Recipes

பொன்னாங்கண்ணி கீரை சாறு | Ponnanganni Keerai Saaru Recipe In Tamil

பொன்னாங்கண்ணி கீரை சாறு குழம்பு, பொன்னாங்கண்ணிஎன்கிற வார்த்தையில் இருக்கும் ‘கண்’, கண்பார்வையை குணப்படுத்துவதை குறிக்கிறது. இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்குகண்ணாடி தேவைப்படாது என்பார்கள். பொன்னாங்கண்ணி சாப்பிடுபவர்களுக்கு பகலில் கூட நட்சத்திரம்தெரியும் என்ற வழக்கு மொழியும் உள்ளது. அந்த அளவிற்கு கண்களின் பேணிக் காக்கும் பொன்னாங்கண்ணிக்கீரையை இப்படி பொன்னாங்கண்ணி கீரை சாறு குழம்பு வைத்து சாப்பிட்டால் அசத்தலான சுவையில்இருக்கும். பொன்னாங்கண்ணிக் கீரை அற்புதமான மூலிகையாகும். அதை எப்படி பொன்னாங்கண்ணிகீரை சாறு குழம்பு வைத்து சாப்பிடுவது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பாதாம் மிக்ஸ் ஐஸ்கிரீம் | BadamMix Ice cream In Tamil

பாதாம் டிரிங் மிக்ஸ்ல் சுவையான க்ரீமி விரும்பிய நேரத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட தோன்றும் போதெல்லாம் இப்படி வீட்டில் செய்து வைத்திருக்கும் ஐஸ்கிரீம்களை எடுத்து சுவைத்து உண்ணலாம். மேலும் விருப்பம் இருப்பவர்கள் ஜெர்ரி போன்றவற்றையும் இந்த பாதாம் ஐஸ்கிரீம் சேர்த்து செய்து சாப்பிடும் பொழுது அவை மேலும் அதீத ருசியை நமக்கு கொடுக்கும். சுலபமாக வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு சுவையான கிரீமியான ஐஸ்கிரீமை வீட்டில் செய்து குடும்பத்தாரோடு அமர்ந்து உண்ணும் பொழுது அந்த சந்தோஷத்திற்கு ஈடு இணையே இருக்காது. ஆகையால் இந்த பாதாம் டிரிங்க் ஐஸ்கிரீமை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

மசாலா பொரி | Masala Pori Recipe In Tamil

மசாலா பொரியை வீட்ல இருக்கிற பொருட்களை வைத்து ரொம்ப சுலபமா செய்து சாப்பிட போறோம். இந்த மசாலா பொரி என்னதான் நம்ம  இந்தமாதிரி ஜன்க் ஃபுட்ஸ் சாப்பிடக்கூடாது அப்படின்னு ஒரு எண்ணம் வைத்திருந்தாலும் அந்த உணவை பார்க்கும் போது  சாப்பிடஎண்ணம் தோன்றும். விருப்பப்பட்ட உணவுகளை அளவுகளை கம்மியா  நாமேசெய்து சாப்பிடும் பொழுது அது நமக்கு ஒரு நல்ல சந்தோஷத்தை கொடுக்கும். அப்படிங்கிற பட்சத்தில் இந்த மாதிரி மசாலா பொரிகளை வீட்டிலேயே செய்து சந்தோஷமா குடும்பமா உட்கார்ந்து சாப்பிட்டோம்னா ரொம்ப நல்லா இருக்கும்.வாங்க இந்த மசாலா பொரி எப்படி செய்வது அப்படிங்கறது பார்க்கலாம்.

