Recipes

மட்டன் கீமா ரைஸ் | Mutton Keema Rice Recipe In Tamil

கீமா ரைஸ்வீட்டில் செய்தல் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.மட்டன் மற்றும் கொழுப்புகள் நமதுஉடலின் வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், நுரையீரல் மற்றும் இடுப்புப்பகுதிக்கு நல்ல வலிமையைத் தருகிறது. **ஆட்டு இறைச்சியானது, நமது சிறுநீரக சுரப்பியைவலிமை அடையச் செய்து, ஆண் குறியின் வலிமையை மேம்படுத்துகிறது . புலாவ் ,பிரியாணி, பிரியர்கள்இந்த மாதிரி கீமா போட்டு ரைஸ் செஞ்சு பாருங்க அடிக்கடி செய்வீங்க!  விதவிதமான ரைஸ் வகைகளில் அதிகமான மசாலாக்கள் சேர்க்காமல்செய்யப்படுவதால் பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு.  அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான சுவையான இந்த கீமாரைஸ் ரொம்பவே பிடித்து போய்விடும்.

இனிப்பு சுழியன் | Sweet Suzhiyam Recipe In Tamil

இனிப்பு என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அதிகம் விரும்புவார்கள் .அந்த வகையில் ஹெல்த்தியான எல்லாருக்கும் பிடிச்ச மாதிரியானஒரு இனிப்பு பண்டம் தான் பருப்பு சுழியன். இந்த பருப்பு  தமிழகத்தில் அதிகம் பிரசித்தி பெற்றது. நமது அம்மாபாட்டி தீபாவளி கி செய்து குடுத்து சாப்பிடுறிகிறோம்.  அந்த சுவை மாறாமல், சுலபமாக மிகவும் குறைந்த நேரத்தில்செய்துவிடலாம். வாயில் வைத்த உடனே கரையும் பருப்பு சுழியன் செய்வதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். சுகியம் மற்ற அனைத்தையும் விட சீக்கிரமாகவும்,எளிமையாகவும் செய்யக்கூடிய ஒரு பலகாரம் தான் ஆனால் இதில் அந்த சுகியத்திற்கான பூரணபக்குவம் சிலருக்கு சரியாக வராது. எப்படி செய்தாலும் பூரணம் தண்ணியாகி உருண்டை பிடித்துபோட வராது. அப்படியெல்லாம் இல்லாமல் இந்த நோம்பில் சுழியத்தை அருமையாக செய்து வைத்துவழிபடலாம். ஈசியான முறையில் இந்த சுழியம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பொறித்த குழம்பு | Porittha Kulambu Recipe In Tamil

வீட்டிலும் பெரும்பாலும் சாம்பார், காரக்குழம்பு, புளிக்குழம்பு, கீரை குழம்பு, குருமா என மாற்றிமாற்றி செய்து வருகிறோம். இவற்றைத்தவிர கலவை சாதங்கள் செய்யப்படுகிறது. இவற்றில் காரகுழம்பு என்று சென்னவுடன் பலருக்கும் சாதம் தொண்டையில் கூட இறங்காது. பலரும் காரக்குழம்பா? என்று சோகமாக கேட்பார்கள். அப்படி பலரும் வேண்டாம் என்று நினைக்கும் இந்தகார குழம்பை சற்று வித்தியாசமாக புளி சேர்க்காமல் இஞ்சி, பூண்டு – விழுதாக சேர்த்துகுழம்பாக செய்து பாருங்கள்.  இதன் சுவை மிகவும்அருமையாக இருக்கும். குழந்தைகளும் கூட இதனை விருப்பமாக சாப்பிடுவார்கள். இந்த பொறித்தகுழம்பு  சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்பொழுதுகாரம் இல்லாமல் மிகவும் ருசியாகவும் இருக்கும். வாருங்கள் இந்த பொறித்த குழம்பை எவ்வாறுசெய்வது என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

காளான் முட்டை மசாலா | Mushroom Egg Masala Recipe In Tamil

காளான் முட்டை மசாலா ஒரு சுவையான  மற்றும் மிகவும் சுலபமான குழம்பு வகை.  காளான் முட்டை மசாலா சுவையுடன் கூடிய ஆரோக்கியம்மிகுந்த உணவு வகை. இந்த முட்டை மசாலா, காளான் தவிர உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி,காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம், அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கியபன்னீர் சேர்த்துக் கொள்ளலாம்.முட்டை என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடும்ஒரு உணவுப் பொருளாகும். முட்டையில் உடம்பிற்கு தேவையான புரதச் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.அதிலும் குழந்தைகளுக்கு இதன் அவசியம் அதிகம் இருக்கிறது. எனவே முட்டை,காளான்  வைத்து செய்து கொடுக்கும் எந்த வகையான உணவு வகைகளையும்அனைவரும் தாராளமாக சாப்பிடலாம்.  காளான் முட்டைமசாலா வீட்டிலேயே எளிமையாக செய்து விட முடியும். இதனை எப்படி சுவையாக செய்ய வேண்டும்என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

