Recipes

ஜவ்வரிசி புட்டு | Sabudana Puttu Recipe In Tamil

ஆரோக்கியம் மிகுந்த ஜவ்வரிசி கொண்டும் புட்டுதயாரிக்க முடியும். பாயாசத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த ஜவ்வரிசியை வைத்துஏராளமான உணவுகள் தயாரிக்கலாம்! வயதுதானவர்களுக்கு மூட்டுவலி அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வளரும் குழந்தைகளின் அன்றாட உணவில் ஜவ்வரிசியைஅதிகம் சேர்ப்பதால் எலும்புகள் பலப்படுகிறது. இது போல ஜவ்வரிசி புட்டு செய்து கொடுத்தால்வீட்டில் யார் தான் வேண்டாம் என்று கூறுவார்கள்? குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரைஅனைவரும் விரும்பி உண்ணக்கூடிய இந்த ஜவ்வரிசி புட்டு எப்படி செய்வது? என்பதை தான் இந்தபதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மிக்ஸட் வெஜிடபிள் பொரியல் | Mixed Veg Poriyal In Tamil

பொதுவாக அனைத்து திருமண மற்றும் அனைத்து சுபவிசேஷங்களில்கண்டிப்பாக இடம்பெறும் ஒரு வகை மிக்ஸட் வெஜிடபிள் பொரியல். முற்றிலும் காய்கறி கொண்டுஇது தயார் செய்யப்படுவதால் இது உடலுக்கு சக்தியை தரும் ஒரு உணவு வகை ஆகும். சில வீட்டுகல்யாணங்களில் பந்தியில், மிக்ஸட் வெஜிடபிள் பொரியல் வைக்கிறார்கள்., அந்த பாரம்பரியமனம் மாறாமல், மிக்ஸட் வெஜிடபிள் பொரியல் சுலபமான முறையில், சுவையான முறையில் எப்படிசெய்யலாம், என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.சுவை மட்டும் இல்லைங்க! இதுல ஆரோக்கியமும் அதிகம் உண்டு.

தக்காளி பட்டாணி சாதம் | Tomato Peas Rice Recipe In Tamil

தக்காளி பட்டாணி சாதம் ஒரு காரசாரமான, சுவையான சாதம்,  குறிப்பாக இது லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்றதாகும். தக்காளிபட்டாணி சாதம்,  தக்காளி புலாவ், தக்காளி பாத்,தக்காளி பிரியாணி என பலவிதங்களில் அழைக்கப்படுகிறது.  மசாலா வாசம் இல்லாமல், லேசான மசாலா வாசத்தில் ஒரு தக்காளி சாதம் எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமான முறையில்உங்கள் வீட்டில் இருக்கும் அரிசியை வைத்து இந்த தக்காளி சாதத்தை செய்து கொள்ளலாம்.ஆனால் அவரவர் வீட்டு அரிசிக்கு ஏற்ப தண்ணீரை ஊற்றிக் கொள்வதும், விசில் வைப்பதும் மட்டும்தான் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.

கருவாடு குழம்பு | Dry Fish Gravy Recipe In Tamil

கருவாட்டு  குழம்புஎன்றால் எப்போதும் சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவோம். அப்படிப்பட்ட கருவாட்டுக் குழம்பில் பல காய்கறிகளையும் மொச்சைபயிரையும் சேர்த்து சமைக்கும் பொழுது அதன் மனமே நமக்கு எப்பொழுதும் சாப்பிடும் இரண்டு ப்ளேட்டுகளை விட மூன்று நான்கு பிளேட்டுகள் என்று சாப்பிட தோன்றிக் கொண்டே இருக்கும் . கடல் உணவுகள் அனைத்தும் உடலுக்கு ஊட்டச்சத்தையும் நன்மையையும் கொடுக்கக் கூடியவை என்றாலும் கடல் உணவுகளில் இருக்கும் சில அமிலங்கள் ஒவ்வாமையை கொடுக்க கூடியவை.. மொச்சை பயிறு மற்றும் பல காய்கறிகளை சேர்த்து கருவாட்டு குழம்பு எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

