Recipes

தக்காளி அவல் உப்புமா | Tomato Flattened Rice Upma

உப்புமாவுல ரொம்ப ரொம்ப குறைவான கலோரி உள்ள பொருட்களை மட்டும் தான் நம்ம சேர்த்து செய்யப் போறோம். அதனால உப்புமா அப்படிங்கறது ஒரு ஹெல்த்தியான உணவு தான். உப்புமால ரவா உப்புமா , சேமியா உப்புமா, இடியாப்ப உப்புமா அப்படின்னு நிறைய உப்புமாக்கள் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனால் நம்ம இப்ப செய்ய போறது அவல் தக்காளி உப்புமா அந்த உப்புமாவ எப்படி செய்யலாம். இந்த அவல் தக்காளி உப்புமாவை காலை உணவாகவும் சாப்பிடலாம் இல்ல மாலை சிற்றுண்டி உணவாகவும் நம்ம எடுத்துக்கலாம். சரி வாங்க எப்படி இந்த தக்காளி அவல் உப்புமா செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

கிராமத்து கனவா கருவாட்டு குழம்பு | kanava dry fish curry recipe in tamil

ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவம் தான். அதிலும் குறிப்பாக மட்டன், சிக்கன் தான் செய்ய வேண்டுமா என்ன? ஒரு மாற்றத்திற்கு கருவாட்டு குழம்பு செய்யலாம். பிறகு ஒவ்வொரு வாரமும் இதையே செய்ய சொல்லும் அளவிற்கு இதன் மனமும் சுவையும் இருக்கும். கருவாடு உடல் உஷ்ணத்தை குறைக்கும். பொதுவாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து உஷ்ணம் வெளியேற கருவாட்டை சாப்பிடுவார்கள். கருவாட்டினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். கருவாட்டின் வாசனை பலருக்கும் அலர்ஜி என்றாலும், அதனை குழம்பாக வைத்த பின் யாராக இருந்தாலும் ஒரு பிடிபிடித்து விடுவார்கள்.

பீட்ரூட் பூரி | Beetroot poori recipe in tamil

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட இந்தியாவில் பாஜி எனப்படும் காய்கறி மசாலாவுடன் பரிமாறப்படுகிறது. உருளைக்கிழங்கு மசாலா தவிர பூரியை காய்கறி குருமா, சென்னா மசாலா உடனும் உண்ணலாம். சுண்ட வைத்த பாலில் சர்க்கரை கலந்து பூரிகளை ஊற வைத்து பால் பூரி செய்யலாம். பூரி என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம். குழந்தைகள் மட்டுமில்லை இந்த லிஸ்டில் பெரியவர்களும் உண்டு. இருப்பினும் அதில் சத்தானதாக இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக உணர்வோம். ஆம் இன்று பூரியை புதுவிதமான முறையில் பீட்ரூட் சேர்த்து தான் செய்ய போகிறோம். பீட்ரூட் பிடிக்காத குழந்தைகளுக்கு பூரியில் பீட்ரூட் சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

கம்பு வெந்தயக்கீரை ரொட்டி | Pearl Millet Methi Roti In Tamil

உடலுக்கு ஆரோக்கியம் தரும் ரெசிபியைமிக மிக சுலபமான முறையில் செய்து கொடுக்க வேண்டும். அதே சமயம் அந்த ரெசிபி சுவையானதாகவும்இருக்க வேண்டும். குழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் பொருளாகவும் இருக்க வேண்டும். அப்படிஒரு சூப்பரான  கம்பு வெந்தயக்கீரை ரொட்டி தான்இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.   ஆரோக்கியம்தரக்கூடிய வெந்தயக் கீரையை கடைந்து கொடுத்தால், குழம்பு வைத்துக் கொடுத்தால் குழந்தைகள்நிச்சயம் சாப்பிட மாட்டார்கள். இப்படி சிறுதானியதுடன் சேர்த்து செய்து லஞ்சுக்கு பாக்ஸில்போட்டு கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள்.

பாப்கார்ன் சிக்கன் | pop corn chicken recipe in Tamil

அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே அவ்வளவு இஷ்டம். சிக்கன் என்றால் பெரியவர் முதல் சிறியவர் வரை யாருக்குதான் பிடிக்காது. அதுவும் சிக்கனில் பாப்கார்ன் சிக்கன் செய்து சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும். பாப்கார்ன் சிக்கன் பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படும் ஒரு அசைவ துரித உணவு வகை. அதிலும் குறிப்பாக KFC சிக்கனுக்கென்று ஒரு பெரிய பட்டாளமே அடிமை எனவும் கூறலாம். முதலில் அமெரிக்காவில் உதயமான இவை மெல்ல மெல்ல உலகம் முழுவதும் இதனின் மொரு மொருப்பு தன்மை மற்றும் அதீத சுவையால் மிகவும் பிரபலம் அடைந்தது. மைதா மாவு, சோள மாவு, எலும்பில்லாத சிக்கன் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது மயோனைஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இதை ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.

கருப்பு மட்டன் கிரேவி | Mutton Black Gravy Recipe In Tamil

மட்டன் உணவுகள் வரிசையில் மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, மட்டன் கிரேவி, மட்டன் சூப், மட்டன் பெப்பர் ப்ரை, மட்டன் வறுவல், மட்டன் ஈரல் குழம்பு, மட்டன் குடல் குழம்பு, மட்டன் தலைக்கறி குழம்பு அப்படின்னு நிறைய செய்திருப்போம். இந்த கருப்பு மட்டன் கிரேவ நம்ம எப்பொழுதும் செய்யப் போற மட்டன் குழம்பு மட்டன் கிரேவிகளை விட இந்த மட்டன் கிரேவி இன்னும் கொஞ்சம் வித்தியாசமா சுவையா இருக்க போகுது. அந்த வரிசையில் இப்போ நம்ம மட்டன் கருப்பு கிரேவி எப்படி செய்வது? அப்படின்னு பார்க்க இருக்கோம். இந்த கிரேவி ரொம்ப கஷ்டமான ஒரு விஷயம் கிடையாது இந்த கிரேவிய ரொம்ப சுலபமாவே நம்ம சீக்கிரமாவே செய்து முடிச்சிடலாம். சரி வாங்க இந்த கருப்பு மட்டன் கிரேவி எப்படி செய்யலாம் அப்படிங்கறது பார்க்கலாம்.

பாலக் கீரை நக்கட்ஸ் | palak nuggets recipe in tamil

தற்போது இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் மத்தியிலும் மிகவும் பிரபலமாக இருக்கும் பர்கர், பிட்ஸா பட்டியலில் நக்கட்ஸுக்கும் இடம் உண்டு. பொதுவாகவே நக்கட்ஸ்கலுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மத்தியிலும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் இந்த பாலக் கீரை நக்கட்ஸ்சும் அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. நக்கட்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. அதில் முட்டை நக்கட்ஸ், வெஜிடபிள் நக்கட்ஸ், மற்றும் உருளைக்கிழங்கு நக்கட்ஸ் மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது பாலக் கீரை நக்கட்ஸ். இதனை நம் குழந்தைகள் இதை மிகவும் விரும்பி உண்பார்கள்.