Recipes

கனவாய் மீன் வறுவல் | Squid Fish Fry Recipe In Tamil

கனவாய் மீன்களுக்கு முள்ளும் கிடையாது முதுகெலும்பும் கிடையாது. இந்த மீன்கள் பார்ப்பதற்கு ஆக்டோபஸ் போலவே இருக்கும் . இந்த கனவாய் மீனின் தலைக்குள் ஒரு சுரப்பி இருக்கும் அதன் சிறப்பு என்னவென்றால் தன்னை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு கருப்பு நிற திரவத்தை பிச்சி அடித்து எதிரிகள் இடம் இருந்து தப்பித்துக் கொள்ளும். இந்த கனவாயை மீனவர்கள் வலை போட்டு பிடித்தால் கூட கிழிந்து விடும் அளவிற்கு இதன் சதைப்பகுதி மெல்லியதாக  இருப்பதால் தூண்டிலில் தான் பிடிப்பார்கள்.. சத்துக்களை உள்ளடக்கிய கனவாய் மீன் வறுவல் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

சௌ சௌ தயிர் கூட்டு | chow chow curd koottu recipe in tamil

பொதுவாக மதிய நேர சாப்பாட்டிற்கு என்ன செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்போம். ஆனால் இனி சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதத்திற்கு சுவையான சௌ சௌ தயிர் கூட்டு செய்யலாம். மதிய வேளையில் மிகவும் ஈஸியான, அதே சமயம் ஆரோக்கியமான சைடு டிஷ் செய்து சாப்பிட நினைத்தால், சௌ சௌ தயிர் கூட்டு செய்து சாப்பிடலாம். அதிலும் திங்கட்கிழமைகளில் இந்த கூட்டு செய்து சாப்பிடுவது நல்லது. ஏனெனில் ஞாயிற்று கிழமையில் நன்கு காரசாரமாக உட்கொண்டிருப்பதால், திங்கட்கிழமைகளில் சற்று காரம் குறைவாக சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இந்த சௌ சௌ தயிர் கூட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அதன் சுவை மிகவும் சூப்பராக இருக்கும். ஆகவே இன்று சூப்பரான சௌசௌ தயிர்‌ கூட்டு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

கேப்சிகம் சன்னா மசாலா | Capsicum Channa Masala Recipe In Tamil

சன்னா மசாலா, மசாலாப் பொருட்களால் செய்யப்படும்ஒரு கறி உணவாகும். வட இந்தியாவில், சன்னா மசாலாவை ‘சோலே மசாலா’ என்றும் அழைக்கப்படுகிறது. இதில் சேர்க்கப்படும்கொண்டைக்கடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச்செய்து, இந்த சைவ சுண்டல் கறியை ஒரு முக்கிய உணவாக அல்லது சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்.  வளர்கின்ற குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கொண்டைக்கடலையில்இருக்கும் புரதச்சத்து பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த கேப்சிகம் சென்னா மசாலாவை அடிக்கடி செய்து கொடுத்து பாருங்கள் உங்கள் குழந்தையின் வளர்ச்சி நல்லபடியாக இருக்கும்

வெண்டைக்காய் கறி | Ladies Finger Curry Recipe In Tamil

வெண்டைக்காயை வைத்து சூப்பராகமணக்க மணக்க வெண்டைக்காய் கறி வித்தியாசமாக செய்யலாம். இந்த வெண்டைக்காய் கறி சாதத்தில்சேர்த்து செய்தல் அருமையாக இருக்கும்.  இந்தரெசிபி லஞ்ச் பாக்ஸ்க்கு சூப்பரான ரெசிபி. சப்பாத்தி ,நான் கும் அருமையாக இருக்கும்.குழந்தைகளுக்கு இப்படி வெண்டைக்காய் கறி செய்து கொடுத்தால், காய்கறிகளோடு அந்த சாதத்தைவிருப்பமாக சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கும் இதை செய்து கொடுக்கலாம். காலை அவசரஅவசர சமையலில் இது ஒரு சுலபமான ரெசிபி. இந்த  சுவையான வெண்டைக்காய் கறி எப்படி எளிதாக செய்வது? என்பது போன்ற குறிப்புகளைஇப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

காடை முட்டை குழம்பு | Quail egg Gravy Recipe In Tamil

காடை முட்டை குழம்பு அருமையான சுவையில் இப்படிஒரு முறை செஞ்சு கொடுத்துப் பாருங்கள், எவ்வளவு சாப்பாடு இருந்தாலும் பத்தவே பத்தாது!அவ்வளவு சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பும் காடை முட்டை குழம்பு எப்படி எளிதாகவீட்டில் செய்வது? என்பதை தான் இனி பார்க்க இருக்கிறோம். அவித்த முட்டையை இது போல குழம்பு, குருமா போன்றுசெய்து கொடுத்தால் அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள். காடை முட்டை குழம்பு சுவையுடன்கூடிய ஆரோக்கியம் மிகுந்த உணவு வகை. அவித்த காடை முட்டையை இது போல குழம்பு, குருமா போன்றுசெய்து கொடுத்தால் அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள்.

திண்டுக்கல் சிக்கன் வறுவல் | Dindigul chicken roast recipe in tamil

விடுமுறை நாட்கள் என்றாலே பெரும்பாலானோரின் வீட்டில் சிக்கன், மட்டன் சமைக்கும் வழக்கம் இருக்கும். அசைவங்களில் நிறைய வகைகள் இருந்தாலும், குழந்தைகள் விரும்பி உண்பது சிக்கன். சிக்கனில் பல வகை உணுவுகளை தயார் செய்யலாம். சிக்கனை பயன்படுத்தி நமக்கு பிடித்த பல விதவிதமான ரெசிபிகளை செய்து அசத்த முடியும். அதிலும் முக்கியமாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் விதவிதமான சுவையிலும் விதவிதமான முறையிலும் சிக்கன் சமைக்கப்படுகிறது. நீங்கள் இன்று மதியம் சிக்கன் செய்ய நினைத்தால், திண்டுக்கல் சிக்கன் வறுவல் செய்யுங்கள். இந்த சிக்கன் வறுவல் சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.