Recipes

சிகப்பு முள்ளங்கி ஐஸ்கிரீம் | Rec radish icecream recipe in tamil

ஐஸ்கிரீம் வயது வரம்பின்றி அனைவருக்கும் விருப்பமானது. கோடையை சமாளிக்க ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் ஒரு புறம் இருக்க, மறுபுறம் மாம்பழங்களை சாப்பிட கோடையை வரவேற்பவர்களுக்கு இருக்க தான் செய்கிறார்கள். இன்றைய பதிவில் முள்ளங்கியை கொண்டு செய்யப்படும் சுவையான முள்ளங்கி ஐஸ்கிரீம் எப்படி செய்வதென்று தான் பார்க்கப் போகிறோம். எந்த வித செயற்கை நிறமோ, சுவையூட்டியோ சேர்க்காமல் வெறும் 3 பொருட்களை வைத்து, இனி வீட்டிலேயே சுலபமாக ஐஸ்கிரீம் செய்து சாப்பிடலாம். தோணும் போதெல்லாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அதை செய்யலாம்.

காராமணி வாழைப்பூ வடை | Kaaramani Bananaflower Vada Recipe In Tamil

வாழைப்பூவில் இருக்குற அதிகப்படியான துவர்ப்புகள் சக்தி பெண்களுக்கு ரொம்ப நல்ல உதவி பண்ணும் பெண்களோடு கர்ப்பப்பை பிரச்சினைகளுக்கு அந்த வாழைப்பூ ரொம்பவுமே உதவியா இருக்கும். ஆகையினால் இந்த காராமணி பயறில் உள்ள ஊட்டச்சத்துகளோடு சேர்த்து வாழைப்பூவும் சாப்பிடும்போது இது மேலும் நல்ல பலன்களை நமக்கு கொடுக்குது. அதனால வெள்ளை காராமணி மற்றும் வாழைப்பூ வடை செய்து சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்திற்கு மேலும் வலுப்படுத்திக் கொள்ளலாம். இந்த காராமணி வாழைப்பூ வடை ரொம்ப சுவையானதாக இருக்கும் நீங்க வெள்ளை காராமணி இல்லனா பிரவுன் கலர் காராமணி ரெண்டு காராமணியிலிருந்து செய்யலாம். எந்த காராமணியில வேணும்னாலும் இந்த வடையை நீங்க செய்து கொள்ளலாம். காராமணியை கொஞ்ச நேரம் ஊற.வைத்து பிறகுவடை செய்யனும்  காரணம்என்னன்னா இருக்கும் நாம ஊற வைத்து அரைக்கும்போது தான் நமக்கு உபரி அதிகமா கிடைக்கும் . சரி வாங்க இந்த வெள்ளைக்கார மணி வாழைப்பூ வடை எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.

ஹரியாலி சிக்கன் | Hariyali Chicken recipe in tamil

சிக்கன் கிரேவி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை அசைவ பிரியர்கள் மட்டுமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கிறது என்றால் அது மிகை அல்ல. பஞ்சாபி உணவின் மசாலா நாவை சுண்டி இழுக்கும். ஹரியாலி சிக்கன் என்பது கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள் மற்றும் பச்சை மிளகாய் போன்ற புளிப்பும் காரமுமான பொருட்களின் கலவையில் ஹரியாலி சிக்கன் மாரினேட் செய்து தயாரிப்பது. இந்த சிக்கன் கிரேவியின் ஸ்பெஷல் என்னவென்றால் பெயரை கேட்டதும் பலரது நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவை கொண்ட இவை உடம்புக்கு மிகவும் நல்லது.

கறி உருளை சால்னா | Mutton Potato Salna Recipe In Tamil

கறி, உருளை கிழங்கு சேர்த்து செய்யப்படும்இந்த கறி உருளை சால்னா பரோட்டா மட்டும் அல்லாமல் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதம்என்று எல்லாவற்றுக்குமே அவ்வளவு அருமையான காம்பினேஷனாக இருக்கம். மட்டன் சால்னா இட்லி, தோசைக்கு கடையில் கொடுப்பது போல உருளை கிழங்கு சேர்த்து  சால்னா ரொம்ப சுலபமாக செஞ்சி கொடுத்தா இன்னும் வேண்டும்வேண்டும் என்று கேட்டு கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு எல்லோருக்கும் பிடித்தஇந்த கறி உருளை சால்னா வீட்டிலேயே ரொம்ப எளிமையாக செய்யலாம்.ரொம்ப ரொம்ப சுலபமாகவீட்டிலேயே ஹோட்டல்ஸ் ஸ்டைலில் கறி உருளை சால்னா எப்படி தயாரிக்கலாம்? என்பதை தான்இந்த பதிவின் மூலம் இனி நாம் பார்க்க போகிறோம்.