வாழைக்காய் பொரியல் | Raw Banana Poriyal In Tamil

தினமும் ஒவ்வொரு வீட்டிலும் பல வித உணவுகளைசமைக்கின்றனர். ஆனால் ஒரு சில நாட்களில் ஒவ்வொரு காய்கறிகள் கிடைப்பதில்லை. எந்த சீஸனில்எந்த காய்கறிகள் கிடைக்கின்றதோ அதனை வாங்கி சமைப்பதுதான் அனைவரின் வழக்கமாக இருக்கும்.ஆனால் வாழைக்காய், வாழைப்பழம் இவை அனைத்தும் எப்பொழுதும் கிடைக்கும் பொருட்களாகும்.எனவே இந்த வாழைக்காய் மிகவும் விலை குறைவாக தான் இருக்கும். இதில் பஜ்ஜி, , வறுவல்என பல வகை உணவுகளை சமைக்க முடியும். எனவே இந்த வாழைக்காயில் செய்யக்கூடிய இந்த பொரியலும்மிகவும் சுவையாக இருக்கும். இதனை இட்லி, தோசையுடன் அல்லது சாதத்துடன் தொட்டுக்கொண்டுசாப்பிட மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்.

எள்ளு மட்டன் குழம்பு | Sesame Mutton Gravy Recipe In Tamil

எள் மட்டன் கறி வித்தியாசமானது, மற்ற மட்டன் ரெசிபிகளை மிஞ்சும் அளவுக்கு ருசி அதிகமாக இருக்கும்.எள் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும். எள் இரும்புச்சத்து, ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து அதிகம் கொண்டது. எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது. இந்த எள்ளு எந்த உணவோடு சேரும் போடும், உணவுற்குள் சேர்ந்து சுவையை கூடும். இந்த எள்ளு மட்டனுடன் சேர்த்து செய்யும் பொழுது சிறப்பான ருசியை அளிக்கும். வாங்க இந்த ருசியான எள்ளு மட்டன் குழம்பு எப்படி செய்வது என்ட்ரி பார்ப்போம்.

சேப்பங்கிழங்கு சமோசா | Ceppangiungu samosa recipe in tamil

இந்தியாவில் விதவிதமான உணவுகளுக்கு என்றுமே பஞ்சம் ஏற்பட்டதில்லை. நாம் விதவிதமாக தேர்வு செய்து சாப்பிடுவதற்கு ஏராளமான உணவுகள் இங்கு கொட்டிக் கிடைக்கின்றன. வட இந்தியா முழுமைக்கும் சமோசாவானது மிக பிரபலமான உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவிலும் சமோசாக்கள் கிடைக்கின்றன. நம்மில் பலருக்கும் மிகவும் பிடித்த தின்பண்டங்களில் ஒன்று சமோசா. இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. எத்தனை முறை வெளியில் சென்றாலும், அத்தனை முறையும் ஒரு டீயும், சமோசாவும் சாப்பிடாமல் வீட்டிற்கு திரும்பிய சரித்திரம் யாருடைய வாழ்க்கையிலும் இருக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு மாலை நேர சிற்றுண்டியாக சமோசா உள்ளது.

பூசணிக்காய் சூப் | Pumpkin Soup recipe in tamil

காய்கறிகள் சூப் செய்து உண்பதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. சிலருக்கு சில காய்கள் உண்ண பிடிக்காது. அப்படி உள்ள காய்களை சூப் செய்து உண்பதன்‌ மூலம் அதில் உள்ள‌ சத்துக்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கும். பூசணிக்காய் அனைவரும் விரும்பி உண்பதில்லை. பெரியவர்கள் விரும்பி சாப்பிட்டாலும் குழந்தைகள் அவ்வளவாக விரும்பி சாப்பிடுவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இப்படி சூப் செய்து குடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பூசணிக்காய் நோயெதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது, சீரண சக்தியை மேம்படுத்துகிறது, கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது, இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் சீக்கிரம் வயதாவதை தடுத்து இளமையை தக்க வைக்கிறது.