Recipes

வெஜிடபிள் பிட்சா | Vegetable Pizza Recipe In Tamil

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் எல்லாருக்குமே  காய்கறிகளில்விதவிதமான உணவுகள் செய்து கொடுக்கிறது ரொம்பவே நல்லது . குழந்தைகளுக்கு அதிகமான சத்துக்கள் கிடைக்க இந்த காய்கறிகள் ரொம்ப உதவியா இருக்கும். இந்த வெஜிடபிள் பீட்சால வெறும் காய்கறிகள் மட்டுமல்லாமல் உங்களுக்கு விருப்பம் இருந்தால் காளான் பன்னீர் எல்லாமே நீங்க  சேர்த்துஇந்த வெஜிடபிள் பீட்சாவ செய்து சாப்பிடலாம். இல்லை குழந்தைகளுக்கு சீஸியான பிட்சா தான் பிடிக்கும் அப்படின்னா நம்ம இந்த பீசா ரெடி பண்ணிட்டு அது மேல சீஸ் வச்சு சூடு பண்ணி கொடுக்கலாம். குழந்தைகளை எப்படி சாப்பிட வைக்கனும்  அவங்களுக்குவிருப்பமில்லாத பிடிக்காத உணவுகளை கூட பிடித்த மாதிரி கொடுக்கணும் . எதாவது வித்தியாசமா  பண்ணாதான் இந்த காலத்து குழந்தைகளை சத்தான உணவுகளை உண்ண வைக்க முடியும். அதனால நம்ம வெஜிடபிள்ஸ் வெரைட்டி வெரைட்டியா செஞ்சு கொடுக்கும்போது அது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். சரி வாங்க இப்ப நம்ம அந்த வெஜிடபிள் சீஸி பீட்சா எப்படி செய்யறது

பால்கோவா | Milkkova Recipe In Tamil

ஸ்கூல் படிக்கிற காலங்களில் நிகழந்தவை நினைவுகளா வந்து ரொம்ப சந்தோஷமான நினைவுகளா இருக்கும். ஒருவர் விஷயம் சொல்லி சந்தோஷப்பட விஷயங்களாக இருக்கும் . அப்படி இருக்கிறப்போ அந்த விஷயங்களை எப்படி பார்க்கிறோம் அப்படினா இப்போ கடைகளில் போய் அந்த ஸ்வீட்சை எல்லாம்  பார்க்கும்போதுநம்ம  பள்ளிக்கூடத்தில்படிக்கும் போது எப்படி வாங்கி சாப்பிட மாதிரி இருக்குமா?. அப்படிப்பட்ட ஒரு பெட்டிக்கடை ஸ்வீட் தான் இந்த பால்கோவா இந்த பால்கோவாக மீண்டும் பள்ளிகே போய் அந்த பெட்டி கடையில வாங்கி சாப்பிட டேஸ்ட்லயே இந்த பெட்டிக்கடை பால்கோவாவை செய்து சாப்பிட்டு சந்தோஷப்படலாம் வாங்க. எப்படி அந்த பால்கோவா பண்ணலாம் அப்படின்னு பார்க்கலாம்.

மட்டன் பாயா | Mutton stew recipe in tamil

அசைவம் என்றால் போதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ பிரியர்கள் மட்டன், சிக்கன், மீன் என்று சமைத்து சாப்பிடுவார்கள். அதிலும் மட்டன் வைத்து எந்த ரெசிபி செய்து கொடுத்தாலும் செய்த அடுத்த சில நிமிடங்களில் அனைத்தும் காலி ஆகி விடும். அந்த அளவிற்கு மட்டன் அதற்கென ஒரு தனி சுவையை தரும். மட்டன் பாயா, அசைவப் பிரியர்களின் ஃபேவரிட் உணவு. மட்டன் கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் மிக பிரபலம். அதிலும் மட்டனை வைத்து செய்யப்படும் பாயா டிபன் வகைகளுக்கு சிறந்த சைடுடிஷ் ஆகும். ஆப்பத்திற்கு பொருத்தமான சைட் டிஷ் இது. இந்த மட்டன் பாயாவில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அதிகளவில் உள்ளன.

பாம்பே சட்னி | Bombay Chutney Recipe In Tamil

வீட்டில் இட்லி தோசையுடன் தொட்டுக்கொள்ளதேங்காய் சட்னி, வெங்காய சட்னி அல்லது தக்காளி சட்னி இவற்றை தான் பலரும் சமைக்கின்றனர்.ஆனால் அவசரத்திற்கு இட்லி, தோசையுடன் தொட்டுக்கொள்ள சைடிஷ் செய்ய வேண்டும் என்றால்தேங்காயைத் துருவி, அரைத்து சட்னி செய்வது என்பது சற்று நேரம் அதிகமாக செலவாகும் விஷயமாகும்.அதற்கு பதிலாக இந்த சட்னியை சட்டென நொடிப் பொழுதில் செய்து முடிக்க முடியும். இந்தபாம்பே சட்னியுடன் இட்லி, தோசை செய்து சாப்பிட மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.அதுமட்டுமல்லாமல் இந்தச் சட்னியை சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிடவும் மிகவும்சுவையாக இருக்கும்.

குங்குமபூ அரிசி பாயாசம் | Kukumapoo Arisi Payasam

குங்குமபூஅரிசி பாயாசத்தை வந்து கீர் அப்படின்னு சொல்லுவாங்க. அரிசி கீர் அப்படிங்கறது வட இந்தியாவில் ரொம்பபிரபலமான ஒரு டிஷ் அந்த டிஸ்ஸ எப்படி செய்யலாம். இந்த அரிசி கீர் சாதாரண அரிசி, பாஸ்மதி அரிசி இல்ல உங்கிட்ட இருக்க எந்த அரிசி ஆனாலும் செஞ்சுக்கலாம். பச்சரிசி, புழுங்கரிசி எந்த அரிசியாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த அரிசியில் இந்த ரைஸ் கீர் அதாவது அரிசி பாயசத்தை செஞ்சு சுவைத்து உன் குடும்பத்துல இருக்க எல்லாருக்கும் பாயாசம் பரிமாறி சந்தோஷத்தையும் மகிழ்ச்சியும் பெற்றுக் கொள்ளுங்கள். இனிப்பு என்பது பரிமாறிக் கொள்வதற்காகத்தான்.

முக்ந்த் வாடி | Mukund wadi recipe in tamil

பஞ்சாபி ரெசிபிக்கள் பெரும்பாலும் காரமாகவும், சுவையானதாகவும் இருக்கும். அதிலும் கிரேவி ரெசிபிக்களை பற்றி சொல்லவே வேண்டாம். சுவை ஆள மயக்கும். அதிலும் சிக்கன் கிரேவி, வெஜ் கிரேவி, கடாய் சிக்கன் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அந்த வகையில் இப்போது பஞ்சாபி ஸ்டைல் முக்ந்த் வாடி மசாலாவை எப்படி செய்வதென்று இந்த பதிவில் நாம் காண்போம். இந்த டிஷ் உண்மையில் மிகவும் எளிமையானது. மேலும் இது மழைக் காலங்களில் வீட்டில் செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். சப்பாத்தி, நாண், சாதம், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பஞ்சாபி முக்ந்த் வாடி.