கொத்தவரங்காய் கார குழம்பு | Cluster beans kara kuzhampu in tamil

தென்னிந்திய சமையல்களில் குழும்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. ஏனென்றால், ஒரு குழம்பில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக சாம்பாரில் பருப்பு சாம்பார், முருங்கை சாம்பார், முள்ளங்கி சாம்பார் என பல வகைகள் உள்ளன. இதில் ஆச்சரியமான விடயம் என்னெவன்றால் இவை ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான சுவையும், ருசியும் உண்டு. செட்டிநாடு என்றாலே பாரம்பரிய உணவுகள் தான் நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வரும். ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான குழம்பு, சாம்பார் செய்து அலுத்துப் போய்விட்டதா? அப்படியானால் ஒரு நாள் செட்டிநாடு ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள். அதுவும் செட்டிநாடு ஸ்டைல் கார குழம்பு செய்யுங்கள்.

மாங்காய் கொத்தமல்லி சாதம் | Raw Mango coriander rice recipe in tamil

மாங்காய் சீசன் முடிவுற்றாலும் சரி, மாங்காய் மீது இருக்கும் கிரேஸூக்கு குறைச்சலே இல்லை. மாங்காயை எந்த வகையில் கொடுத்தாலும் ருசித்து சாப்பிடும் மக்களுக்கான சூப்பர் டிஷ் இது. மாங்காய் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். காரணம் அதிலிருக்கும் புளிப்பு சுவை தான்.புளிப்பு, காரம் எல்லாம் சேர்த்து சமைத்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக அன்றைக்கு உங்க நாவிற்கு விருந்து தான். மாங்காயில் அனைவரும் ஊறுகாய் செய்துதான் பார்த்திருப்போம். எந்த உணவு பொருட்கள் செய்தாலும், அதில் கொத்தமல்லி சேர்த்து சாப்பிட்டால், ருசியாகத்தான் இருக்கும். அப்படி, சுவை மிகுந்த உணவு பொருளான கொத்தமல்லியில் இன்று கொத்தமல்லி மாங்காய் இரண்டும் சேர்ந்து சாதம் செய்வது எப்படி என்பதை காணலாம்.

கோவக்காய் வறுவல் | Ivy Gourd Fry Recipe In Tamil

தினமும் சிறிதளவு கோவக்காய் எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மையை தருகிறது . இந்த கோவக்காயில் இருக்கிற சத்துக்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துறதுக்கும் உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதற்கும் இந்த கோவக்காய் பயன்படுது. அது மட்டும் இல்லாமல் கல்லீரல்ல இருக்கிற நச்சுத்தன்மையை வெளியேற்றக்கூடிய ஒரு பொருளாவும் இந்த கோவக்காய் பயன்படுகிறது. சிறுநீரக  கற்களைகரைக்கும் தன்மை கொண்டது கோவக்காய். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதால் கோவக்காய் அதிகமாகவே உணவில் எடுத்துக் கொள்ளலாம். இப்போது கோவக்காய் வறுவல் எப்படி செய்வது என்று  பார்க்கலாம்.

காசிமேடு மீன் குழம்பு | kasimedu fish curry

மட்டன் குழம்பு, கோழிக் குழம்பு வரிசையில் உள்ள மீன் குழம்புக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே அலாதி பிரியம் உண்டு. இந்த மணமணக்கும் மீன் குழம்புகளில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொரு பகுதிகளுக்கும், ஊர்களுக்கும் ஏற்ப மாறுபடுகிறது. பொதுவாக கடல் உணவு அனைத்து வயதினருக்கும் உகந்த உணவு. பொதுவாக அனைத்து கடல் உணவுகளிலும் கால்சியம், வைட்டமின்-டி, புரதம், தாது உப்புக்கள், ஒமேகா-3, கொழுப்பு அமிலம், எண்ணெய், துத்தநாகம் போன்றவை உள்ளன. மீன் குழம்புகளில் ஒரு குறிப்பிட்ட மீன்களை சேர்ப்பதால் அவற்றுக்கு அந்த மீனின் பெயர்களே சூட்டப்படுகிறது. இதனை செய்யும் பொழுதே வீடு முழவதும் மணமணக்கும். இதனை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

கற்றாழை சட்னி | Aleovera chutney recipe in tamil

இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற குழப்பமும், கேள்வியும் எழும். இனி இந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் முற்று புள்ளி வைங்க. நாம் தினமும் சாப்பிடும் உணவு முறையை சரியாக கையாண்டால் எந்த நோயில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ளலாம். அந்த வகையில் கற்றாழை சட்னியில் அளவு கடந்த சத்துக்கள் உள்ளது. இது இட்லி, தோசைக்கு டேஸ்ட்டாக இருக்கும்.