Recipes

கத்தரிக்காய் மோர் குழம்பு | brinjal mor kulambu recipe in tamil

மோர் குழம்பு தமிழகத்தில் பரவலாக செய்யப்படும் ஒரு விதமான குழம்பு. மோர் குழம்பை தமிழகத்திலேயே வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். சில பகுதிகளில் இதில் எந்த ஒரு காயையும் சேர்க்காமலும், சில பகுதிகளில் அவரவர் விருப்பத்திற்கேற்ப பூசணிக்காயையோ, வெள்ளரிக்காயையோ, அல்லது வெண்டைக்காயையோ சேர்த்தும், மற்றும் சில பகுதிகளில் மிளகை சேர்த்தும் இந்த மோர் குழம்பை செய்கிறார்கள். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது கத்தரிக்காய் சேர்த்து செய்யப்படும் மோர் குழம்பு. கத்தரிக்காயில் புளிக்குழம்பு வைப்பது போல் கத்தரிக்காய் மோர்‌ குழம்பும் வைக்கலாம்.

ஆந்திரா பெப்பர் சிக்கன் | Andhra Pepper Chicken In Tamil

ஆந்திரா பெப்பர் சிக்கன்க்கு தனித்துவமான சுவை மற்றும் நிறத்தை அளிக்கிறது. . இது பொதுவாக சாதம், ரொட்டிஅல்லது நானுடன் பரிமாறப்படும். விருந்துக்கு சமைக்க ஆந்திரா பெப்பர் சிக்கன் அருமையாக கைகொடுக்கும்.  ஆந்திராபெப்பர் சிக்கன் செய்வது மிகவும் எளிது.  இதுஒரு சிறந்த விருந்து சிற்றுண்டியாகும், உங்களுக்கு காரமான உணவுகளில் விருப்பம் இருந்தால்,இது ஆந்திரா பெப்பர் சிக்கன்உங்களுக்கு ஏற்றது . ஆந்திரா பெப்பர் சிக்கன் ரெசிபியானதுகருப்பு மிளகு மிளகுத்தூள் சுவைகளுடன் நிரம்பியுள்ளது. வாங்க இதை எப்படி செய்வது என்றுபார்ப்போம்.

டூனா மீன் மசாலா | Tuna Fish Masala Recipe In Tamil

அசைவத்தில் மீனை விரும்பி சாப்பிடுவார்கள்.ஒவ்வொருவர்க்கென்று மீன் சமைக்கப்படும் வைக்கும் முறையில் தனிப்பட்ட விதம் உள்ளது.தொடர்ந்து மீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது. டூனாமீன் எனப்படுவது சூறை மீன் என்று அழைக்கப்படும். சூறை மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும்உதவுகிறது. வித்தியாசமான மசாலாக்கள் சேர்த்து இந்த மூலம் சுவையான டூனா மசாலா  ஒரு முறை சுவைத்தால் எப்பொழுதும் நீங்கள் இந்த முறையைபின்பற்றியே சூறை மீன் வைப்பீர்கள்.

சிறுகீரை சப்பாத்தி | Siru keerai chapati recipe in tamil

தினமும் செய்யும் இட்லி,தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா? அப்போ சற்று வித்தியாசமாக மற்றும் சுவையான கீரை சப்பாத்தி செய்து பாருங்கள். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் உட்கொள்ளப்படும் ஒரு இரவு உணவாக சப்பாத்தி உள்ளது. சுவை மட்டுமின்றி ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும் சப்பாத்தி எடையைக் குறைக்கும் உணவுகளில் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சப்பாத்தி தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது. இன்றைய பதிவில் எடை இழப்புக்கு உதவக்கூடிய கீரை சப்பாத்தி எப்படி செய்வதென்று பார்க்கலாம். இந்த சப்பாத்தியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

பாலக் கீரை சாம்பார் | Paalak sambar recipe in tamil

அசைவ பிரியர்கள் கூட விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது சாம்பார் தான். என்னதான் விதவிதமான உணவு வகைகளை சமைத்தாலும், நாம் தவிர்க்க முடியாத ஒரு பாரம்பரிய உணவு சாம்பார். சாதம், இட்லி, தோசை என எதற்குமே சாம்பார் முக்கியம். சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். தமிழ்நாட்டில் பல வகையான சாம்பார் உண்டு. அதில் நாம் பாலக் கீரையை வைத்து சாம்பார் எப்படி செய்வதென்று பார்க்கலாம். பாலக் கீரை சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது. பாலக்கீரையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இந்த கீரை சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும். அதோடு கீரை சாம்பார் சாதம், தோசை, சப்பாத்தி, இட்லி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

ஓமம் ரசம் | Omum Rasam Recipe In Tamil

விதவிதமான ரச வகைகளில் ஓமம் ரசம் ரொம்பவே ஆரோக்கியம்மிக்கதாக இருந்து வருகிறது. செரிமான பிரச்சனை, இருமல் தொந்தரவை விரட்டியடிக்க கூடியசக்தி இந்த ஒரு ஓமம் ரசத்திற்கு உண்டு. ஜீரணத்திற்குமட்டுமின்றி சளி, இருமல் போன்ற தொந்தரவிற்கும் ஓமத் ஓமம் அருமருந்து. மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கவும், சிறுநீர் கழிக்கும் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் இது மிகஉதவியாக இருக்கிறது. இந்த ரசம் வெயிலின் தாக்கத்தினால்ஏற்படும் உடல் உபாதைகளை குறைப்பதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் மிக மிக நல்லது. வாங்கஇப்போ இந்த ஓமம் ரசம் எப்படி வைப்பது என்று தெரிந்து கொள்ளலாம்.

வெள்ளரிப்பழ ஜூஸ் | Cucumber Fruit Juice Recipe In Tamil

வெள்ளரிப்பழம்வெள்ளரிக்காய் எவைகள் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியவை. இந்த வெள்ளரிக்காய்கள் விதை உள்ள காய்களாகையால் இதன் பழங்களிலும் அதிக விதைகள் இருக்கும். இந்த வெள்ளரி பழம் உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கக்கூடியதும் நாவறட்சி ,நீர்ச்சத்து குறைபாடு இருப்பவர்கள் இந்த வெள்ளரி பழத்தை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கும் நீர் சத்து உடலுக்கு நல்ல குளுமையை கொடுக்கின்றது. ஆகையால் தான் நாம் வெள்ளரிக்காய்களை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம். வெயில் காலங்களில் கிடைக்கும் இந்த வெள்ளரிக்காய் வெள்ளரி பழங்கள் எல்லாம் உடலுக்கு மிகவும் சக்தியை கொடுக்கக் கூடியவை.