Recipes

செட்டிநாடு நண்டு சூப் | Chettinad crab soup recipe in tamil

கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் நண்டு அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள் அதிகமாகவே விரும்பி உண்கின்றனர். இதன் சுவைக்கு ஒட்டுமொத்த நபர்களும் அடிமையாகிவிடுவார்கள். மீன் வகைகளைக் காட்டிலும், நண்டு, இறால் வகைகளின் சுவைகளுக்கு அடிமையாகாத அசைவப் பிரியர்கள் இருக்கவே மாட்டார்கள். கடல் உணவுகளில் ஒன்றான நண்டு சளி, இருமலுக்கு சிறந்த தீர்வு அளிக்கின்றது. சளி, இருமல் என்ற தொந்தரவு ஏற்பட்டாலே நண்டு வாங்கி சமைத்து சாப்பிடுபவர்கள் அதிகம். அதுவும் ரசம், சூப் போன்ற உணவுகளில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருட்களிலும் மருத்துவ பண்புகள் நிறைந்திருக்கும். நண்டு குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

பஞ்சாபி சமோசா | Punjabi samosa recipe in tamil

சமோசா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. சமோசாக்களில் பல வகை உண்டு. அதில் வெஜிடபிள் சமோசா, சிக்கன் சமோசா, ஆனியன் சமோசா, உருளைக்கிழங்கு சமோசா, காலிஃப்ளவர் சமோசா, ஃபிஷ் சமோசா, மற்றும் முட்டை சமோசா குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது உருளைக்கிழங்கு சமோசா. இது பஞ்சாபி சமோசா என்றும் அழைக்கப்படுகிறது. இது வெங்காய சமோசா போல் அல்லாமல் மிருதுவாக இருக்கும். சமோசாவில் நமக்கு பிடித்தவற்றை உள்ளே வைத்து சுவையான விதவிதமான சமோசா செய்யலாம். மாலை நேரங்களில் சுட சுட சமோசாவை புதினா சட்னியில் தொட்டு உண்ணும் சுவையே தனி தான்.

செட்டிநாடு முட்டை குழம்பு | Chettinadu egg curry recipe in tamil

பொதுவாக நம் வீட்டில் முட்டை அடை குழம்பு, முட்டை உடைத்து ஊத்திய குழம்பு என்று சாப்பிட்டு இருந்திருப்போம். ஆனால் இந்த முட்டை குழம்பை ஒரு முறை செய்தால் போதும் திரும்ப திரும்ப சாப்பிட வேண்டும் என்று தோன்றும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது போல மிகவும் சுவையாக இருக்கும். விடுமுறை நாளன்று நல்ல சுவையான ஒரு அசைவ ரெசிபியை செய்து சுவைக்க நினைத்தால், செட்டிநாடு முட்டை குழம்பு செய்து சாப்பிடுங்கள். செட்டிநாடு முட்டை கறி என்பது தென்னிந்திய உணவு வகைகளில் இருந்து ஒரு சுவையான மற்றும் சுவையான முட்டை கறி ஆகும். இந்த முட்டை குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி சப்பாத்திக்கும் அற்புதமாக இருக்கும்.

கொத்தவரங்காய் பொரியல் | Cluster Beans Poriyal In Tamil

உடலில்உள்ள நரம்புகளை வலுப்படுத்துவதற்கு கொத்தவரங்காய் உதவுகிறது. ஒழுங்காக ஜீரணமாகாவிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். கொத்தவரங்காயை சமைத்து சாப்பிடும் பொழுது கொத்தவரங்காயில் உள்ள நார்ச்சத்து ஜீரண சக்தியை தூண்டுகிறது அதனால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடும். கொத்தவரங்காய் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் மாரடைப்பு தடுக்கப்படுகிறது  என்கிறார்கள்காரணம் கொத்தவரங்காய் இதயத்திற்கு நல்ல பலத்தை கொடுக்கிறது. வாரத்திற்கு இருமுறை கொத்தவரங்காய் உணவில் சேர்த்துக் கொள்வதால் அதில் உள்ள கால்சியம் சத்து நமக்கு கிடைக்கிறது. இது எலும்பிற்கு நல்ல பலத்தை கொடுக்கிறது. ரத்தசோகை உள்ளவர்கள் அடிக்கடி இதை உணவில் சேர்த்து கொண்டால் பலன் கிடைக்கும். காரணம் இது உடம்பில் உள்ள ரத்த சுரப்பை அதிகரிக்கிறது. ஆகையால் ரத்த சோகை குறைகிறது. மேலும் கொத்தவரங்காய் அடிக்கடி சாப்பிடுவதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்களும் குறைவதற்கு உதவுகிறது.

