புடலங்காய் விதை சட்னி | snake gourd seed chutney recipe in tamil
இதுவரை நீங்கள் எத்தனையோ சட்னிகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் புடலங்காய் விதைக் கொண்டு சட்னி செய்து சாப்பிட்டுள்ளீர்களா? ஆம், புடலங்காய் விதை கொண்டு சட்னி செய்யலாம். இந்த புடலங்காய் விதை சட்னி இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் தொற்று உள்ளவர்கள் உட்கொள்வது நல்லது. இது தவிர அசிடிட்டி, மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பவர்களும் சாப்பிடலாம். இந்த சட்னிக்கு அடிப்படையில் பூண்டு, புடலங்காய் விதை, கொத்தமல்லி, கருவேப்பிலை போன்றவை தேவைப்படுகிறது. இவை எளிதாக செய்யக்கூடியது மற்றும் உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் ஊட்டச்சத்து குணங்களும் அதில் நிறைந்துள்ளன. நாம் தினமும் சாப்பிடும் உணவு முறையை சரியாக கையாண்டால் எந்த நோயில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.