Recipes

இறால் காலிஃப்ளவர் கறி | Prawn Cauliflower Curry In Tamil

இறால் காலிஃப்ளவர் கறி சுவையானது, முதல் வாய் சுவைக்கும் பொழுதுஒவ்வொரு துண்டுகளும் நேர்த்தியான சுவையுடன் இருக்கும். தவிர, நறுமணமுள்ள மசாலா கலவை,சரியான பக்குவதின் இந்த செய்முறையில் செய்தல் அருமையான சுவையை தரும். இறால் மற்றும் காலிஃபிளவர் கறிசுவையானது மட்டுமல்ல , ஆரோக்கியமானதும் கூட. நீங்கள் மசாலா பிரியர்களாக இருந்தாலும்சரி அல்லது அசைவ பிரியராக இருந்தாலும் சரி, இந்த ரெசிபி நிச்சயம் ஈர்க்கும். இது நம்பமுடியாதசுவையானது மட்டுமல்ல, இது தயாரிப்பதற்கு மிகவும் சுலபம். சுவை உணர்வுகளைத் தூண்டும்மற்றும் உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் மேலும் கேட்க வைக்கும்.வாங்க இதை எப்படி செய்வதுஎன்று பார்ப்போம்

கேரளா அவியல் | Kerala style aviyal recipe in tamil

அவியல் கேரளாவின் மிகவும் புகழ்பெற்ற உணவு வகை. கேரளா மட்டுமின்றி அது தென்னிந்தியா முழுவதும் செய்யப்படும் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு. தென்னிந்திய உணவுகளில் கேரளா உணவுகள் தனித்துவமான சுவை கொண்டவையாக உள்ளன. இந்த உணவுகளில் அவியில் மிகவும் புகழ் பெற்ற சைடிஷ்ஷாக உள்ளது. இந்த கேரளா ஸ்டைல் அவியல் தயார் செய்வதில் சிலர் சிரம படுகின்றனர். வீட்டில் இருந்தே சுவையான கேரளா ஸ்டைலில் அவியல் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். சிலருக்கு இந்த ரெசிபி செய்ய தெரியாமல் கூட இருக்கலாம். அந்த கவலையை போக்க இந்த பதிவு உங்களுக்கு உதவும். அவியல் என்பது பல காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவை நிறைந்த உணவாகும். இதில் சேர்க்கப்படும் பச்சை மிளகாய், தேங்காய், தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் அவியலுக்கு தனித்துவமான சுவையையும், மணத்தையும் கொடுக்கின்றன.

சேலம் எம்டி சால்னா | Salem plain salna recipe in tamil

ரோட்டு கடைகளில், பரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள கொடுக்கும் சால்னாவில் இருக்கும் சுவை, என்னதான் வீட்டில் முயற்சி செய்தாலும் வராது. அதே சுவையில், அந்த சால்னா குருமாவை நம் வீட்டில் வைத்தால், எப்படி இருக்கும்? நமக்கும் அந்த ரகசிய டிப்ஸ் தெரிந்தால், நம் வீட்டிலேம் செய்து அசத்தலாம் அல்லவா? அந்த வகையில் இந்த பதிவில் சேலம் ஸ்பெஷல் எம்டி சால்னா செய்வது குறித்து பார்க்கலாம். சால்னா பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, முட்டை பணியாரம், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். கடைகளில் விதவிதமான சால்னா வகைகள் கிடைக்கும், கெட்டி சால்னா, எம்டி சால்னா, வெஜ் சால்னா, சிக்கன் சால்னா, இவற்றைப் போலவே ரோட்டோர கடைகளில் கிடைக்கும் எம்டி சால்னாவின் சுவை அலாதியாக இருக்கும், இதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம்.

ஹைதராபாத் நிஜாமி மீன் வறுவல் | Hyderabad Fish Fry Recipe In Tamil

மீன் வறுவல்களை விதவிதமா அவங்களுக்கு செய்து கொடுக்கும்போது மனசு சந்தோஷப்படும். மீன்ல இருக்கிற நல்லசத்துக்கள் அதிகமாகவே கிடைக்கும். கடல் உணவுகள் என்று நம்ப சொல்லும் போது நம்ம முதலிடம்கொடுக்கிறது மீனுக்கு தான். ஆகையால் அப்படி மீன் நமக்கு அதிக அளவு நல்ல கொழுப்பு உள்ளமீன்களாக இருக்கு. அதனால இதயத்துக்கும் நல்லது பண்ணுது. அது உடலுக்கு எந்த கேடும் மீன்களாலஏற்படறது கிடையாது. அதனால மீன்களை அதிக அளவு உணவில் சேர்த்துகிறதாஷ எந்த ஒரு பாதிப்பும்கிடையாது. சரி வாங்க இந்த ஹைதராபாத் ஸ்டைல் நிஜாமி மீன் வறுவல் எப்படி செய்வது என்றுதெரிந்து கொள்ளலாம்.