நெத்திலி மீன் வறுவல் | Anchovies Fish Fry Recipe In Tamil

சிக்கன், மட்டன் என்று இவற்றை அதிகமாக சாப்பிட்டாலும்,மீன்களில் தான் உடம்பிற்குத் தேவையான விட்டமின்கள் அதிகமாக இருக்கிறது. பலரும் வீட்டில்செய்தாலும், கடைகளுக்கு சென்றாலும் பெரிய மீன்களை தான் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவதுண்டு.ஆனால் இந்த நெத்திலி மீனில் உடம்பிற்குத் தேவையான எவ்வளவு ஊட்டச்சத்துகள் இருக்கின்றதுஎன்று தெரியுமா? இந்த நெத்திலி மீனை குழம்பு வைத்துச் சாப்பிடலாம், தொக்கு செய்து சாப்பிடலாம்அல்லது குழந்தைகளுக்கு பிடிக்கின்ற வகையில் எண்ணெயில் பொரித்து நெத்திலி ஃப்ரை செய்துசாப்பிடலாம். வாருங்கள் இந்த நெத்திலி மீனில் மசாலாக்கள் சேர்த்து அசத்தலான சுவையில்செய்யும் நெத்திலி மீன் வறுவல், எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்வோம்.

தூதுவளை சூப் | Thoothuvalai soup Recipe In Tamil

தூதுவளை மூலிகை நம் வீட்டுக்கு அருகிலேயே கிடைக்கக்கூடிய ஒரு மூலிகை கிராமப்புறங்களில் என்றால் வீட்டு வேலிகளில் கிடைக்கும் இதுவே நகர்ப்புறங்கள் என்றால் கீரை கடைகளில் வாங்கிவிடலாம். அப்படி என்ன மூலிகை பற்றி சொல்கிறேன் என்று யோசிக்கிறீர்களா ?அதுதான் முட்களோடு கூடிய தூதுவளை.  இந்ததூதுவளைக்கு அநேக நன்மைகள் உண்டு இந்த தூதுவளை  குணப்படுத்தும்மிக மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் சளி பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும். வறட்டு இருமலை குறைக்கும். ஜீரணத்தை தூண்டும். இந்த தூதுவளையை வெறும் நெய்யில் வதக்கி சாப்பிட்டாலே சளி பிரச்சனைகளும், வறட்டு இருமல் வாயு பிரச்சனைகள்  நீங்கிவிடும்.

கோதுமை மிளகு தோசை | Wheat pepper Dosa In Tamil

கோதுமையில்சப்பாத்தியா சாப்பிட்டு சாப்பிட்டு சலிப்பு தட்டியவர்களுக்காக அதே கோதுமையை வைத்து மிளகு தோசை செய்து சாப்பிட வேண்டும். என்ன மிளகு தோசை இல்ல ரொம்ப  நிறையசத்துக்கள் இருக்கு  காலோரிகள்கம்மியா இருக்கிறது. ஆகையால் கோதுமையில் எந்த விதமாக வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். கோதுமை உணவோடு  உடற்பயிற்சிசெய்யும்போது கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. இந்த கோதுமை மிளகு தோசை எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம். வெறும் கோதுமை மாவில் தோசை ஊற்றும் பொழுது ஒரு ரப்பர் போல ஒரு மாதிரி பசை போல்  இருக்கும். வாருங்கள் இந்த கோதுமை மிளகு தோசை எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்.