Recipes

ஆட்டு ஈரல் கிரேவி | Mutton Liver Gravy Recipe In Tamil

ஆட்டுடைய ஈரல் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவளுக்கு நல்ல இரும்புசத்து அதிகமாக கிடைக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்தால்  அதிக படுத்துவதற்கு  இன்ஜெக்ஷன் எல்லாமே போட்டு அதுக்கு அப்புறம் வாராவாரம் வந்து அந்த  இன்ஜெக்ஷன்  எடுத்துக்கணும். இந்த பிரச்சனை வரக்கூடாது அப்படிங்கற பட்சத்துல நீங்க ஆட்டோட ஈரல் மண்ணீரல் இது கிடைச்சதுன்னா இதை வாங்கி சாப்பிட்டு இந்த ஈரல் அல்லது மண்ணீரல் சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து ஒரு டம்ளர் லெமன் ஜூஸ் வீட்டில் செய்து குடிச்சீங்கன்னா உங்களுக்கு அப்படியே  ஹீமோகுளோபின் லெவல் இன்கிரீஸ் ஆகும். இவ்வளவு சத்துக்கள் இருக்கிற இந்த  ஈரல் வச்சி மதுரை ஸ்டைலில் கிரேவி எப்படி பண்ணலாம் அப்படின்னு பார்க்கலாம் வாங்க

தக்காளி கத்திரிக்காய் கடைசல் | tomato brinjal kadaisal recipe in tamil

தென் இந்திய உணவு வகைகளில் கத்தரிக்காய் தவிர்க்க முடியாதது. சாம்பார், கூட்டு, குழம்பு என ஏதாவது ஒரு ரூபத்தில் கத்தரிக்காயை பயன்படுத்துவோம். பலருக்கு கத்தரிக்காய் வாசம் இருந்தால்தான், சைவச் சாப்பாடு களை கட்டும். இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபி சைவ பிரியர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த கத்திரிக்காவை வைத்துதான் பார்க்கப்போகிறோம். நாம் இன்று வரை கத்திரக்காவில் குழம்பு, எண்ணெய் கத்திரிக்காய் போன்றவை தான் செய்து சாப்பிட்டுருப்போம். ஆனால் இன்று பார்க்கப்போகும் ரெசிபியை ஒருமுறை செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் என்று சொல்பவர்கள் கூட இந்த கத்தரிக்காய் கடைசலை விட்டு வைக்க மாட்டார்கள்.

இட்லி சாம்பார் | Idly Sambar Recipe In Tamil

காலைல குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பனும் ஹஸ்பண்ட ஆபீஸ் அனுப்பனும் இந்த டென்ஷன்ல இட்லிக்கு சாம்பார் வைக்கணும்னு நினைச்சாலே தலையே சுத்திடும். ஏன்னா இட்லிக்கு சாம்பார் வைப்பதற்கு குறைந்தது அரை மணி நேரத்துக்கு மேலயாவது ஆகும் . அதுவும் பருப்பு வெந்து காய் வெந்து ஒரே டென்ஷனா இருக்கும். இதெல்லாம் லஞ்ச் வேற தயார் பண்ணனும் இவ்ளோ டென்ஷனா இருக்கும்போது எப்படி சுலபமா பத்தே நிமிஷத்துல இட்லிக்கு சாம்பார் வைக்க போறது அப்படின்னு பார்க்கலாம். வாங்க அதிரடி சாம்பார் உடனடியாக வைக்கிறதுக்கு பக்காவான டேஸ்ட்ல செய்யறது எப்படினு தெரிஞ்சுக்கலாம்.

இறால் சுரைக்காய் குழம்பு | Prawn Bottle Gourd Gravy

இறால் சுரைக்காய் குழம்பு என்பது கிராமத்தில் செய்யப்படும் ஒரு சுவையான இறாலைக் கொண்டு சமைக்கப்படும் அசைவ உணவாகும். கடல் உணவுகளில் பெரும்பாலான சமையல் வகைகள் மிகக் குறைந்த பொருட்களுடன் செய்யப்படும் மிகவும் எளிமையான செய்முறை, ஆனால் மிகவும் சுவையானவை. அதே போல் இந்த இறால் உணவு செய்முறையும் எளிதானவை , இறால்களைப் பயன்படுத்துவதன் மூலம் சுரைக்காய் சுவை முழுமையான மாற்றத்தைப் பெறுகிறது. இறால்கள் சேர்த்ததும் இந்த சுரைக்காய் அதீத மணத்துடன் இருக்கும். இறால் சுரைக்காய்குழம்பு இந்த முறையில் செய்து அனைவரையும் அசத்துங்கள். வாங்க இதை எப்படி செய்வது என்றுபார்ப்போம்.

