தயிர் பூரி | tayir puri recipe in tamil
சுவையான மாலை நேர சாட் ஐயிட்டங்கள் லிஸ்டில் இந்தியா முழுவதும் பலராலும் விரும்பப்படுகிறது பானி பூரி. அதற்கடுத்த அனைவராலும் விரும்பப்படுவது தயிர் பூரி தான். நம்மூரில் தான் பானி பூரி, தயிர் பூரி, ஆனால் இந்தியா முழுவதும் இதற்கு ஒரு டஜன் பெயர்கள் உள்ளன. ரக்தா, கோல் கப்பே, குப் சுப், பானி கே படாஷே, புல்கிஸ், ஃபுச்கா இவை அனைத்தும் பூரிக்கான மற்றொரு பெயர்கள். உலக அளவிலான நொறுக்குத்தீனி சந்தையில் பிரபலமாக உள்ள பிட்சா, பர்கர், மோமோஸ் வரிசையில் தயிர் பூரியும் ஒன்று என்றால் அது மிகையல்ல. அந்த அளவுக்கு எல்லா மாநிலங்களிலும் தயிர் பூரி தனது சுவையால் நாக்கை ஆக்கிரமித்து வருகிறது. உண்மையில் தயிர் பூரி எப்படி தோன்றியது என்பதற்கு சான்றுகள் எதுவும் இல்லை. கங்கை கரையில் உள்ள மகத நாட்டில் தோன்றி அங்கிருந்து பல மாநிலங்களுக்கு பரவி தற்போது தமிழகத்திலும் இளம் தலைமுறை விரும்பும் சாட் உணவாக மாறியுள்ளது தயிர் பூரி.