Recipes

ஹரியாலி வெஜ் கிரேவி | Hariyali Veg Gravy Recipe In Tamil

அருமையான வெஜிடபிள் கிரேவியை இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க அசத்துங்க. என்னதான் வீடுகளில் வெஜ் கிரேவி வைத்தாலும் ஹோட்டலில் வைக்கப்படும் கிரேவிகளுக்கு தான் இப்போது பலரது நாக்கு அடிமையாகி உள்ளது. ஆகையால் நீங்கள் கவலை பட வேண்டாம் ஹோட்டல்சுவையில் அருமையாக வீட்டிலேயே எப்படி ஹரியாலி வெஜ் கிரேவி செய்வது என்று பார்க்கலாம். ஹரியாலி கிரேவி என்பது கொத்தமல்லி மற்றும் புதினா கொண்டு தயாரிக்கப்படும் கிரேவி ஆகும். இந்த கிரேவி சப்பாத்தி, நாண், புல்கா ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோர் இன்று இரவு திடீரென்று சப்பாத்தி மற்றும் வெஜ் கிரேவி கேட்டால், ஹரியாலி வெஜ் கிரேவியை செய்து கொடுத்து அவர்களை அசத்துங்கள்.

பீர்க்கங்காய் கடையல் சட்னி | Peerkangai Kadiyal Recipe in Tamil

ஒரே மாதிரியான தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்ற இந்த இரு வகை சட்னி வகைகளை மட்டும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிட்டு வந்தால் உங்களுக்கே ஒரு கட்டத்தில் சலித்து போய் இருக்கும். இதற்கு பதிலாக நீங்கள் இந்த பீர்க்கங்காய் கடையல் சட்னியை ஒரு முறை செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் அற்புதமாக இருக்கும். இந்த பீர்க்கங்காய் கடையல் சட்னி உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்தமான சுவையில் இருக்கும் ஆகையால் இதை நீங்கள் கண்டிப்பான முறையில் செய்து கொடுக்கலாம். மேலும் பீர்க்கங்காய் வயிற்றுப் பகுதியில் உடல் குடலை சுத்தப்படுத்தி நாம் வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

அப்பள வத்தக்குழம்பு | Appala Vatthakulambu Recipe In Tamil

சமையலில் தினமும் மதிய உணவிற்கு ஏதேனும் ஒரு குழம்புவைத்து தான் ஆகவேண்டும். குழம்பு வைப்பது மட்டுமல்லாமல் அதற்கு தொட்டுக்கொள்ள ஏதேனும்ஒரு பொரியலும் சமைக்க வேண்டும். இவை இரண்டையும் யோசித்து செய்வது பெண்களுக்கு மிகவும்சிரமமாகத் தான் இருக்கும். ஒரு சில சமயங்களில் காய்கறி இல்லாவிட்டால் என்ன செய்வதுஎன்ற குழப்பம் வந்துவிடும். வெறும் 15 நிமிடத்தில் அப்பள வத்தக்குழம்புஇப்படி வெச்சுபாருங்க. அப்புறம் வேறு குழம்பு பக்கம் போகவே மாட்டீங்க.இந்த அப்பள வத்தக்குழம்பை ஒருமுறை செய்து பாருங்கள். இதன் சுவை மீண்டும் மீண்டும் உண்ண தூண்டும்.

நாட்டுக் கோழிச்சாறு | Naattu Kozhisaaru Recipe In Tamil

ரொம்பவே ருசியாக புளிப்பும்,காரமும் கொண்ட இந்த நாட்டு கோழிச்சாறு ஆரோக்கியம் மிகுந்ததும் கூட! . நாட்டு கோழிச்சாறுதொண்டைக்கு இதமாகவும், சளி பிடிக்காமல் இருக்கவும் செய்யும் இந்த நாட்டு கோழிச்சாறுஎப்படி நம் வீட்டிலும் சுலபமாக செய்யலாம்? என்பதை இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்வோம். புரத சத்துகளை பெறுவதற்காக நாட்டுக்கோழி சமைத்துத் தருவது நல்லது.  ருசியாக நாட்டுக் கோழிச்சாறு சமைத்து கொடுத்தால்வீட்டில் அனைவரும் பாராட்டுவார்கள்.பாராட்டை கொடுக்கக் கூடிய ஒரு நாட்டுக் கோழிச்சாறுதான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்

Andhra Ivy Gourd Fry Recipe In Tamil

வாரத்தில்ஒரு நாள் இந்த காயை சமைத்து சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருக்கும் இந்த காயை கொடுக்கலாம். ருசி மிகுந்த ஆந்திர கோவைக்காய்ப் பொரியல்  சுலபமாக எப்படி நம் கையால் வீட்டிலேயே செய்திடலாம். சதா ஒரே காய்கறி வகைகளை பொரியல் செய்து கொடுத்துஅழுத்து போனவர்களுக்கு கோவக்காய் போன்ற வித்தியாசமான காய்கறிகளை செய்து கொடுத்து பாருங்கள்,தட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சாமல் சாப்பிட்டு விடுவார்கள். சுவையான காரசாரமான ஆந்திரகோவைக்காய்ப் பொரியல் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்கஇருக்கிறோம்.

