Recipes

பூசணி உளுந்து வடை | Pumpkin Urad Vada Recipe In Tamil

எப்பொழுதும் ஒரே போல உளுந்த வடை செய்வதைக்காட்டிலும் புதுமையான முறையில் ஆரோக்கியத்துடன் கூடிய ‘சாம்பல் பூசணி உளுந்த வடை’ செய்து பார்த்தால் எப்படி இருக்கும்? மசால்வடையில் கீரை போட்டு செய்வதை நாம் பார்த்திருப்போம். உளுந்து வைத்து எப்படி சாம்பல்பூசணி வடை செய்வது என்று தெரிந்துகொள்ளவும். என்னதான் வீட்டில் வடை சுட்டு கொடுத்தாலும்,டீக்கடை வடை போல சுவை இருக்காது. மொறுமொறுப்பாக வராது. கடையில் காசு கொடுத்து வாங்கிசாப்பிட்டால் தான் திருப்தி இருக்கும். கடையில் கிடைக்கும் வடையை விட சுவையும் ஆரோக்கியமும்அதிகமான சாம்பல் பூசணி வடையை நம்முடைய வீட்டில் எப்படி செய்வது என்பதை பற்றிய சூப்பரானரெசிபி இந்த பதிவில் உங்களுக்காக. அதிக எண்ணெய் குடிக்காமல் பத்தே நிமிடத்தில் வித்தியாசமானசுவையில் எல்லோரும் விரும்பும் வகையிலான ‘சாம்பல் பூசணி ’ செய்யும் முறையை இந்த பதிவின்மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சாமை வெஜிடபிள் பிரியாணி | Saamai Vegetable Biryani

சிறுதானியங்கள் ஏராளமான நன்மைகள்நிறைந்தது.  குறிப்பாக அது இரத்த கொலஸ்ட்ரால்மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வல்லது. மேலும் உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது.சிறுதானியங்களைக் கொண்டு நாம் ஏராளமான உணவுகளை செய்யலாம்.  ஆனால் இவ்வாறான சிறு தானியங்களில் செய்யும் உணவுகளைபலரும் விருப்பமாக சாப்பிடுவது கிடையாது. ஆகவே அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில்வெஜிடபிள் பிரியாணி சமைத்துக் கொடுத்தால், இந்த சிறுதானிய உணவையே அவர்கள் தொடர்ந்துசாப்பிடுவதற்கு பழக்கப்படுத்தி விடலாம். அவ்வாறு அனைவருக்கும் பிடித்த சுவையில் ஆரோக்கியமானசிறுதானியமான  சாமை கொண்டு சுவையான வெஜிடபிள்பிரியாணி செய்து சுவைத்து மகிழுங்கள். சாமை தவிர குதிரைவாலி, வரகு, திணை , போன்றவற்றைகொண்டும் நீங்கள் பிரியாணி செய்யலாம். வாருங்கள் இந்த பிரியாணியை எவ்வாறு செய்ய வேண்டும்என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

சுலபமான தேங்காய்பால் சாதம் | Easy Coconut milk Rice

அதிகப்படியானமசாலா பொருட்களை சேர்த்து, செய்வது பிரியாணி. மசாலா பொருட்களை குறைவாக சேர்த்து கொஞ்சம்நெய்விட்டு தேங்காய்பால்  சேர்த்து தேங்காய்பால்சாதம் செய்வார்கள். வெள்ளையாக தேங்காய்பால் சாதம் செய்துவிட்டு, இதற்கு சைட் டிஷ் ஆக நீங்கள் சைவம் அல்லது அசைவத்தில்எந்த குருமாவை வேண்டுமென்றாலும் பரிமாறலாம். தேங்காய்பால் நிறைந்துசெய்யப்படுவதால் சுவைப்பதற்கு ருசியான உணவாக உள்ளது. தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், எலும்புகளை வலுமைப்படுத்தும் இது போன்ற உடலுறுப்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்.  பக்குவமாக வெள்ளை நிறத்தில் இந்த தேங்காய்பால் சாதத்தை எப்படி செய்வது. தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

வாழைத்தண்டு துவையல் | Banana Stem Thuvayal In Tamil

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களை நாம்அதிகமாக நம்முடைய உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்வதே கிடையாது. அந்த வரிசையில் நிறையபேர் இந்த வாழைத்தண்டை சுத்தம் செய்வதற்கு சிரமப்பட்டு வாங்க மாட்டார்கள். ஆனால் கிட்னியில்இருக்கக்கூடிய கல்லைக்கூட வெளியேற்றும் சக்தி இந்த வாழைத்தண்டுக்கு உண்டு. கிட்னியில்கல்லை வரவிடாமல் தடுக்க கூடிய சக்தியும் இந்த வாழைத்தண்டுக்கு உண்டு. சிறுநீர்க் கோளாறுகளைநீக்கும் வாழைத்தண்டை வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாளாவது சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.வாங்க வாழைத்தண்டு துவையல்  எப்படிசெய்வது என்று பார்ப்போம்.