Recipes

ரச சாதம் | Rasam Sadam Recipe In Tamil

5 மிளகு இருந்தால் எதிரி வீட்டில் கூட விருந்துஉண்ணலாம் என்பது பழமொழி. இவ்வாறு மிளகிற்க்கு அவ்வளவு அற்புதமான சக்தி இருக்கிறது.விஷத்தை முறிக்கும் திறன் பெற்றது இந்த மிளகு. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும்சளி பிடித்தாலும் மிளகு ரசம் வைத்து கொடுத்தால் போதும். சளி இருந்த இடம் தெரியாமல்போய் விடும். உடல் சோர்வாக இருந்தாலும் அல்லது காய்ச்சலாக இருந்தாலும், சளிப் பிடித்திருந்தாலும்மிளகு சேர்த்து ரசம் வைத்து சாதம் கொடுப்பது தான் அனைவரது வீட்டிலும் வழக்கம். அப்படிகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் இந்த ரசம் சாதத்தை கலவை உணவாகவும்செய்திட முடியும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்வோம்.

முட்டை சேமியா | Egg Semiya Recipe in Tamil

உப்புமா இந்தியா முழுவதும் செய்யப்படும் ஒரு பிரபலமான உணவு. உப்புமாவில் பல வகை உண்டு. அதில் ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா, அவல் உப்புமா, அரிசி உப்புமா, மற்றும் சேமியா உப்புமா குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இங்கு காண இருப்பது முட்டை சேமியா உப்புமா. இதை பெரும்பாலும் காலை நேர டிஃபனாகவோ அல்லது மாலை நேர டிஃபனாகவோ தான் பலரும் சுவைக்கிறார்கள். இவை பெரும்பாலும் சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் தான் உண்ணப்படுகிறது. பலருக்கும் உப்புமா பிடிக்காததற்கு முக்கிய காரணம் அதன் சுவையே. எனவே அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் உப்புமாவை கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சமைக்கலாம். உப்புமாவை பிடிக்காது என்று கூறியவர்கள் கூட நிச்சயமாக அடிக்கடி செய்து தருமாறு விரும்பி சாப்பிடுவார்கள்.

செட்டிநாடு மட்டன் குழம்பு | chettinadu mutton kulambu recipe in tamil

செட்டிநாடு சமையல் வகைகள் மிகவும் பிரபலம் அடைந்ததற்கு காரணமே அதன் அபாரமான சுவையும் ஆரோக்கியம் மிக்க உணவுகளுமே. அந்த அளவிற்கு பெயர் போனது செட்டிநாடு மட்டன் குழம்பு. செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது என்பது பலருக்கும் கடினமான ஒன்றாகும். காரணம் அது மிகவும் துல்லியமான செய்முறை மற்றும் பிரத்யேகமான மசாலா தூள் கொண்டது. ஆனால் அதன் சுவைக்கு வேறு எதுவும் ஈடு இணை இல்லை எனலாம். பல வகையான மசாலாப் பொருட்களை ஃபிரஷாக அரைத்து சமையலில் பயன்படுத்துவது இந்த உணவின் தனித்துவம். எப்போதும் போன்று மட்டனை குழம்பு வைக்காமல், செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்து சுவையுங்கள். இப்போது செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். செட்டிநாடு குழம்பை எல்லோரும் கடைகளில் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால், அதை நம் வீட்டிலேயே செய்து பார்க்கலாம்.

நாட்டு கோழி மிளகு வறுவல் | Naattukozhi milagu varuval Recipe in Tamil

சிக்கனை விரும்பாத அசைவ பிரியர்கள் இல்லை என்று தான் கூற வேண்டும். ஆம் பிராய்லர் கோழிகளை விட நாட்டுக்கோழிகளே சிறந்தது என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருந்தாலும், பிராய்லர் கோழிகளை வாங்குவதற்கே போட்டி போட்டு நிற்கின்றனர். சிக்கனில் பல வெரைட்டிகள் உள்ளன. அதிலும் பொதுவாக அசைவ உணவுகள் என்றாலே காரம் தான் முக்கியம். அவ்வாறு நன்கு காரசாரமாக இருக்கும் ஒரு சிக்கன் ரெசிபியெனில் அது சிக்கன் மிளகு வறுவல் தான். இந்த மிளகு சிக்கன் வறுவல் சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் சுலபமான செய்முறையைக் கொண்டது. சிலர் காரசாரமாக சாப்பிட விரும்புவார்கள். இன்று சிக்கனில், மிளகு சேர்த்து காரசாரமான வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பூசணிக்காய் அல்வா | Pumpkin Halwa Recipe In Tamil

கல்யாண வீட்டு இனிக்கிற தளதள பூசணிக்காய் அல்வாவீட்டிலேயே அருமையாக செய்யலாம். அல்வா என்றதுமே பலருக்கும் ஞாபகத்திற்கு வருவது திருநெல்வேலிஅல்வா தான். திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா என்றால் தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.அந்த அளவிற்கு இந்த அல்வா ஃபேமஸ். அதே போல் தான் பூசணிக்காயை வைத்து செய்யும் இந்தஅல்வாவும் இதன் சுவை பிரமாதமாக இருக்கும். அது மட்டும் இன்றி மற்ற அல்வாக்களை போல்இல்லாமல், இதை செய்வது மிக மிக சுலபம் செலவும் மிகக் குறைவு, நேரமும் குறைவு இப்படிஒரு சுலபமான , சுவையான பூசணிக்காய் அல்வா ரெசிபியை எப்படி செய்வது தெரிந்து கொள்ள தான்இந்த பதிவு.

ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி | Strawberry Lassi Recipe In Tamil

தயிர் என்றாலே பிடிக்காதவர்கள் என்று எவரும் இருக்க மாட்டார்கள், உடம்புக்கு தேவையான கால்சியம் சத்தையும் கொடுக்கிறது.எனவே தினமும் இரண்டு ஸ்பூன் தயிரையாவது அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். தயிருடன் சர்க்கரை சேர்த்து குடிப்பது தான் லஸ்ஸி எனப்படும். அவ்வாறு தயிரை அப்படியே சாப்பிடும்பொழுது ருசியாக இருக்கும். சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் சொல்லவா வேண்டும்,அவ்வளவு அற்புதமான சுவையில் இருக்கும். லஸ்ஸி பிடிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.வாருங்கள் இந்த லஸ்ஸியை ஸ்ட்ராபெர்ரி சேர்த்து ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி செய்ய முடியும் என்பதைபற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.