Recipes

சேமியா தக்காளிபாத் | Semolina Tomatobath Recipe In Tamil

குழந்தைகள் என்றாலே அவர்களின் குறும்புத்தனம் அதிகமாக இருக்கும். அப்படி குழந்தைகள் சாப்பிடும் விஷயத்தில் மிகவும் அடம்பிடிப்பார்கள். இதை சாப்பிடுவது நல்லது அல்ல என்று நாம் எதை சொல்கிறோமோ அதை தான் அவர்கள் அடம்பிடித்து கேட்பார்கள். பல குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடும் ஒரு உணவு வகை நூடுல்ஸ். ஆனால் இந்த நூடுல்ஸ் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வேதிப்பொருட்கள் கலந்து இருப்பதால் அவை உடல்நல பிரச்சனையை கொடுத்து விடுகிறது. எனவே பெற்றோர்கள் இதனை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அவர்கள் நூடுல்ஸ் கேட்டு அடம் பிடிக்கும் நேரத்தில் இப்படி வீட்டில் இருக்கும் சேமியா வைத்து சுவையான சேமியா தக்காளிபாத் செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். எப்படி இந்த சுவையான சேமியா தக்காளி பாத் சமைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

சேப்பங்கிழங்கு சுக்கா | Seppankizhangu Chukka

ஒவ்வொரு நாளும் மதிய வேலை உணவிற்காக தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதாவது ஒரு பொரியல், குழம்பு செய்வது அவசியமானஒன்றாக இருக்கிறது. அவ்வாறு சாம்பார் வைத்தால் அதிகப்படியாக காரமான பொரியல் வகைகளைதான் செய்கிறோம். அதேபோல் காரக்குழம்பு அல்லது குருமா குழம்பு செய்து விட்டால் குறைவானகாரம் சேர்க்கும் பொரியல் வகையை சமைத்து வைக்கின்றோம். அவ்வாறு மதிய உணவுடன் சேர்த்துசாப்பிட ஒரு அருமையான சேப்பங்கிழங்கு சுக்கா செய்தால் மட்டும் போதும். இதை செய்து விட்டால்எல்லா வகை குழம்புக்கும் ஏற்ற உணவாக இருக்கும். அல்லது பதார்த்தம் வைக்க வேண்டிய அவசியம்என்று எதுவும் கிடைக்காது. இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாகஇருக்கும்.

முட்டை சப்பாத்தி | Egg Chappati Recipe In Tamil

முட்டையை வைத்து வித விதமாக எத்தனையோ டிஷஸ்செய்யலாம். முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும்ஆகியவை உள்ளது. எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்டகொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும். இன்று நாம் பார்க்கப்போவதுஎளிமையான முறையில் முட்டை சப்பாத்தி எப்படி செய்வது என்றுதான்.  எல்லோருக்கும் பிடித்த சுவையில் செய்துவிடலாம்.முட்டையே எனக்கு பிடிக்காது என்பவர் கூட இப்படி முட்டை சப்பாத்தி சமைத்துக் கொடுத்தால்நிச்சயம் சாப்பிடுவார்கள். அதுவும் இந்த சண்டேவில் இந்த ரெசிபி உங்களுக்கு நிச்சயம்கை கொடுக்கும். வாங்க நேரத்தை கலக்காமல் அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.