வெந்தயக் கீரை கிரேவி | Methi Gravy Recipe In Tamil
ஒரே ஒரு விசில் வைத்தால் போதும், குக்கரில்வேலை முடிந்தது. சட்டுன்னு செய்திடலாம். வெந்தயக் கீரையில் ஏ வைட்டமின் சக்தியும்,சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் இதை சாப்பிடும் போது மாரடைப்பு, கண் பார்வை குறைபாடு,வாதம், சொறி சிரங்கு, இரத்த சோகை ஆகியவை குணமடையும். வெந்தயக் கீரையின் தண்டை அரைத்து,மோருடன் குடித்துவர, வயிறு தொடர்பானப் பிரச்னைகள் தீரும்.சப்பாத்தி, ரொட்டி, நான்,வெரைட்டி சாதத்திற்கு பக்காவான சைடிஷ் இது. தேவைப்பட்டால் நீங்கள் இட்லி தோசைக்கும்தொட்டு சாப்பிட்டுக்கொள்ளலாம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.