Recipes

நெல்லூர் நூல்கோல் சட்னி | Nellore Nookal Chutney In Tamil

நம்ம இன்னைக்கு புதுசா ஒரு காய்கறி வச்சு சட்னி அரைக்க போறோம். இந்த நூல்கோல் காய்கறியை என்ன செய்வது அப்படின்னு தெரியாம இருக்கீங்களா? நீங்க இந்த நூல்கோல் எப்போதும் சாம்பார்ல மட்டும் சேர்த்து செய்றீங்களா? இல்ல பொரியல் கூட பண்ணாம வச்சிருக்கீங்களா? அப்படின்னா நீங்க இந்த நூல்கோள பயன்படுத்தி சுவையான ஒரு சட்னியை செய்து இதை சாதத்துக்கும் பயன்படுத்திக்கலாம் இல்லனா இட்லி தோசைக்கு நல்லாவே பயன்படுத்திக்கலாம்.இந்த நூல் கோலை பயன்படுத்தி சுவையான ஆரோக்கிய மிக்க இந்த சட்னியை எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

நெல்லிக்காய் சிக்கன் குழம்பு | gooseberry chicken curry recipe in tamil

பொதுவாக அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சிக்கனில் பலவித ரெசிபிகள் உள்ளன. அதாவது சிக்கன் பிரியாணி, சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், சிக்கன் 65, சிக்கன் கிரேவி என்று பல விதமான ரெசிபி செய்யலாம். அவற்றில் பிரபலமான குழம்பு வகைகளில் சிக்கன் குழம்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. பொதுவாககேவே சிக்கன் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும். சிக்கன் குழம்பை பல வகைகளில் சமைக்கலாம். குறிப்பாக வட இந்திய மற்றும் தென்னிந்திய சுவைகளில் மிகுந்த மாறுபாடு இருக்கும்.சிக்கன் குழம்பின் ஸ்பெஷல் அது எல்லா உணவுடனும் நல்ல மேச்சிங் கொடுப்பது தான். அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருக்கும் ரெசிபி நெல்லிக்காய் சிக்கன் குழம்பு. ருசியான இந்த நெல்லிக்காய் சிக்கன் குழம்பு சாதம் இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

அவல் மசாலா பராத்தா | poha masala paratha recipe in tamil

பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பராத்தா. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். பராத்தா என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே சொல்லலாம். பராத்தா என்பது மைதாவால் செய்யப்படும் ஒரு வித சுவைமிக்க அருமையான உணவு. பரோட்டாவின் மூலப்பொருட்கள் சில விதங்களில் உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது என சில கருத்துக்களும் முன் வைக்கப்படுகின்றன. அதனால் நாம் இந்த பதிவில் அவல் பயன்படுத்தி எப்படி பராத்தா செய்வதென்று பார்க்கலாம்.

ஆலு கோபி மசாலா | Aloo Gobi Masala Recipe In Tamil

ஆலுகோபி மசாலாவை எப்படி வீட்ல ரொம்பவே சுலபமா அதேசமயம் சுவையா செய்வது எப்படி இந்த பதிவுல பார்க்க இருக்கோம். இந்த ஆலு கோபி மசாலா குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை எல்லாராலும் விருப்பப்பட்டு சாப்பிடபடும் ஒரு உணவு. காய்கறிகளை பிடிக்காத குழந்தைகள் இருந்தா கூட அவங்க இந்த மாதிரி ஆலு கோபி மசாலாவ மிஸ் பண்ணவே மாட்டாங்க. இந்த ஆலு கோபி மசாலாவை பார்த்ததுக்கு அப்புறம் தான் காய்கறிகள எப்படி கலந்து சமைக்கணும் அப்படிங்கறது ஒரு புது வழி கிடைத்தது. வீட்ல ரெண்டு மூணு காய்கறிகள் இருக்கும் ஆனால் அது நம்ம எப்படி செய்றது ரெண்டு காய் செய்தா யாரும் சாப்பிட மாட்டாங்க.

