Recipes

செட்டிநாடு வெஜ் கிரேவி | Chettinad veg gravy recipe in tamil

செட்டிநாடு உணவுகளின் சுவை சைவ பிரியர்களுக்கும் சரி, அசைவ பிரியர்களுக்கும் சரி மிகவும் பிடித்தமான ஒன்று. செட்டிநாடு உணவின் மசாலா நாவை சுண்டி இழுக்கும். சைவத்திலும் காரக்குழம்பு, கூட்டு, மசியல், பொரியல், துவையல், பிரட்டல், பருப்பு உருண்டை குழம்பு என ஏராளமான பிரத்தியேக செட்டிநாடு உணவுகள் உள்ளன. தமிழகத்தில் காரைக்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் செட்டிநாடு உணவுகள் சமைக்கப்படுகின்றன. பல வகையான மசாலாப் பொருட்களை ஃபிரஷாக அரைத்து சமையலில் பயன்படுத்துவது இந்த உணவின் தனித்துவம். அந்த வகையில் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது குக் வித் கோமாளியில் சிருஷ்டி செய்த செட்டிநாடு ஸ்பெஷல் வெஜ் கிரேவி.

அரைத்து விட்ட மட்டன் குழம்பு | Araithu Vitta Mutton Kulambu In Tamil

அசைவம் என்றாலே அனைவருக்கும் அலாதி பிரியம்தான். ஏனென்றால் இவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்களின் சுவை ஒருவித நறுமணத்தை ஏற்படுத்துகிறது.இந்த வாசனை வந்து விட்டாலே வீட்டில் உள்ள குழந்தைகள் அம்மா இன்று என்ன சிக்கன் குழம்பா?மட்டன் குழம்பா? என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். . அந்த அளவிற்கு இவற்றில் சேர்க்கப்படும்மசாலாக்கள் மிகவும் அருமையான நறுமணத்தை கொடுக்கின்றன. அவ்வாறு மசாலா சுவையில் இப்படிஅரைத்து விட்ட மட்டன் குழம்பு ஒருமுறை குழம்பு செய்து பாருங்கள், வாசனை மட்டுமல்ல சாப்பிடவும்அருமையாக இருக்கும், எனவே குழந்தைகள் இதனை விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்தஅரைத்து விட்ட மட்டன் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்வோம்.

குச்சி ஐஸ் | Milk Icecream Stick Recipe In Tamil

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமானசத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம் என்னதான் சாக்கோபார் வந்தாலும் கோனைஸ் கிரிம் வந்தாலும் கார்னடோஸ் வந்தாலும் எப்பவுமே குச்சி ஐஸ் பெஸ்ட்  ஐஸ்தான். இதெல்லாம் வந்து எல்லாருக்குமே ரொம்ப ஃபேவரட்டான ஒரு ஐஸ். இப்போ அந்த ஐஸ் எல்லாம் ரொம்ப அரிதாக தான் கிடைக்குது. இருந்தாலும் இந்த மாதிரி ஐஸ்கிரீம்கள் அழிந்து வருவதை தடை பண்றதுக்காக வீட்டிலேயே சுவையான தேங்காய் சேமியா.ஐஸ்  பண்ணிசாப்பிட போறோம். இத நீங்க ஆல்ரெடி செய்து ஃப்ரீசர்ல வச்சிருந்தீங்கன்னா உங்க வீட்டுக்கு கெஸ்ட் வராங்க அப்படின்னா அவங்களுக்கு வந்த உடனே நீங்க அழகா எடுத்து கொடுத்து டேஸ்ட் பண்ண சொல்லலாம். இந்த குச்சி ஐஸ் எப்படி பண்றது அப்படின்னு பாக்க போறோம்.

மாம்பழ பிர்னி | Mango phirni recipe in tamil

பிர்னி என்பது பாஸ்மதி அரிசியுடன் தயாரிக்கப்பட்ட ஒரு கெட்டியான மற்றும் கிரீம் புட்டு ஆகும். இந்த மாம்பழ பிர்னி செய்முறையானது வழக்கமான பிர்னிக்கு மிகவும் பொதுவான மாறுபாடுகளில் ஒன்றாகும். மாம்பழ பிர்னி என்பது அரிசி புட்டு மற்றும் தூய மாம்பழங்களால் செய்யப்பட்ட ஒரு சுவையான இந்திய இனிப்பு ஆகும். அரிசி நன்கு அரைக்கப்பட்டு, பால், குங்குமப்பூ தூள் மற்றும் பல்வேறு பொருட்களுடன் சேர்த்து செய்யப்படுகிறது. வட இந்தியா முழுவதும், குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், திருமணங்கள், பண்டிகைகள் அல்லது எந்த சிறப்பு கொண்டாட்டங்களிலும் இந்த இனிப்பு மிகவும் பிரபலமானது.

பாசிப்பயறு தண்ணிக் குழம்பு | Paasipayiru Thanni Kulambu in Tamil

பாசிப்பயறுசுண்டல் பாசிப்பயறு தோசை என்று வைத்து சாப்பிட்டு போரடிக்குதா. ஆரோக்கியம் நிறைந்தஇந்த பச்சை பயறில் (பாசிப்பயறு ) நிமிடத்தில் சுவையான பாசிப்பயறு தண்ணிக் குழம்பு எப்படிசெய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.இட்லி,தோசை,அரிசி உப்புமா சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இந்தத் பாசிப்பயறு தண்ணிக் குழம்புருசியாக இருக்கும். குறிப்பாக சுட சுட வெள்ளை சாதத்தில் இந்த பாசிப்பயறு தண்ணிக் குழம்புபோட்டு கொஞ்சம் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அத்தனை அருமையாக இருக்கும். . உங்கவீட்ல செய்துபாருங்க. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

புளிச்சக்கீரை பன்னீர் மசாலா | Gongura Paneer Masala Recipe In Tamil

வளர்கின்ற குழந்தைகளுக்கு புரதச்சத்து மிகவும்அவசியம் தேவைப்படுகிறது. அது பன்னீர், பட்டர் இது போன்ற உணவுகளில் அதிக அளவு நிறைந்திருக்கிறது.இதனை குழந்தைகள் சாப்பிட அவர்கள உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் முழுவதுமாககிடைக்கிறது. ஆனால் சுவையை மட்டுமே விரும்பும் குழந்தைகளுக்கு இதனை புளிச்சக்கீரை சேர்த்து  தாபாவில் சேர்க்கப்படும் மசாலாவை சேர்த்து அதே சுவையில்செய்து கொடுத்தால் சலிக்காமல், தட்டாமல் விருப்பமாக சாப்பிடுபவர்கள். இந்த பதிவில்குறிப்பிட்டுள்ளபடி சரியான பக்குவத்தில், இதே முறையில் செய்தால் தாபாவில் செய்யும்அதே சுவையில் புளிச்சக்கீரை பன்னீர்  மசாலாவைநீங்களும் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின்மூலம் தெரிந்து கொள்வோம்.