Recipes

ராயலசீமா உளுந்து பச்சடி | Rayalseema Urad Pachadi

உளுந்து மூட்டு வலி பிரச்சனைகளை சரி செய்வதுக்கும் பயன்படுது. அதுமட்டுமல்லாமல் உளுந்து வந்துரொம்ப ரொம்ப ருசியான ஒரு தானியம். உளுந்துல நிறைய விதமான உணவுகள் செய்யலாம் உளுந்து லட்டு, உளுந்து கஞ்சி, உளுந்து களி இதெல்லாம்செய்து சாப்பிட முடியாதவர்கள் ரொம்ப சுலபமாக உளுந்துல பொடி அப்படி இல்லன்னா இட்லி கூடசாப்பிட்டுக்கலாம். இந்த மாதிரி ஏதாவது ஒரு வகையில உணவுல உளுந்த சேத்துகிறது ரொம்பவேநல்லது தான். இப்போ ராயலசீமாவில் ரொம்பவே ஃபேமஸான உளுந்து பச்சடி எப்படி செய்யலாம்அப்படின்னு தெரிஞ்சுக்கறதுக்கும் இருக்கோம். வாங்க அந்த பச்சடி எப்படி செய்யலாம் அப்படின்னுபார்க்கலாம்.

ஆந்திரா வெண்டைக்காய் வேப்புடு | Andhra Okra Fry Recipe In Tamil

வெண்டைக்காய் சாப்பிடுவதற்கு இப்படி ருசியான வெண்டைக்காய்வேப்புடு எப்படி செய்யறது அப்படின்னு பாக்க இருக்கோம. நிறைய பேருக்கு வெண்டைக்காய்பொரியல் சாப்பிடணும்னு ஆசை இருக்கும் ஆனா அதோட கொழ கொழப்பு தன்மைக்காகவே சாப்பிடாமஇருப்பாங்க. அப்படி கொழகொழப்பு தன்மைக்காக சாப்பிடாமல் இருக்கிறவங்களுக்கு எல்லாம் இந்த வெண்டைக்காய் செய்து கொடுங்க.ரொம்பவே நல்லா விரும்பி சாப்பிடுவார்கள். அந்த கொழகொழப்பு தன்மை எல்லாம் இல்லாமல் ரொம்பசுவையாவும் இருக்கும் . இந்த ஆந்திரா வெண்டைக்காய் வோப்புடு எப்படி செய்யலாமுனு தெரிஞ்சுக்கலாம்வாங்க.

குந்தாபுர் இறால் வறுவல் | Gundapur Prawn Fry In Tamil

குந்தாபுர் இறால் வறுவல் ரொம்பவே ருசியாகவும் எல்லாருக்கும் பிடிச்ச மாதிரியாகவும் இருக்கும். இறால்கள் நல்ல கொழுப்பு அமிலங்களும்  அதிகமாக் கொண்டவை அதனால உடலுக்கு ரொம்பவே அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்குது. முடிஞ்ச அளவுக்கு இந்த இறால் உணவுகளை உணவுல சேர்த்துகிறது ரொம்பவே நல்லது. இந்த இறால்களில் எந்த ஒரு கெட்ட அமிலங்களும் இல்லாததுனால இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்குமே நல்லாவே எல்லாரும் சாப்பிடலாம். சரி இப்படி சுவையான நிறைய சத்துக்கள் உடைய இந்த இறால்ல குந்தாபுர் ஸ்டைல்ல இறால் வறுவல் எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம் வாங்க.

கர்நாடகா வேர்க்கடலை சட்னி | Karnataka peanut Chutney

கர்நாடகாவில் உள்ள ஹம்பி ஹோட்டல்களில்ரொம்பவே ஃபேமஸான இந்த ஹம்பி சட்னி எப்படி செய்வது என்று பார்க்க இருக்கோம். ஹம்பி ஹோட்டல்களில்இந்த வேர்கடலை சட்னி ரொம்பவே ஸ்பெஷல். பொடி தோசைக்கு மட்டும் தான் சாப்பிடலாமாஅப்படின்னா இல்ல எந்த தோசையா இருந்தாலும் சரி இட்லியா இருந்தாலும் சரி இந்த ஹம்பி ஸ்டைலில் வேர்கடலை சட்னி செய்து சாப்பிடும்  போது ரொம்பவே ருசியான சாப்பாடா இருக்கும்.இது காலை நேர உணவுகளுக்கு செய்து கொடுக்கும் பொழுது ரொம்பவே சுலபமாகவும் செய்துவிடலாம்.ரொம்பவே டேஸ்டாவும் இருக்கும். அதனால குழந்தைகளுக்கும் இது ரொம்பவே பிடிக்கும். வீட்டில் இருக்கிற பெரியவங்களுக்கும் இந்த சட்னி ரொம்பவே விருப்பமான சட்னியா இருக்கும்.