சுண்டைக்காய் தொக்கு | sundakkai thokku recipe in tamil

தென்னிந்திய உணவுகளில் செய்யப்படும் குழம்பிலேயே சுண்டைக்காய் வத்தல் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். இந்த குழம்பை மதிய வேளையில் சாதத்துடன் பிசைந்து, அப்பளம், பொரியல் என்று வைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை. சுண்டைக்காய் சுவை நம்மில் பலருக்குப் பிடிக்காது. அதிலும் குழந்தைகள் சுண்டக்காய் என்றால் அலறி அடித்துக் கொண்டு தான் ஓடுவார்கள். ஆனால் இந்த முறையில் சுண்டக்கா குழம்பை வைக்கும் போது கொஞ்சம் கூட அதன் கசப்புத் தன்மை தெரியாமல், சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதில் சுவையான குழம்பு வைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

சுரைக்காய் குடல் குழம்பு | Bottle Gourd Goat Intestine Gravy

மட்டன் என்றால் அனைவருக்குமே பிடிக்கும். இது சூடு இல்லாது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. ஆகையால் இந்த மட்டனில் உள்ள அனைத்து உறுப்புகளும் உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விதவிதமான உணவு வகைகளை  ஆட்டின் ஒவ்வொரு உறுப்பிலிருந்தும் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நாம் ஆட்டுக்குடலை வைத்து சுரைக்காய் உடன் சேர்த்து எப்படி குழம்பு செய்வது என்பதை பார்க்க இருக்கிறோம். உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் சுரைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இந்த சுவையான சுரைக்காய் ஆட்டு குடல் குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

முட்டை பீட்ரூட் பொரியல் | Egg beetroot poriyal recipe in tamil

வாரம் ஒருமுறை உணவில் பீட்ரூட் சேர்த்து வந்தால், இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம். குறிப்பாக வீட்டில் குழந்தைகள் இருந்தால், தவறாமல் பீட்ரூட்டை அடிக்கடி சமைத்தால், குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். அதற்கு பீட்ரூட்டை பொரியல் செய்து கொடுப்பது சிறந்த வழி. உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? மதிய வேளையில் டக்குன்னு ஒரு பொரியல் செய்ய வேண்டுமானால், பீட்ரூட் பொரியல் செய்யலாம். பீட்ரூட் உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் வாரத்திற்கு ஒருமுறை பீட்ரூட் சாப்பிட்டால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். இவ்வளவு நன்மைகளை உள்ளடக்கிய பீட்ரூட்டைக் கொண்டு பொரியல் செய்தால், அது சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம், பருப்பு சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

கல்யாண வீட்டு புடலங்காய் கூட்டு | pudalangai koottu recipe in tamil

மதியம் என்ன சமைப்பது என்றே தெரியவில்லையா? உங்கள் வீட்டில் புடலங்காய் உள்ளதா? அப்படியெனில் அதனைக் கொண்டு கூட்டு செய்யுங்கள். இது சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இது ஆரோக்கியமான ரெசிபியும் கூட. அதுமட்டுமின்றி, பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். புடலங்காய் கூட்டு தமிழகத்தில் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான ஒரு பொரியல் வகை. தமிழகத்தில் இவை பெரும்பாலான கல்யாண விருந்துகளில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். புடலங்காய் கூட்டிற்க்கு என ஒரு கூட்டம் கல்யாண விருந்துகளில் பங்கேற்பார்கள் என்றால் அது மிகை அல்ல. புடலங்காய் கூட்டின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமும் இன்றி குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். அது மட்டுமின்றி இதை குறைந்த பொருட்களை வைத்தே நாம் செய்து விடலாம்.

செட்டிநாடு நண்டு மசாலா | Chettinad Nandu Masala Recipe in Tamil

சாப்பாடு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று தான். அதிலும் அசைவ சாப்பாடு சொல்லவே வேண்டாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அசைவத்தில் பலவித டிஷ்கள் உள்ளது கோழி, மீன், இறால், நண்டு என்று அடுக்கி கொண்டே போகலாம். கடல் உணவுகளில் பெரும்பாலானவர்கள் விரும்பி உண்ணும் முக்கிய உணவு வகை நண்டு. இது மிகவும் சுவை மிகுந்த உணவாகும். ஆரோக்கியத்திலும் நண்டு மற்ற கடல் உணவுகளுக்கு சளைத்ததில்ல்லை. இது மிகவும் சுவையானது மற்றும் நன்கு காரசாரமாகவும் இருக்கும். அதுவும் நண்டு குழம்பு சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும்.