Recipes

கோதுமை பிரட் உப்புமா | Wheat Bread Upma Recipe In Tamil

காலையில் எழுந்தும் என்ன டிபன் செய்வது என்பது தான் பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய டென்சனே.அதிலும் இந்த காலை உணவு உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில்சீக்கிரம் செய்து முடிப்பதாக இருக்க வேண்டும். இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் இந்தசமையல் குறிப்பு பதிவில் ரொம்பவே சுலபமான கோதுமை பிரட் உப்புமா எப்படி செய்வது என்பதைபற்றியும் தெரிந்து கொள்ள போகிறோம்.பிரட் துண்டுகளை போட்டு இப்படி உப்புமா செஞ்சு பாருங்க!தட்டுல ஒரு துண்டு கூட மிச்சமே இருக்காது தீர்ந்து போய்விடும். சுவையான கோதுமை பிரட் உப்புமா  ரெசிபி எளிதாக எப்படி செய்வது? அப்படின்னு இனி இந்தபதிவில் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

கிராமத்து சுறா புட்டு | Village Sura Puttu Recipe In Tamil

பொதுவாக மீன்வகைகளை குழம்பு வைக்கலாம், வறுக்கலாம், பொரிக்கலாம், இப்போதெல்லாம் அதற்கும் ஒரு படிமேலே போய் ஃபிஷ் பிங்கர், ஃபிஷ்பிரியாணி, என்றெல்லாம் கூட செய்யலாம். இவை எல்லாவற்றைகாட்டிலும் சுவையானது கிராமத்து பாணியில் செய்யப்படும் புட்டு. சுறா மீனை வைத்து செய்யப்படும்இந்த புட்டின் சுவைக்கு நிகராக எதையும் சொல்ல முடியாது. இதை சாப்பிட்டவர்களுக்கு இதன்சுவை தெரியும். சுறாவில் பலவகை உண்டு. ஆனால் புட்டு செய்வதற்கு பால் சுறா மிகவும் நன்றாகஇருக்கும். ஒருமுறை நீங்கள் இப்படி செய்து பாருங்கள். பிறகு வார வாரம் ஞாயிற்றுக்கிழமைஉங்கள் வீட்டில் இதைத்தான் செய்ய சொல்லி கேட்பார்கள். ரசம் சாதம்,சாம்பார் சாதம், மோர் குழம்பு சாதத்தோடு வைத்து சாப்பிடும் போது அட்டகாசமான காம்பினேஷன்இது. வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

உருளைக்கிழங்கு சீரக வறுவல் | Potato Seeraga Varuval Recipe in Tamil

நாம் சாப்பிடும் உணவுகளுடன் கூட்டுப் பொரியல் என்று ஏதாவது ஒன்றை வைத்து சாப்பிட்டால் தான். நாம் சாப்பிடும் உணவை முழுமையாக சாப்பிட்டு முடிப்போம். அப்படி கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என நாம் செய்யும் அனைத்திலும் பெரும்பாலும் இடம் பிடிப்பதும், நிறைய நபர்களுக்கு பிடித்த காய்கறி என்று சொன்னால் அது உருளைக்கிழங்கு தான். அந்த அளவிற்கு உருளைக்கிழங்குகளை பயன்படுத்தி நாம் செய்யும் உணவுகள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.ஆகையால் இன்றும் நாம் உருளைக்கிழக்கில் பயன்படுத்தி உருளைகிழங்கு சீரக வறுவல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