குதிரைவாலி கேப்பைக் கூழ் | Barnyard Ragi Millet Porridge

நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் சிறுதானியங்களில் உள்ளன. சத்து குறைபாடு நீங்க மருந்து, மாத்திரைகளை உண்பதற்கு பதிலாக சிறு தானிய வகைகளை தேர்ந்தெடுத்து உண்பதால், நமக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் பல சத்துகளும் கிடைக்கும்.அவ்வகையில் இங்கு பார்க்கப் போவது சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்.கேழ்வரகு மற்றும் குதிரைவாலி நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது என்பதால் இந்த சமயத்தில் குதிரைவாலி மற்றும் கேழ்வரகை பயன்படுத்தி கூழ் செய்து அருந்தலாம். குதிரைவாலி அரிசியில் பீட்டா கரோட்டின் என்ற சத்து இருப்பதால் நம் கண்களில் ஏற்படும் கோளாறுகளை தடுக்க உதவுகிறது. மேலும் இந்த குதிரைவாலி அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற உணவாக திகழ்கிறது

சாம்பல் பூசணி உளுந்து வடை | Pumpkin Urad Vada In Tamil

மாலை நேரத்தில்சுட சுட டீ யுடன் வடை பஜ்ஜி என ஏதாவது ஸ்நாக்ஸ் இருந்தா ரொம்பவே அருமையாக இருக்கும்.இந்த ஸ்நாக்ஸ் வகையிலே மற்ற அனைத்தையும் விட இந்த வடைக்கு எப்போதுமே முதலிடம் தான்.அப்படி ஒரு அருமையான டீ டைம் ஸ்நாக்ஸான சாம்பல் பூசணி உளுந்து வடையை நல்ல கிறிஸ்ப்பியாசெய்யலாம்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.வீட்டில் வடை சுட்டு கொடுத்தாலும்,கொஞ்சம் வித்யாசமாக கோஸ் உளுந்து செய்து பாருங்கள். டீக்கடையில் கிடைக்கும் அதே மொறுமொறு கோஸ் உளு‌ந்து வடையை நம்முடைய வீட்டில் எப்படி செய்வது என்பதை பற்றிய சூப்பரானரெசிபி இந்த பதிவில் உங்களுக்காக. பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி கோஸ் உளுந்துவடை செய்தால் கடையில் கிடைக்கும் மொறுமொறுப்பான வடை நம்ம வீட்லயும் கிடைக்கும்

சில்லி முட்டை | Chilly Egg Recipe In Tamil

முட்டை வைத்து ஸ்பெஷலான ஒரு சில்லி முட்டைதான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போரோம். முட்டை பொரியல், குழம்பாக செய்து கொடுத்தால்நிச்சயமாக வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட மாட்டார்கள். ஆனால் குழந்தைகள் விரும்பி இந்தசில்லி முட்டை சாப்பிடுவார்கள். இதுவரை மஸ்ரூம் சில்லி, காலிபிளவர் சில்லி,பன்னீர் சில்லி கூட சாப்பிட்டு இருப்பீர்கள். முட்டை சில்லி சாப்பிட்டு இருக்கீங்களா.ஒரு முறை உங்களுடைய வீட்டிலேயே உங்கள் கையாலேயே செய்து சாப்பிட்டு பாருங்கள். அத்தனைஅசத்தலாக இருக்கும். முட்டை விரும்பாத குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பிவிரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த  சில்லி முட்டை எப்படி செய்வது தெரிந்துகொள்வோம்வாருங்கள்.

கொண்டைக் கடலைக் குழம்பு | Chickpeas Gravy In Tamil

கொண்டைக் கடலைக் குழம்பு  இதே முறையில் வீட்டில் செய்து சாப்பிட்டால் நன்றாகஇருக்கும். கொண்டைக் கடலை உடலுக்கு மிகவும் சக்தியை அளிக்கவல்லது.கர்ப்பிணிகள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் கண்டிப்பாக கொண்டைக் கடலை சாப்பிடவேண்டும். கொண்டைக் கடலையை இவ்வாறு குழம்பு வைத்தும் சாப்பிடலாம்.சுலபமான முறையில், கொஞ்சம் வித்தியாசமாக, இந்த கொண்டைக் கடலைக் குழம்புஎப்படி செய்வது, என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.இது சுவையானது. ஆரோக்கியமானது. இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, இவைகளுக்கு காரசாரமானகுழம்பு என்று கூட சொல்லலாம்! சரி கொண்டைக் கடலைக் குழம்பு எப்படி செய்வது? பார்த்துவிடலாமா!