பேரிச்சை லட்டு | Dates Laddu Recipe In Tamil
பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை குழந்தையின்மை , ரத்த சோகை இந்த குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது நீர்க்கட்டி. இந்த நீர்க்கட்டி பிரச்சினை முழுவதுமாக சரியாவதற்கு இந்த லட்டை தினமும் உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இது நீர்க்கட்டி பிரச்சினை, ஒழுங்கற்ற மாதவிடாயை சரி செய்வது மட்டுமல்லாது உடலுக்கு வலிமையையும் கொடுக்கிறது. ஆகையால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுக்கலாம். இதில் உலர்ந்த அத்திப்பழம், பேரிச்சை , முந்திரி, பாதாம், தர்பூசணி விதை , கசகசா எல்லாம் இருப்பதால் உடம்பில் ரத்தத்தின் அளவை அதிகரிக்கும் ரத்தத்தை சுத்திகரிக்கும் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டால் உடலில் உள்ள நோய்கள் பாதி குறைந்துவிடும் . அது மட்டுமல்லாமல் உடலுக்கு வலிமை , சுறுசுறுப்பையும் அளிக்கும்.