சிறு தானிய சப்பாத்தி | Millet Chappathi Recipe In Tamil

பாரம்பரிய மிக்க கம்பு ,கோதுமை மாவு சேர்த்து செய்யப்படும் சப்பாத்தியை செய்வதும் ரொம்ப சுலபம்தான். சுவையான ஹை ஃபைபர் சப்பாத்தி எப்படி சுடுவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம்இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.சத்துக்கள் நிறைந்த பொருட்களில் ருசி கொஞ்சம் குறைவாகத்தான்இருக்கும். ருசி நிறைந்த பொருட்களில், சத்துக்கள் மிக மிகக் குறைவு. ஆனால் இது நம்மில்பல பேருக்கு தெரியாது. நாவிற்கு ருசியை தரும் பொருட்களாக தேடித்தேடி சாப்பிடுவோம். இனி உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களில்,ருசி கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. நம்முடைய உணவோடு சேர்த்துக் கொள்ளலாம்.இந்த ரெசிபியும் ஆரோக்கியம் நிறைந்த உணவு தானே, இதில் ருசி குறைவா இருக்குமா? என்றுநினைக்காதீங்க . இதோட ருசி அருமையாக இருக்கும். வாங்க ஹை ஃபைபர் சப்பாத்தி ரெசிபியை பார்ப்போம்.

புளிச்ச கீரை சட்னி | Pulicha Keerai Chutney Recipe in Tamil

சாதாரண சாதத்துடன், இட்லி சாப்பாத்தி தொட்டுக்கொள்ள அல்லது ஊறுகாயாக பரிமாறுவதற்கு கோங்குரா சட்னி சரியானவை. குறைந்த தீயில் சமைப்பது நல்லது. இந்த சட்னியை வார்த்து அப்படியே பிசைந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்.. அற்புதமான சுலபமான சட்னி இதோ உங்களுக்காக. சுடச்சுட இட்லி அல்லது சாதத்துடன் சுட்டு இந்த சட்னியை அரைத்து விட்டால் சாப்பாடு பத்தாது .ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான புளிச்ச கீரை சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

முட்டைகோஸ் சாதம் | Cabbage Rice Recipe In Tamil

அட்டகாசமான சுவையில் இருக்கும். முட்டைக்கோஸ் சாதம் ஒரு எளிதான, விரைவான மற்றும் சுவையான மதிய உணவுப்பெட்டி செய்முறையாகும், இது அரிசியை ஊறவைத்தால் வெறும் 20 நிமிடங்களில் செய்யலாம். பாசுமதி அரிசி மற்றும் இத்தாலிய மூலிகைகளின் கலவையானது, இதன் சுவையை உயர்த்துகிறது மற்றும் உணவக பாணியில் ஃப்ரைட் ரைஸ் சுவையை அளிக்கிறது , ஆனால் எந்த சாஸ்களும் இல்லாமல் இந்த மிதமான மசாலா சாதம் அடிமையாக்கும் சுவைகளுடன் குழந்தைகளை கவர்கிறது.  முட்டைகோஸில்உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். இன்று முட்டைகோஸ் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி | Vegetable Green Gram Idly

உடல் பருமன் அதிகமாக இருக்கிறது. என்ன சாப்பிட்டாலும் எடை குறையவில்லை என்பவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த இட்லியை முயற்சிசெய்யலாம். அதேபோல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று சின்ன சின்ன காய்ச்சல்,இரும்பல், தலைவலி, வந்தால் கூட தாங்காமல் அவதிப்படுகிறார்கள். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துஎன்பது கிடைப்பதே கிடையாது. ஆரோக்கியத்தோடு சேர்ந்த அழகை பெற வேண்டும் என்றாலும், இந்தவெஜிடபிள் பாசிப் பயறு இட்லி ரெசிபி உங்களுக்கு கை கொடுக்கும். எப்போதும் அரிசியில்தானே இட்லி செய்து சாப்பிடுகின்றோம். அதைவிட பல மடங்கு சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைபயிறு இட்லி ரெசிபி இதோ உங்களுக்காக.

வாழைக்காய் சுக்கா | Raw Banana Stir Fry Recipe In Tamil

வாழைக்காய் சுக்கா செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமாக இருக்கும் அடுத்த முறையும் உங்களை இது போல் செய்து தர சொல்லி கேட்பார்கள்.ஒரு சில சமயம் வீட்டிலுள்ளவர்கள் பொர்ணமி, அமாவாசை தினங்களில் ஏதேனும் அசைவம் சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது என்று அடம் பிடிப்பார்கள். அவ்வாறு அந்த நேரத்தில் அசைவம் செய்யும் அதே சுவையில் சைவ உணவுகளையும் எளிமையாக சமைத்து கொடுக்க முடியும். அப்படி செய்யக் கூடிய ஒரு சுவையான உணவு தான் வாழைக்காய் சுக்கா. வாருங்கள் இதனை எப்படி அசைவ சுவையில் சமைப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.