Recipes

பச்சைப் பட்டாணி கிரேவி | Green Peas Gravy Recipe In Tamil

சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்குமசாலாவை தவிர்த்து விட்டு, இந்த சுவையான பச்சை பட்டாணி கிரேவியை தாபா ஸ்டைலில் செய்துபாருங்கள்.பச்சை பட்டாணியில் மாங்கனீஸ், இரும்புச் சத்து, போலேட் மற்றும் தயமின் போன்றஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையைகுறைக்க பயன்படுகிறது. பச்சை பட்டாணி சீரண சக்திக்கு உதவுகிறது. வீட்டில் உள்ளவர்கள்இரண்டு சப்பாத்தி சாப்பிடுவதற்கு பதிலாக நான்கு சப்பாத்திகளாக சாப்பிடுவார்கள். அந்தஅளவிற்கு இதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்தபதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

புதினா சட்னி | Mint Chutney Recipe In Tamil

சாட் ஐட்டங்கள் மட்டுமல்லாமல் நம் வீட்டில்மாலையில் பஜ்ஜி, போண்டாவுடன் தொட்டு சாப்பிடவும் இது அவ்வளவு டேஸ்ட்டியாக இருக்கும்.சாதாரணமாக பிரட் சாண்ட்விச், பர்கர் செய்யும் போது கூட இந்த சட்னி செய்து கொடுத்தால்தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும். மேலும் இதை தந்தூரி, கிரில் சிக்கன், டிக்கா, பிரெஞ்ச்ப்ரை என்று நீங்கள் விரும்பும் சாட் ஐட்டங்களில் விரும்பியபடி தொட்டு சாப்பிடலாம்.இதை கடையில் வாங்கி சாப்பிட்டவர்கள், இனி ஒரு முறை வீட்டிலும் செய்து பாருங்கள், நீங்களேரசித்து ருசித்து சாப்பிடுவீங்க! வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

வாழைப்பழ கேக் | banana cake recipe in tamil

கேக் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது. இனிமேல் குழந்தைகள் அப்படி அடம்பிடித்தால் நீங்கள் பேக்கரிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிட்லேயே வாழைப்பழ கேக் செய்து அசத்துங்கள். நம் அனைவருக்குமே வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்திருக்கும், தொடர்ச்சியாக மதிய உணவிற்கு பிறகு வாழைப்பழத்தினை சாப்பிடுவதனால் வயிற்று பகுதிகளில் உள்ள குடற்புழுக்களை நீக்கி வயிற்று பகுதி சுத்தப்படுத்தபடும். இந்த பழத்தில் அதிக வைட்டமின் சத்துக்கள் இருப்பதால் கண்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கிறது.

பருப்பு உருண்டை மோர்க்குழம்பு | paruppu urundai morkulambu recipe in tamil

மோர் குழம்பு மிகவும் பிரபலமான தென்னிந்திய உணவாகும், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் ஏராளமான உள்ளூர் வேறுபாடுகளுடன். ஆனால் பருப்பு உருண்டை மோர்க்குழம்பு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காரைக்குடி சமையல் வகை. காரைக்குடி மட்டுமன்றி தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் பருப்பு உருண்டை மோர்க்குழம்பு புகழ்பெற்று விளங்குகிறது. பருப்பு உருண்டை மோர்க்குழம்பு பாரம்பரிய சுவைமிக்க குழம்பு வகை. நாம் மோர்க் குழம்பு அடிக்கடி சாப்பிட்டிருப்போம். அந்த மோர்க் குழம்பில் பருப்பு உருண்டை சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் அருமையாக இருக்கும். இதனை செய்வது மிகவும் எளிதுதான். குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருள் என்றால் அது மோர்க் குழம்பு. சாம்பார், ரசம், புளிக்குழம்பு என ஒரேபோன்ற குழம்பு வைத்து சலித்துப்போனவர்களுக்கான சூப்பர் ஆப்ஷன், மோர்க்குழம்பு.