ஆந்திரா தேங்காய் சோறு | Andhra Coconut Rice In Tamil

தேங்காய் சாதத்தை வித்தியாசமா செஞ்சு கொடுக்கும்போது வீட்ல இருக்குற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச மாதிரி இருக்கும். உங்ககிட்ட நிறைய தேங்காய்கள் இருக்கு என்ன பண்றதுன்னு தெரியலையா? டெய்லி சட்னியும் வைக்க முடியாது செய்ற சாப்பாட்டிலும் கலக்க முடியல அப்படின்னு வருத்தப்பட்டா இந்த மாதிரி தேங்காய் சாதம் செஞ்சு கொடுத்தீங்கன்னா எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சுவையான ஆந்திரா கல்யாண வீட்டு தேங்காய் சோறு எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி நாம இப்போ செய்ய போறோம். வாங்க இந்த தேங்காய் சாதம் எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

கருப்பு கொண்டைக்கடலை கேரள கூட்டுகறி | Kerala Black Channa Curry Recipe In Tamil

கேரளாவில் செய்யக்கூடிய  கொண்டைக்கடலை கூட்டுக்கறி ரொம்பவே சுவையாக ருசியாகவும் இருக்கும். இது புட்டு கூட சாப்பிடும் போது அப்படி ஒரு சுவையாஇருக்கும் . இந்த கூட்டு கறியை ரொம்பவே சுலபமாக வீட்ல எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கஇருக்கோம். கேரளாவுல ரொம்பவே ஸ்பெஷலான கருப்பு கொண்டை கடலை கூட்டு கறி விரும்பாதவங்கயாருமே இருக்க மாட்டாங்க. ரொம்பவே சுவையான இந்த கூட்டுக்கறி மேல அப்படி ஒரு ஆசை எல்லாருக்கும் இருக்கும். இந்த சுவையான கொண்டைக்கடலை கேரள கூட்டு கறி எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

கத்திரிக்காய் பூண்டு வறுவல் | Brinjal Garlic Fry In Tamil

கத்திரிக்காய் என்றாலே சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது, ஆனால் இனி கத்திரிக்காய் பூண்டு வறுவல் இப்படி செய்து கொடுத்து பாருங்க அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கக்கூடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. இந்த கத்திரிக்காய் பூண்டு வறுவலை அணைத்து சாத வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். அட்டகாசமாக இருக்கும். இந்த கத்திரிக்காய் பூண்டு வறுவல் எப்படி எளிதாக வீட்டில் செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

செட்டிநாடு பாகற்காய் புளிக்குழம்பு | chettinadu bitter gourd curry recipe in tamil

தமிழ்நாட்டு உணவு முறைகளில் செட்டிநாடு சமையலுக்கு என தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் செட்டிநாடு ஸ்டைலில் சுவையான பாகற்காய் குழம்பு செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம். செட்டிநாடு உணவுகளின் சுவை சைவ பிரியர்களுக்கும் சரி, அசைவ பிரியர்களுக்கும் சரி மிகவும் பிடித்தமான ஒன்று. செட்டிநாடு உணவின் மசாலா நாவை சுண்டி இழுக்கும். செட்டிநாடு சமையல் வகைகள் மிகவும் பிரபலம் அடைந்ததற்கு காரணமே அதன் அபாரமான சுவையும் ஆரோக்கியம் மிக்க உணவுகளுமே. பாகற்காய் பலருக்கும் பிடிக்காத காயாக கருதப்படக் கூடிய ஒன்று. பாகற்காய் என்றாலே பெரும்பாலும் முகம் சுழிப்பவர்கள் தான் அதிகம். ஆனால் ஒரு முறை பாகற்காயை இப்படி குழம்பு வைத்து சாப்பிட்டு பாருங்கள் அதன் பிறகு யாரும் பாகற்காயை ஒதுக்க மாட்டார்கள்.