இஞ்சி புளி சிக்கன் | Ginger Tamarind Chicken In Tamil

இஞ்சி புளி சிக்கன் குழந்தைகளுக்கு பெரியவர்கள் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். காரணம் இதில இருக்கிற புளிப்பு சுவை சிலருக்கு காரமான சிக்கன் பிடிக்கும் ஆனால் இது புளிப்பு இனிப்பு காரம் அப்படினு எல்லாமே கலந்த மாதிரியான ஒரு டேஸ்ட் இருக்கப் போகிறது. அதனால சிக்கன் எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும் நிறைய விரும்பி சாப்பிடுவாங்க. சில உணவுகளை பார்த்தாலே நாக்குல நீர் வடியும் இல்லையா அந்த மாதிரி இந்த இஞ்சி புளி சிக்கன் சாப்பிடனும்னு நினைக்கும் போதே நாக்கில் எச்சில் வரும். சரி வாங்க எப்படி இந்த இஞ்சி புளி சிக்கன் செய்யறது அப்படினு தெரிஞ்சிக்கலாம்.

பஞ்சாபி வெண்டைக்காய் மசாலா | punjabi vendaikkai masala Recipe in Tamil

வெண்டைக்காய் என்றாலே வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ஐய்யய வழவழ கொழகொழன்னு என்று மூஞ்சியை தூக்குவார்கள். ஆனால் வெண்டைக்காயில் உள்ள நன்மைகள் ஏராளம். வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும். வெண்டைக்காயின் நன்மைகளின் சில தான். இன்னும் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். ஒரே மாதிரியான வெண்டைக்காய் பொரியல், சாம்பார் என்ற உணவை சாப்பிட்டு அலுத்துக் விடுகிறோம். நம் வாழ்வில் எப்படி மசாலா தேவைப்படுகிறதோ, அதே போல சுவையிலும் மசாலா தேவை. நீங்கள் அனைவரும் வெண்டைக்காய் வறுவல் சாப்பிட்டிருப்பீர்கள். இந்த பஞ்சாபி வெண்டைக்காய் மசாலா ஒருமுறை செய்து பாருங்கள்.

உருளைக்கிழங்கு பட்டாணி குருமா | potato peas kuruma recipe in tamil‌

சப்பாத்தி, பூரி, தோசை, மற்றும் இட்லிக்கு அசத்தலான சைடிஷ் குருமா தான். அதிலும் குறிப்பாக சப்பாத்தி குருமா காம்பினேஷனின் ருசி தனி தான். பலரையும் கவர்ந்த இந்த காம்பினேஷன் ஓட்டல்களில் மட்டுமல்ல பெரும்பாலான இல்லத்திலும் காலை நேர டிஃபன் ஆகவோ அல்லது இரவு நேரங்களில் சமைத்து சுவைக்கின்றனர். சப்பாத்திக்கு குருமா காம்பினேஷன் எனில் அதைவிட சிறந்த உணவு இருக்க முடியாது. குருமா தானே அதில் என்ன ஸ்பெஷல் என்று கேட்கலாம். அதுதான் இந்த ரெசிபியின் தனித்துவம். இந்த குருமாவில் தேங்காய் சேர்த்து அருமையான பக்குவத்தில் செய்வதுதான் இதன் ஸ்பெஷல். குருமா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குருமா செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள். அப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று தான் இந்த உருளைக்கிழங்கு பட்டாணி குருமா.

பன்னீர் மசாலா லாலிபாப் | Paneer Masala Lollypop Recipe In Tamil

பன்னீர் மசாலா பாக்கெட் லாலிபாப் எப்படி சுவையா செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். நார்மலா ஐஸ்கிரீம் என்றால் ரொம்பவே எல்லாருக்கும் பிடிக்கும் அதே ஐஸ்கிரீம் வடிவத்தில் நம்ம கார உணவுகள் செய்து கொடுக்கும் போது வித்தியாசம் இருக்கு அப்படின்னு சொல்லிட்டு குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இந்த உணவு பெரியவர்களுக்கும் ரொம்பவே பிடித்தமான ஒரு உணவாக இருக்கும். இது பன்னீர்ல செய்வதுனால ரொம்பவே ஆரோக்கியமான ஒரு உணவாகவும் இருக்கும். சரி வாங்க இந்த பன்னீர் மசாலா பாக்கெட்லாலிபாப் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.