கேழ்வரகு கேக் | Finger millet cake recipe in tamil
கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள், நிச்சயதார்த்தம், ஆண்டுவிழா போன்ற தினங்களுக்கும், சிலவகையான பண்டிகை நாட்கள் அதாவது கிருத்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களுக்கும் மக்கள் கேக்கினை வெட்டி மகிழ்கின்றனர். இந்த கேக் ரெசிபிள் பல வகைகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கேக் பிடிக்கும். இந்த கேக்கினை வீட்டில் செய்து சாப்பிட இப்போதேல்லாம் பலர் விரும்புகின்றனர். அந்த வகையில் தங்கள் வீட்டிலேயே கேழ்வரகு கேக் செய்ய இந்த பதிவு தங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அந்த வகையில் இது போன்ற நேரங்களில் வீட்டிலிருக்கும் அனைவருக்கும் ஆரோக்கியம் தரும் வகையில் வீட்டிலுள்ள தானியங்களை வைத்து ஸ்நாக்ஸ் செய்யலாம். சிறுதானிய கேக்குகளில் ஒன்றான கேழ்வரகு கேக் செய்து கொடுத்தால் குழந்தைகளின் வளர்ச்சி அதிகரிக்கும்.