Recipes

காராமணி கடையல் | Karamani Kadaiyal Recipe In Tamil

காராமணி பயிறு தட்டைப்பயறு என்றும் அழைக்கப்படுகிறது. காராமணியில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இளமையை தக்க வைக்குமாம் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து இளமையான தோற்றத்தை கொடுக்குமாம். இதில் இருக்கும் இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகையை குறைக்க வழி போகிறது. மெக்னீசியம் , விட்டமின் சி  , புரதம் போன்றவை சருமத்திற்கு நன்மை தரக்கூடியவை. காராமணியில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு என்பதால் இது எடையை குறைக்க பயன்படுகிறது. இப்படிப்பட்ட காராமணி பயிறில் கடையல் கொங்கு நாட்டு ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு மசியல் | Potato Masiyal Recipe In Tamil

மதுரை ஸ்பெஷல் உருளைக்கிழங்கு மசியல் இப்படி செய்து பாருங்க. இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் இது வீட்டில்உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது மதுரை உருளைக்கிழங்குமசியலின் எளிய செய்முறையைப் பார்ப்போமா!உங்களுடைய வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தேசில நிமிடத்தில் ஆரோக்கியமான இந்த உருளைக்கிழங்கு மசியல் எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நிறைய பேர் ஆரோக்கியம் தரும் இந்த மசியல் சமையலில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். இப்படி சமைத்துக் கொடுங்கள். கட்டாயம்எல்லோருக்கும் பிடிக்கும்.

தேங்காய் பிஸ்கட் | Coconut Biscuit Recipe In Tamil

பிஸ்கட்லபல வெரைட்டீஸ் இருக்கு விதவிதமான பிஸ்கட்கள் விதவிதமான ஸ்டைல இருக்கு . நமக்குஎன்ன தான் நிறைய பிஸ்கட்டுகள் பாக்கெட்ல வந்தாலும் டீக்கடைகள்ல கிடைக்கிற மாதிரியான தேங்காய் பிஸ்கட், உப்பு பிஸ்கட் ,ஜிரா பிஸ்கட் இந்த மாதிரியான பிஸ்கட் மேல எல்லாருக்குமே தனி கிரேஸ் கண்டிப்பாக இருக்கும். அதே மாதிரியா தேங்காயை வைத்து ஒரு சூப்பரான பிஸ்கட் செய்து பார்க்க போறோம் பிஸ்கட்டை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை தெரிஞ்சிக்க போறோம். இப்ப எல்லாரும் ரொம்ப சுலபமாக நம்ம  வீட்டிலேயேதேங்காய் பிஸ்கட் செய்து சாப்பிட போறோம் . வாங்க சுவையான சுலபமான மொறுமொறு டேஸ்டான தேங்காய் பிஸ்கட் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.