அரைத்த மாங்காய் சாதம் | Mango Rice Recipe In Tamil

பொதுவாகவே காலையில் அலுவலகம் செல்பவர்களுக்கும், பள்ளிக்கூடம் செல்பவர்களுக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி தயார் செய்வது கொஞ்சம் கஷ்டம் தான். தினமும் சாம்பார், ரசம், குழம்பு என்று செய்து கொடுக்க முடியாது அல்லவா. வெரைட்டி ரைஸ் ஆகவும் இருக்க வேண்டும். அது வித்தியாசமான சுவையிலும் இருக்க வேண்டும். என்ன செய்வது. கொஞ்சம் புதுசு புதுசா ட்ரை பண்ணா நல்லாஇருக்கும் என்று நினைப்பவர்கள் இந்த அரைத்த மாங்காய் சாதம் செய்து பார்க்கலாம். வடித்துவைத்த சாதம் மட்டும் உங்கள் கையில் இருந்தால் போதும், அடுத்த பத்து நிமிடத்தில் மணக்கமணக்க இந்த அரைத்த மாங்காய் சாதம் தயார்.நாவிற்கு ருசித்தரும் மசாலா அரைத்துப் போட்டமாங்காய் தேங்காய் சாதம் ரெசிபி இதோ உங்களுக்காக , வாங்க பார்க்கலாம்.

நாட்டுக்கோழி கோலா உருண்டை | Country Chicken Kola

நாட்டு கோழி என்றாலே, குழம்பு வறுவல் தான்செய்து சுவைத்திருப்போம்.. நாட்டு கோழி சதை பகுதி மிக சிறிதளவே கிடைக்கும்.. மீதி எலும்புபகுதியாக இருக்கு. சிறிதளவில் இருக்கும் நாட்டுக்கோழி சதை பகுதியை வறுத்தால் ஒருவருக்கேகிடைக்கும். நாடு கோழி எலும்பு குழம்பு வைத்து விட்டு. சதை பகுதியை இந்த மசாலா வகையைசேர்த்து அரைத்து நாட்டு கோழி கோலா  உருண்டைசெய்தால் அனைவருக்கும் பரிமாறலாம் ,சுவையோ அலாதியாக இருக்கும். இந்த நாட்டு கோழி கோலா உருண்டை கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் மிகவும் ருசியாகவும்இருக்கும். அப்படி ஒரு சுவையான ரெசிபி தான் இந்த நாட்டு கோழி கோலா உருண்டை. இந்த கோலாஉருண்டையை சுவையாகவும், சுலபமாகவும் நம் வீட்டிலேயே செய்யலாம். நாட்டு கோழி எடுத்து கோலா உருண்டை செய்வதற்குநேரமில்லை என்றாலும், சட்டுனு ஈசியா செய்யக்கூடிய இந்த நாட்டு கோழி கோலா உருண்டை செஞ்சுபார்க்கலாமே! நாட்டு கோழி  உருண்டை நேர்த்தியாகஇதே முறையில் செய்து பார்த்தால் நிச்சயம் நீங்களும் வியப்பீர்கள்!

கறிவேப்பிலை நெல்லிப் பொடி | Curry Leaves Amla Powder

கறிவேப்பிலை நெல்லிப்  பொடியை மோரில் அளந்து குடித்தாலும் சுவையும் அருமையாகஇருக்கும். ஒரு மாதமானாலும் கெட்டுப் போகாத இந்த ஒரு ஆரோக்கியமான நீங்களும் வீட்டில்தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் இரும்புச்சத்து பெண்கள், குழந்தைகளுக்குமிகவும் முக்கியமானது. அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் எடுத்துக் கொண்டால் உடல் சோர்வுதட்டாது, நல்ல ஒரு நோய் எதிர்ப்பாற்றலுடன் இருக்கும். ருசியான இந்த கறிவேப்பிலை நெல்லிப்  பொடியை எப்படி சுலபமாக நாமும் தயாரிப்பது? என்பதைதான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.அழகா இருக்கணும், தலை முடி கருகருன்னுஇருக்கணும். உடல் ஆரோக்கியத்தில் எந்த குறைபாடும் ஏற்படக் கூடாது, என்பவர்கள் இந்தமாதிரி ஒரு கறிவேப்பிலை நெல்லிப் பொடியை அரைத்து வைத்துக்கொண்டு சாப்பிட்டால் போதும்.முக்கியமாக உடல் மேனி அழகு ஆரோக்யமான உணவிலுருந்தே பெற முடியும்.