Recipes

வாழைப்பூ கட்லெட் | vaalaipoo cutlet recipe in tamil

தற்போது ஆங்காங்கு மழை பெய்து, காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. பொதுவாக குளிர்ச்சியான காலநிலையில் நல்ல காரசாரமாகவும், சூடாகவும், மொறுமொறுப்பாகவும் சாப்பிடத் தோன்றும். அதுவும் மாலை வேளையில் தான் இப்படியெல்லாம் தோன்றும். நீங்கள் எப்போதும் பஜ்ஜி, வடை, போண்டா என்று தான் செய்து சாப்பிடுவீர்களானால், அடுத்தமுறை கட்லெட் செய்யுங்கள். உங்கள் வீட்டில் உள்ளோர் கட்லெட்டுகளை விரும்பி சாப்பிடுவார்களா? அவர்களுக்கு வழக்கமாக செய்யும் கட்லெட்டுகளை விட, சற்று வித்தியாசமான கட்லெட் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் வாழைப்பூ உள்ளதா? அப்படியெனில் வாழைப்பூவைக் கொண்டு கட்லெட் செய்து கொடுங்கள். அதுவும் வீட்டில் வாழைப்பூ அதிகம் இருந்தால், அவற்றைக் கொண்டு வாழைப்பூ கட்லெட்டை செய்யுங்கள்.

சின்ன வெங்காய புதினா ரசம் | Small Onion Pudhina Rasam

ரசம் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் அதை சுவையாக வைப்பது மிகவும் கடினம். ரசத்தை பக்குவமாக வைத்து இறக்கினால் தான் சுவையாக இருக்கும். புதினா ரசம் என்பது குளிர் அல்லது மழை நாளில் உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் மசாலாப் பொருட்களுடன் கூடிய புளி சார்ந்த தென்னிந்திய பாணி குழம்பு ஆகும். வெறும் சாதத்துடன் புதினா ரசம் மிகவும் நன்றாக இருக்கும், மேலும் செய்வது மிகவும் எளிது. வீட்டு சமையல் அறையில் இல்லாத மருத்துவம், வேறு எங்கும் இல்லை. சின்ன வெங்காயம் மற்றும் புதினா வைத்து எளிமையான அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான ரசம் எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம்.

குதிரைவாலி சாம்பார் சாதம் | kuthiraivali sambar sadam recipe in tamil

நாம் சாப்பிடும் சாத வகைகளில் பல வகையான சாதங்கள் இருந்தாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சாதம் எப்பொழுது கேட்டாலும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடும் சாதம் என்றால் அது இந்த சாம்பார் சாதம் மட்டும்தான். சாம்பார் சாதம் என்றாலே பசி எடுக்க ஆரம்பிக்கும். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான மத்திய உணவு சாம்பார் சாதம். புல்லுச்சாமை அல்லது சாமை என்று அழைக்கப்படும் இந்த குதிரைவாலி அரிசி ஒரு புன்செய் பயிராகும். இந்த அற்புதமான குதிரைவாலி அரிசியில் கால்சியம், மணிச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை இவற்றில் அதிகமாகவே உள்ளன. அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு குதிரைவாலி அரிசியில் சாதம் செய்து சாப்பிட்டு வந்தால் அவை அண்டாது.

கோதுமை வெஜ் மோமோஸ் | Wheat veg momos recipe in tamil

உங்கள் வீட்டில் உள்ளோர் மோமோஸை விரும்பி சாப்பிடுவார்களா? இதுவரை நீங்கள் மோமோஸை கடைகளில் தான் வாங்கி சுவைத்திருக்கிறீர்களா? அப்படியானால் இன்று அந்த கோதுமை மோமோஸை வீட்டிலேயே செய்யுங்கள். அதுவும் நீங்கள் முதன் முதலாக வீட்டில் மோமோஸ் செய்பவரானால், கோதுமை வெஜ் மோமோஸை முதலில் செய்து பாருங்கள். மோமோஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. இதை மதிய உணவு உண்பதற்கு முன் starters ஆகவும் பரிமாறுகிறார்கள். உணவு பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இதற்கென ஒரு தனி மவுசு உண்டு. மோமோஸ் செய்யப்படும் ரெஸ்டாரன்ட்களில் மாலை நேரங்களில் கூட்டம் நிரம்பி வழிவதை நம்மால் காண முடியும். கோதுமை வெஜ் மோமோஸ் செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது ஆரோக்கியமானதும் கூட. வெஜ் மோமோஸில் உங்களுக்கு பிடித்த எந்த காய்கறிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.