வாழைக்காய் சேவ் பொரியல் | Raw Banana Sev Poriyal

வாழைக்காய் வறுவல் அப்படின்னா எல்லாருக்கும்ரொம்ப பிடிக்கும் இருந்தாலும் இந்த சேவ் ரொம்ப வித்தியாசமான இருக்கும். இந்த வாழைக்காய்பொரியல் ரொம்பவே சுவையானது. இந்த மாதிரி வாழைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டீங்கன்னாரொம்ப பிடிக்கும். எப்பவும் வறுவல் சாப்பிடுறவங்களுக்கு இந்த மாதிரி பொரியல் செய்துகொடுக்கும்போது அது வித்தியாசமாகவும் இருக்கும் ரொம்ப விரும்பியும் சாப்பிடுவாங்க.எப்பவுமே காய்கறிகளை இந்த மாதிரி ஒரே மாதிரியான வறுவல் செய்து சாப்பிடுறவங்களுக்குஅந்த காய்கறி வித்தியாசமா ஏதாவது செய்து கொடுத்தோம்னா ரொம்பவே பிடிக்கும். எல்லாருக்குமேஅப்படித்தான்

செவ்வாழை பழம் மில்க் ஷேக் | banana milkshake recipe in tamil

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. அதுவும் குழந்தைகளுக்கு இவற்றை செய்து கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் ஒரு ஆரோக்கியம் நிறைந்த பானம். அதனால் தான் மருத்துவர்கள் நம்மை அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள். அதே நேரம் எடை இழப்பு மற்றும் எடை அதிகரிப்பு இரண்டுக்கும் வாழைப்பழம் நல்ல உதவும். அந்தவகையில், செவ்வாழை பழம் வைத்து மில்க் ஷேக் செய்வது எப்படி என பார்க்கலாம். நமது உடல்நலத்தை பேணி காக்க வாழைப்பழம் உதவுகிறது. தினமும் காலையில் இதை சாப்பிட்டால் உடலுக்கு அதிகமான எனர்ஜியை கொடுக்கும். வாழைப்பழ மில்க் ஷேக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான பானம். சுவை மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும்.

கொங்கு நாட்டு தக்காளி கிரேவி | kongunadu tomato gravy recipe in tamil

வழக்கமாக நாம் தக்காளி வாங்கி ஒரே மாதிரியான தக்காளி குழம்பு அல்லது கிரேவியை தான் பெரும்பாலும் செய்து சாப்பிடுவோம். ஒரே மாதிரியான தக்காளி குழம்பு செய்வதால் வீட்டில் இருப்பவர்களுக்கு போர் அடிக்கும் அல்லவா? நம் தமிழ்நாட்டிலேயே பலவாறு தக்காளி கிரேவி சமைப்பார்கள். அதில் செட்டிநாடு ஸ்டைல் போன்று கொங்கு நாட்டு ஸ்டைலும் ஒன்று. இந்த கொங்கு நாட்டு தக்காளி கிரேவியானது நன்கு காரசாரமாக சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இந்த வாரம் வித்தியாசமான தக்காளி கிரேவி செய்ய நினைத்தால், கொங்கு நாட்டு தக்காளி கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவி வழக்கத்திற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும்.

பீட்ரூட் பிரியாணி | Beetroot biryani recipe in tamil

ஆரோக்கியமாக சாப்பிட விரும்புவரா நீங்கள்? இதோ உங்களுக்காகவே சுவையான சத்தான பீட்ரூட் பிரியாணி ரெசிபி. இதன் சுவை பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் இவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான காய்கறிகளாகும். இவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அதிலும் சிறுபிள்ளைகள் இந்த காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். ஆனால் இவர்களை கட்டாயப்படுத்தி இந்த காய்கறி உணவுகளை சாப்பிட வைக்க முடியாது. எனவே அவர்களுக்கு பிடித்த வகையில் இவற்றை சுவையான உணவுகளாக சமைத்து கொடுத்தால் தானாகவே உங்களிடம் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். பீட்ரூட்டில் இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளதால் உங்கள் உடலை வலுவாக்கி, சருமத்தை பொலிவாக்கும்.