Recipes

மட்டன் கீமா சமோசா | Mutton Keema Samosa In Tamil

சமோசா பிரியர்களுக்கு இது கூடுதல் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. அதிலும் மட்டன் கீமா சமோசா என்றாலே தனி மவுசுதான் . காரணம் மட்டன் மேலிருக்கும் விருப்பம். மாலை நேர சிற்றுண்டிகளில் சமோசாவிற்கு தனியாக இடம் உண்டு . அப்படிப்பட்ட சமோசாவை நாம் வீட்டில் செய்து ருசிக்க முயற்சிப்போம்.  சைவ சமோசா விட அசைவ சமோசாக்களின் மவுசு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. ஆகையால் வாருங்கள் நாமும் இப்பொழுது மட்டன் கீமா சமோசாவை செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்தி விடலாம். மாலை நேர சிற்றுண்டியாக மழை பெய்யும்நேரங்களில் மட்டன் கீமா சமோசாவை செய்து கொடுத்து அசத்தி விடுங்கள் இதோ மட்டன் கீமா சமோசா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

கத்திரிக்காய் தவா வறுவல் | Brinjal Tawa Fry Recipe In Tamil

காய்கறிகள் அனைத்துமே சத்து நிறைந்தவை . ஆனால் நம்மில் சிலருக்கு சில காய்கறிகள் பிடிக்காது. உணவின் போது ஒதுக்கி வைத்து விடுவோம் . கத்திரிக்காயில் பலவிதமாக சுவைத்திருப்போம். கத்தரிக்காய் சாம்பார் ,புளி குழம்பு, கத்தரிக்காய் வறுவல் ,எண்ணெய் கத்திரிக்காய் , கத்திரிக்காய் தொக்கு இப்படி பல வகைகள் உண்டு.இப்பொழுது நாம் பார்க்க இருப்பது சுவையான கம கம என்றுமணக்க கூடிய கத்திரிக்காய் தவா வறுவல் இது வட இந்தியாவில்அதிகம் செய்து உண்ணும்ஒரு உணவாகும். இதில் பெரிய நீல நிற கத்திரிக்காயை உபயோகிப்போம். இந்தக் கத்திரிக்காய் தவா ஃப்ரைக்கு முக்கியமான விஷயம் நம்ம செய்யப் போகும் மசாலா பொடி . அந்த மசாலா பொடியை சரியா செய்தால் மட்டும் தான் இந்த கத்திரிக்காய் நல்ல சுவையாக வரும். மசாலா எப்படி ரெடி பண்றது எப்படி தவாவில் வச்சு பிரை பண்றது எல்லாம் பார்க்கலாம். இந்த தவாஃ ப்ரை செஞ்சு அசத்த போறோம்.சரி எப்படி கத்திரிக்காய் தவா ப்ரை செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம் வாங்க.

பாகற்காய் புளி குழம்பு | Bitter Gourd Puli Kulambu In Tamil

பாகற்காய் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கசப்பு தான்ஶ்ரீ கசப்பா இருக்கிற பாகற்காய் நிறைய பேரு விரும்ப மாட்டாங்க. ஆனால் அந்த பாகற்காய் எவ்வளவு நன்மைகள் இருக்கு எவ்வளவு சத்துக்கள் இருக்கு. கசப்பும் உடலுக்கு தேவை அறுசுவைல நமக்கு அஞ்சு சுவைதான் பிடிக்குது. ஆறாவது சுவையான அந்த கசப்பு ஏன் பிடிக்க மாட்டேங்குது? அறுசுவையும் பிடிக்க வேண்டும் ஆறாவது சுவையான கசப்பும் படிக்கணும். அப்படிப்பட்ட பாகற்காய் புளிக்குழம்பு ரொம்ப சுவையாவும் அற்புதமாவும் செஞ்சு ரெண்டு நாள் வரைக்கும் கெட்டு போகாம வச்சிருந்து சாப்பிடலாம் அத  எப்படிசெய்யலாம் அப்படிங்கிறத இந்த பதிவில் பார்க்கலாம்.