேர்த்து செய்து பாருங்கள். சுவையும்,வாசனையும் தூக்கலாக இருக்கும்.

வெள்ளை காராமணி தோசை | White Kaaramani Dosa Recipe In Tamil

தானிய வகைகளில் எதை எடுத்துக் கொண்டாலும் நம் உடலுக்கு அத்தனை ஆரோக்கியமும் சத்துக்களும் கிடைக்கக்கூடிய ஒன்று தான். நாம் தான் நேரமின்மை காரணத்தாலும் ருசிக்கு அடிமைப்பட்டு கிடந்ததாலும் இது போல் தானிய வகைகளை பெரும்பாலும் நாம் உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. இதில் எண்ணற்ற சத்துகள் உள்ளது. இதை அப்படியே வேக வைத்து தந்தால் குழந்தைகளுக்குக் பிடிக்காது. இந்த வெள்ளை காராமணி குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பெரியவர்களும் எடுத்து கொள்ள வேண்டிய உணவு தான். இதையே கொஞ்சம் வேற மாதிரி செய்து தாருங்கள் உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதோ வெள்ளை காராமணி தோசை செய்முறை பதிவு.

மெட்ராஸ் மஷ்ரூம் குருமா | Madras Mushroom Kuruma

மஷ்ரூம் குருமாவை நம்ம  மெட்ராஸ் ஸ்டைலில் இந்த மஷ்ரூம் குருமாவை எப்படி வைக்கிறது பார்க்க இருக்கோம். இந்த மஷ்ரூம் குருமா ரொம்பவே சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மஷ்ரூம் உணவுகள் அப்படிங்கும் போது அது குழந்தைகளுக்கு ரொம்பவே ஒரு புடிச்ச உணவாக இருக்கிறதுனால நீங்க மஷ்ரூம் யூஸ் பண்ணி எந்த மாதிரியான ஒரு உணவு செய்து கொடுத்தாலும் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்கப்புறம் நீங்க எப்ப எல்லாம் மஷ்ரூம் வாங்குறிங்களோ அப்பெல்லாம் இந்த குருமா வச்சு குடுக்க சொல்லி உங்ககிட்ட ரொம்பவே அடிபிடிப்பாங்க. அந்த அளவுக்கு சுவையான இந்த மெட்ராஸ் ஸ்டைல் குருமா எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம் வாங்க.

பெங்களூர் பிசிபெலேபாத் | Bangalore Bisibelabath Recipe In Tamil

பெங்களூர்ல எல்லா ஹோட்டல்களிலும் ரொம்பவே ஃபேமஸா நம்ம சாப்பிடக்கூடிய ஒரு உணவு வகை அப்படின்னு பார்த்தோம்னா பிசி பேலே பாத். இந்த பெங்களூர் ஸ்டைல் பிசி பேலே பாத் பாத்தா அவ்ளோ ஒரு சுவையா இருக்கு. அந்த பிசி பேலே பாத்  மாதிரி சுவையான பிசி பேலே பாத்  எப்படி வீட்ல செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த பிசி பேலே பாத்  ரொம்ப சுவையான ஒரு உணவு. கர்நாடகாவில் எந்த ஹோட்டல்கள் போனாலும் சரி இல்ல பெங்களூர்ல எந்த ஹோட்டல்கள் போனாலும் சரி உங்களுக்கு கண்டிப்பா பிசி பேலே பாத் கிடைக்கும்.சுவையான பிசி பேலே பாத் பெங்களூர் ஸ்டைலில் எப்படி செய்யலாம் பார்க்கலாம்.

குதிரைவாலி குஸ்கா | kuthiraivali kuska recipe in tamil

குஸ்கா என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். அசைவம் சாப்பிடாதவர்கள் கூட இந்த குஸ்காவை விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வெள்ளை குஸ்கா நாம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். ஆனால் சற்று வழக்கத்துக்கு மாறாக நாம் பயன்படுத்தும் அரிசிக்கு பதில் இன்று குதிரைவாலியை நாம் பயன்படுத்தப்போகிறோம். இதற்காக காசு செலவு பண்ணி பாசுமதி அரிசி வாங்க வேண்டாம். சீரகசம்பா அரிசி வாங்க வேண்டாம். சிம்பிளான இந்த குதிரைவாலி அரிசி குஸ்கா எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க. சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

தக்காளி மசாலா பூரி | Tomato masala poori recipe in tamil

பூரி என்றால் கோதுமை மாவு, அல்லது மைதா மாவில் செய்வது மட்டுமே நமக்கு தெரியும் ஆனால் இன்று நாம் பார்க்க போகும் பூரி செய்வது புதிதாக இருக்கும். இன்று இரவு உங்கள் வீட்டில் பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு எப்போதும் ஒரே மாதிரியான பூரி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் உங்கள் வீட்டில் தக்காளி நிறைய உள்ளதா? அப்படியானால் அந்த தக்காளியைக் கொண்டு பூரி செய்யுங்கள். இந்த தக்காளி பூரி மிகவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். இதை செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் தானாக விரும்பி சாப்பிடுவதென்பது அரிதான விஷயமாக தான் இருக்கும். அவ்வாறான குழந்தைகளையும் விருப்பமாக சாப்பிட வைக்க இந்த தக்காளி மசாலா பூரியை ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள்.