முருங்கைக்கீரை கேரட் பொரியல் | Drumstick Leaves Carrot Stir Fry

குழந்தைகள் முருங்கைக் கீரையையும் சாப்பிட மாட்டார்கள் . கேரட்டையும் சாப்பிட மாட்டார்கள். பெரியவர்களுக்கும் போர் அடித்து விடும். கொஞ்சம் வித்தியாசமாக முருங்கைக்கீரை உடன் கேரட்டை போட்டு இந்தமுறையில் ஒரு பொரியல் செய்து பாருங்கள். சுவை சும்மா அட்டகாசமா இருக்கும். ரசம் சாதம் சாம்பார் சாதம் எதற்கு வேண்டுமென்றாலும் இதை தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். முருங்கைக் கீரையை கேரட் உடன் சேர்த்து செய்யும்பொழுது  தேவையான உணவையும் ஊட்டச்சத்தையும் அளிக்கின்றன.வாருங்கள் இந்த  முருங்கைக்கீரை கேரட் பொரியலைஎவ்வாறு செய்ய வேண்டும் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பலாக்கொட்டை பொரியல் | Palakottai poriyal recipe in tamil

பலாகொட்டை பொரியல் கேரளாவின் பாரம்பரிய உணவு வகை. இது இந்தியாவில் பல்வேறு இடங்களில் செய்யப்படுகிறது. தினமும் மதிய உணவுக்கு என்ன சைட் டிஷ் செய்ய என்று யோசிச்சு செய்வதே கடினமான வேலை ஆகும். எப்போதும் பீன்ஸ்,கேரட், முருங்கை,கோஸ், பட்டாணி என்று சிகேத காய்கறிகளையே செய்து அலுத்து போனவர்களுக்கு இந்த பதிவு மிக உதவியாக இருக்கும். பலாப்பழத்தின் விதையைக் கொண்டு பல வகையான உணவுகளை செய்யலாம். அதிலும் பொரியல் செய்து சாப்பிட்டால் இன்னும் அட்டகாசமாக இருக்கும். ஆம், பலாக்கொட்டையைக் கொண்டு பொரியல் செய்யலாம். இந்த பொரியல் சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

முளைகட்டியபயறு சுண்டல் | Sprouted Green Gram Stir Fry

பயறு இருந்தால் போதும். அதை முளை கட்டி இந்தமுறையில் சுண்டல் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும். சுவையான இந்த முளைகட்டியபயறு சுண்டல்சுவையாக செய்திடலாம்.முளைகட்டிய பயறு என்பது முளைக்க வைக்கப்பட்ட நிலையிலுள்ள பயறினைகுறிக்கிறது. இது ஓர் உணவாகும். ஏதாவது ஒரு பயறு வகையினை முளைக்கவைத்து அதனை பச்சையாகவோஅல்லது வேகவைத்தோ உண்ணப்படுகிறது. அதிக அளவு புரதச்சத்துக்கள் நிறைந்த இது கிழக்காசிய நாடுகளில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. அனைவரும் சாப்பிடக்கூடிய ஒரு முளைகட்டியபயறுசுண்டல் எப்படி சுவையாக செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளப் போகின்றோம்.

கோவக்காய் முட்டை குழம்பு | Kovakkai Egg Kulambu Recipe In Tamil

கறிக் குழம்பையும் மிஞ்சும் சுவையில் மிகவும்அற்புதமான இந்த கோவக்காய் முட்டை குழம்பை சற்று வித்தியாசமாக செய்து பாருங்கள். கோவக்காய்விருப்பி சாப்பிடாதவர்களும் இந்த முறையில் செய்தல் சாப்பிடுவார்கள். கோவக்காய் முட்டைகுழம்பு இந்த முறையில் மசாலா சேர்த்து செய்யும் பொழுது இதன் சுவை அவ்வளவு அட்டகாசமாகஇருக்கும். அதிலும் முட்டையை வேக வைத்து சேர்க்கும் பொழுது அதன் சுவையுடன் இந்த மசாலாவின்சுவையும் சேரும் பொழுது வேறுவிதமான சுவையைக் கொடுக்கும். வாருங்கள் இப்படி கோவக்காய்முட்டை குழம்பு எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.