கலாக்காய் ஊறுகாய் | kalakkai pickle recipe in tamil

அடிக்கிற வெயிலுக்கு கண்டிப்பா நம் வீடுகளில் வாரத்திற்கு 2 முறை தயிர் சாதம், மோர் சாதம் செய்வது நிச்சயம். அதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய் சூப்பரான காமினேஷன். ஒவ்வொரு முறையும் கடையில் வாங்கினால் சரியா வருமா? அதற்கு மொத்தமாக ஒரே டைமில் 2 மாதத்துக்கு தாங்கும் அளவுக்கு சூப்பரான கலாக்காய் ஊறுகாய் வீட்டிலே செய்து வைத்துக் கொள்ளலாம். தேவையான நேரத்தில் எடுத்து யூஸ் பண்ணிக்கலாம். அதிலும் கடைகளில் விற்கப்படும் ஊறுக்காய் போல் அல்ல, கல்யாண வீட்டு பந்தியில் பரிமாறுக்கப்படும் தொக்கு போலான ஊறுகாய். ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக இல்லாதிருந்தாலும் கூட ஊறுகாய் எப்போதும் கிடைக்கிறது. அந்த வகையில் இன்று கலாக்காயை வைத்து சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

வெஜ் சீஸ் பாஸ்தா | veg cheese pasta recipe in tamil

தினமும் இட்லி, தோசை, பூரி,பொங்கல் என செய்து அலுத்து விட்டதா? உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்னு யோசித்தால் அப்போ உங்களுக்கான பதிவா தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா பிடிக்குமா?அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு சீஸ் பாஸ்தா செய்து கொடுங்கள். மிக விரைவாக இது செய்யப்படுவதால் சீக்கிரமாக செய்யப்படும் ஒரு உணவு வகையாக பாஸ்தா இருக்கிறது. நம்மில் பலருக்கு இத்தாலிய உணவு என்றாலே பிசா தான் ஞாபகத்திற்கும் வரும். இங்கே நாம் பிசாவை விட செய்வதற்கு எளிதான, அதே நேரம் சுவையான வெஜ் சீஸ் பாஸ்தா எப்படி செய்வது என்று பார்ப்போம். மாலையில் வீட்டிற்கு போனதும், பசியை ஆரோக்கியமான முறையில் போக்க வேண்டுமானால், மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடுவதற்கு ஏற்றவாறான பாஸ்தாவை செய்து சாப்பிடுங்கள். அதிலும் பாஸ்தாவை செய்ய ஆரம்பிக்கும் போது, அதில் காய்கறிகள் மற்றும் சீஸ் சேர்த்து செய்தால், பாஸ்தா இன்னும் அருமையாக இருக்கும்.

தஞ்சாவூர் சாம்பார் | Tanjore Sambar Recipe In Tamil

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான சுவைகளில் அங்கு சமைக்கப்படும் உணவுகள் இருக்கும். இவ்வாறு தான் ஒவ்வொருஊரிலும் ஒவ்வொரு விதமான உணவுகள் அந்த ஊருக்கு என்று பெயர் போனதாக இருக்கும். சாம்பார் என்பது வாரத்திற்குஇரண்டு முறையாவது அனைத்து வீடுகளிலும் செய்யப்படும் ஒரு குழம்பு வகை ஆகும். இதனை இட்லி,தோசைக்கு தொட்டுக் கொள்ளவும், சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் என அனைவரும் விருப்பமாகசாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு கூட காரம் சேர்க்காமல் சாம்பாரை தான் உணவில் சேர்த்துக்கொடுப்பார்கள் அப்படி தஞ்சாவூர் சாம்பார் என்பது அனைவர்க்கும் விருப்பமான ஒன்று. அவ்வாறு தஞ்சாவூர் ஸ்பெஷல்சாம்பார் செய்வது எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.