Recipes

குடைமிளகாய் சட்னி | capsicum chutney recipe in tamil

குடைமிளகாயை ரைஸ் உடன் சேர்த்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த குடைமிளகாய் கொண்டு சட்னி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? உணவு பிரியர்களுக்காக சற்று வித்தியாசமாக குடைமிளகாய் சட்னி எப்படி செய்வதென்று பார்ப்போம். நாம் தினமும் சாப்பிடும் உணவு முறையை சரியாக கையாண்டால் எந்த நோயில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ளலாம். அந்த வகையில் குடைமிளகாய் சட்னியில் அளவு கடந்த சத்துக்கள் உள்ளது. இதில் எளிதாக செய்யக்கூடிய மற்றும் உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் ஊட்டச்சத்து குணங்களும் அதில் நிறைந்துள்ளன. குடைமிளகாயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. குடைமிளகாய் சட்னி வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

முளைப்பயறு சப்பாத்தி | Sprouted Green Gram Chappathi

பச்சைபயிறு கொண்டு செய்யப்படும் இந்த சப்பாத்தி அனைவரும் விரும்பி ரசித்து, ருசித்து சாப்பிடும்படியாக இருக்கும். நீங்களும் பச்சைபயிறு  இருந்தால்முத்தின நாளே முளை விட்டு இதை செஞ்சு பாருங்க, எல்லோரும் உங்களை நிச்சயமாக பாராட்டுவாங்க!முளைப்பயறு சப்பாத்தி. அடிக்கடி சப்பாத்தி செய்பவர்களுக்கு முளைப்பயறு வைத்து ஸ்டஃப்ட் முளைப்பயறு சப்பாத்தியை ரொம்ப ருசியானஒரு டிஷ்ஷாக மாற்றக்கூடிய அற்புதமான குறிப்பு தான், இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.அருமையான டேஸ்டியான முளைப்பயறு சப்பாத்தி,எப்படி எளிதாக செய்வது? என்பதை இனி தெரிந்துகொள்ளப் போகிறோம்.

மொச்சை முருங்கை குழம்பு | Mochai Murungai Kulambu

இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாகஇருக்கும். தொட்டுக்கொள்ள ஒரு வத்தல் இருந்தால் போதும். பச்சை மொச்சை அல்லது காய்ந்தமொச்சை எதில் வேண்டுமென்றாலும் சேர்த்து கொள்ளலாம். அவ்வாறு கிராமத்து உணவுகளுக்கு என்று தனிப்பட்டசுவை இருக்கிறது. ஒருமுறை அந்த சுவையை ருசித்து விட்டால் என்றென்றும் அது நமது நாவைவிட்டு மறையாது. அவ்வாறு அவர்கள் செய்யும் பக்குவமே தனி விதமாகத்தான் இருக்கும். அவர்கள்கை மனமும், அவர்கள் செய்யும் விதமும் ஒரு தனிப்பட்ட சுவையை அந்த உணவிற்கு கொடுத்துவிடும்.இவ்வாறு இந்த மொச்சை முருங்கை புளிக்குழம்பு எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான்இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

உருளைக்கிழங்கு குடைமிளகாய் கிரேவி | potato capsicum gravy recipe in tamil

நாம் என்று இங்கு காண இருப்பது வித்தியாசமான உருளைக்கிழங்கு குடை மிளகாய் கிரேவி. குடைமிளகாய் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் வைட்டமின் சி நிறைந்த காய்கறிகளை அதிகம் சேர்க்க மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். இத்தகைய வைட்டமின் சி குடைமிளகாயில் ஏராளமாக இருப்பதால், அடிக்கடி குடைமிளகாயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆனால் பலருக்கு குடைமிளகாயை வாங்கினால், எப்படி சமைத்து சாப்பிடுவது என்று தெரிவதில்லை. இந்த குடைமிளகாய் கிரேவி சப்பாத்திக்கு ஒரு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியதாகவும் இருக்கும்.

ஆரஞ்சு ரசம் | Orange rasam recipe in tamil

ரசம் என்பது தென்னிந்திய மக்களின் உணவு வகைகளில் மிகவும் முக்கியமான ரெசிபி ஆகும். இதை எல்லா தருணங்களிலும் பொதுவாக எல்லா வீடுகளிலும் இதைச் செய்து மகிழ்வர். ரசம் என்பது காரமான சுவையுடன் நாக்கை சொட்டை போடச் செய்யும் புளிப்பு சுவையுடன் இருக்கும். ஆரஞ்சு பழத்தில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. ஆரஞ்சு பழ சீசன் தொடங்கி விட்டது. ஆரஞ்சு பழத்தில் எண்ணற்ற நன்மைகள் இருக்கிறது. தினம் ஒரு பழம் சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும். பழமாக சாப்பிடுவது பிடிக்க வில்லை என்றால் இது போன்ற ஆரஞ்சு ரசம் முயற்சி செய்து சாப்பிட்டு பாருங்கள். இந்த ஆரஞ்சு ரசத்தை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உடல் நலம் சரியில்லாத போது செய்து கொடுத்தால் நல்லது.

வாழைப்பழ இடியாப்பம் | Banana Idiyappam Recipe In Tamil

வாழைப்பழ இடியாப்பம் ஆரோக்கியமான உணவுகள் அப்படிங்கிற பட்டியல்ல வந்துரும். அப்படி வேக வைத்த உணவுகள்ல உலகத்திலேயே முதல் இடம் பிடித்தது இட்லி. அதுக்கு அப்புறமா இடியாப்பம் ஆவியில் வேக வைப்பதால ரொம்பவே ஆரோக்கியமான ஒரு உணவா இருக்கு. இந்த வாழைப்பழ இடியாப்பம் ரொம்பவே சுவையாகவும் எல்லாருக்கும் பிடித்த மனதாகவும் இருக்கும். வாழைப்பழம் அப்படிங்கறது ரொம்பவே புடிச்ச ஒரு பழம். வாழைப்பழத்தையும் இடியாப்பத்தையும் எப்படி மிக்ஸ் பண்ணி வாழைப்பழ இடியாப்பம் செய்யலாம் எப்படின்னு இப்போ தெரிஞ்சுக்க போறோம். இந்த வாழைப்பழ இடியாப்பத்தை ரொம்பவே சுலபமாக சீக்கிரமாகவும் செய்யலாம்.

குடைமிளகாய் பொரியல் | Capisicum Poriyal Recipe In Tamil

குழந்தைகள் விருப்பமாக சாப்பிடக்கூடிய குடைமிளகாயில், பொரியல் செறிந்து கொடுத்து பாருங்கள்,அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்., . குடமிளகாயில்கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்கஉதவும். குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. புற ஊதாக்கதிர்களால் தோலில்ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மூட்டுவலிக்கு மருந்தாகிறது. குடைமிளகாய் வைத்து இந்த பொரியல் எப்படி செய்ய வேண்டும் என்பதைதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதனையும் ஒரு முறை செய்து பாருங்கள்.அவ்வளவு அசத்தலான சுவையில் இருக்கும்.