Recipes

தேங்காய்ப்பால் புலாவ் | coconut milk pulao recipe in tamil

புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லவும் சிறந்த மதிய உணவாக திகழ்கின்றன. தேங்காய்ப்பால் புலாவ் மிகவும் சுவையான மதிய உணவு வகை. இது டிபன் பாக்ஸ்கும் ஏற்ற உணவாகும், விரைவில் செய்யக்கூடியது, காய்கறிகள் மற்றும் தேங்காய் பால் சேர்ப்பதால் வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பலாகாய் பக்கோடா | palakkai pakoda recipe in tamil

பலாக்காயில் வைட்டமின் ஏ,பி,சி மற்றும் இரும்புசத்து, பொட்டாசியம், கால்சியம், புரதம் போன்ற சத்துகளும் உயர்தரமான மாவுச் சத்து மற்றும் நார்ச் சத்தும் உள்ளது. இது விரைவாக மற்றும் சுலபமாக செய்யக் கூடியது. மழைக்காலத்தில் சூடான மிருதுவான பக்கோடா என்றால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடாவை சுவைப்பது பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது. ஒரு சில பொருள்களை வைத்துக்கொண்டே சுலபமாகத் தயாரித்துவிடக்கூடிய பக்கோடாவால் குடும்பத்தினரையும் உறவினர்களையும் மகிழ்ச்சியடைய செய்ய முடியும். பக்கோடாவை கடையில் வாங்குவதற்கு பதிலாக ஆரோக்கியமான முறையில், வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்.

மீல் மேக்கர் குருமா | meal maker kurma recipe in tamil

இந்நாள் குழந்தைகளிடம் தங்களுக்கு பிடித்த உணவு என்னவென்று கேட்டால் நூடுல்ஸ், பீட்சா, பாஸ்தா, குல்ச்சா என்று ஒரு பெரிய பட்டியலே அடுக்குவார்கள். ஆனால், 80ஸ் கிட்ஸ் & 90ஸ் கிட்ஸிடம் பிடித்தமான உணவு பற்றிக் கேட்டால் முதலில் சொல்வது சப்பாத்தியும் மீல் மேக்கர் குருமாவும் தான். பெரும்பாலும் வார இறுதி நாட்களில் நம் பலரது வீடுகளிலும் அம்மாக்கள் ஒரு காரணத்தோடு இந்த மீல் மேக்கர் குருமா, சப்பாத்தி செய்வார்கள். எல்லோருக்கும் மீல் மேக்கர் பிடிக்கும் என்று கூறி விட முடியாது ஆனால் சோயா பீனிலிருந்து உருவாகக்கூடிய இந்த மீல்மேக்கர் வெஜ் பிரியாணி போன்றவற்றில் அதிகம் சேர்க்கப்படுவது உண்டு. அது போல இதை வைத்து 65, தொக்கு, குருமா, கிரேவி என்று பல விதங்களில் அசத்தலாக செய்து ரசித்து சாப்பிடலாம்.

குடைமிளகாய் மசாலா தோசை | Capsicum Masala Dosai

நாம் செய்யக்கூடிய சமையல் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். நாவிற்கு சுவை கொண்டதாகவும் இருக்க வேண்டும். சமைப்பதற்கு சுலபமாகவும் இருக்க வேண்டும். காலை நேரத்தில் அவசர அவசரமாகச் லஞ்ச் பேக் செய்யும் போதுகுழந்தைகளுக்கு, கணவருக்கு ஹெல்தியான சுவையான ஒரு ரெசிபி சமைக்க வேண்டும் என்று முடிவுசெய்து விட்டால், இந்த குடைமிளகாய் மசாலா  செய்து அசத்துங்கள். தோசை உள்ளே இந்த வைத்து சுருட்டி குடைமிளகாய் மசாலா தோசை செய்து கொடுக்கலாம்.தோசையில் வைத்து சுருட்டி கொடுக்கலாம். சாம்பார் சாதம் ரசம் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளசைட் டிஷ் ஆகவும் கொடுக்கலாம். நம்முடைய விருப்பம்தான். சிம்பிளான இன்ட்ரஸ்டிங்கானஹெல்தியான இந்த ரெசிபியை தெரிந்து கொள்வோமா.

பிரெட் சில்லி | bread chilli recipe in tamil

பிரெட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரெட்டில் சுவையான ரெசிபிகளை உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை அசத்தலாம். சீன உணவுகள் இந்திய சுவையில் செய்து சாப்பிடும்போது அதன் ருசி அலாதியானது. ஃபிரைடு ரைஸ் தொடங்கி சில்லி சிக்கன் வரை எதுவும் நாவூற வைக்கும். அந்த வகையில் பிரெட் துண்டுகளை பயன்படுத்தி பிரெட் சில்லி செய்து பார்க்கலாம். விதவிதமான டிபன் வகைகள் செய்து கொடுத்தாலும், இந்த பிரட் ரெசிபிக்கு ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. இனிப்பும், காரமும் கலந்த இந்த பிரட் சில்லி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வண்ணம் அமைய இருக்கிறது.

செட்டிநாடு முட்டை குழம்பு | chettinadu egg curry recipe in tamil

முட்டை அப்படினாலே வந்து அது ஒரு நல்ல ஒரு சத்துள்ள ஒரு உணவு தான். அதுல வந்து நிறைய புரதச்சத்து இருக்கு. இன்றைக்கு இந்த முட்டையில தான் நம்ம ஸ்பெஷலா ஒரு குழம்பு வைக்கப் போறோம் அப்படி என்ன செய்ய போறோம் அப்படினா செட்டிநாடு முட்டை குழம்பு மிகவும் சுவையாக எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளபோகிறோம். பொதுவாக நம் வீட்டில் முட்டை அடை குழம்பு, முட்டை உடைத்து ஊத்திய குழம்பு என்று சாப்பிட்டு இருந்திருப்போம். ஆனால் இந்த முட்டை குழம்பை ஒரு முறை செய்தால் போதும் திரும்ப திரும்ப சாப்பிட வேண்டும் என்று தோன்றும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது போல மிகவும் சுவையாக எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம். இப்படி சுவையான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.

முடகத்தான் கீரை சாதம் | Mudakathan keerai Rice recipe in tamil

கீரையின் பயன்கள் பற்றி நமக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. கண் பார்வைக்கு மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது கீரைதான். மிக எளிதாக நம் வீட்டுப் பக்கத்தில், காய்கறிக் கடையில் அல்லது வீட்டுத் தோட்டத்தில் கீரையைப் பெற முடியும். கீரை உணவுகள் சத்தானது மட்டுமல்ல, டேஸ்டானதும் கூட. கீரையை கூட்டாகவோ, ரசமாகவோ செய்து பயன்படுத்த முடியும். அதேபோல கீரை சாதமாகவும் செய்து சாப்பிடலாம். கீரை சாதம் அல்லது க்ரீன் ரைஸ் என்றதுமே, பலரும் புதினா சாதம், கறிவேப்பிலை சாதம் அல்லது வெந்தயக்கீரை சாதம் செய்துவிடுவார்கள். இந்த மூன்றைவிட முடக்கத்தான் கீரையின் ருசி, குழந்தைகளின் நாவுக்கு ரொம்ப பிடிக்கும். தவிர, முடக்கத்தான் கீரை குடலுக்கும், இதயத்துக்கும் நல்லது.