Recipes

காடை மிளகு மசாலா | Quail Pepper Masala Recipe In Tamil

காடை இறைச்சியின்அருமை பெருமைகளை அடுக்குகிறது சித்த மருத்துவப் பாடல் ஒன்று. ஆஸ்துமா, அல்சர் போன்றநோய்களைப் போக்குவதுடன் வற்றலாக சோகை பிடித்திருக்கும் நபர் காடை சாப்பிட்டால், கட்டழகன்ஆவான் என்கிறது நம் பண்டைய தமிழ் நூல்கள். காடை மிளகுமசாலா. இதை பிடிக்காத ஆளே நிச்சயமாக இருக்க முடியாது. குறிப்பாக நம் வீட்டில் இருக்கும்ஆண்களை சமையலில் கட்டி போட வேண்டும் என்றால் இந்த பெப்பர் சிக்கன் நமக்கு உடனடியாககை கொடுக்கும். முழுக்க முழுக்க கிராமத்து சுவையில் காடை மிளகு மசாலா செய்வது எப்படி.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

கத்திரிக்காய் தக்காளி சப்ஜி | Brinjal Tomato Sabji In Tamil

உடலுக்கு ஆரோக்கியமாகவும், சாப்பிட சுவையாகவும்இருக்கும்ஃ புல்கா உடன், இந்த கத்திரிக்காய் தக்காளி சப்ஜி சேர்த்து சாப்பிட்டால் மிகவும்அருமையாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு சமைப்பது என்பதனை பற்றி இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்வோம். இந்த கத்திரிக்காய் தக்காளி சப்ஜ்ஜியை ஒரு முறை இட்லி, தோசை,சப்பாத்திக்குசைடு டிஷ்ஷா வைச்சு சாப்பிட்டு தான் பாருங்க,அருமையாக இருக்கும்.முன்பெல்லாம் டிபன்என்றாலே இட்லி, தோசை, பொங்கல் கொஞ்சம் ஸ்பெஷலாக சப்பாத்தி, பூரி போன்றவை இருக்கும். அதற்கும் தொட்டுக் கொள்ள குருமா தக்காளி சட்னிதான் இருக்கும். இப்போதெல்லாம் அப்படி அல்ல வித்தியாச, வித்தியாசமாக நிறைய சைட் டிஷ்வகைகள் வீட்டிலேயே செய்து தருகிறோம். அந்த வகையில் இப்போது கத்திரிக்காய் தக்காளி சப்ஜிவைத்து செய்யப்படும் இந்த சப்ஜியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இஞ்சி ரசம் | Ginger Rasam Recipe In Tamil

ரசத்தை பக்குவமாக வைத்து இறக்கினால் தான் சுவையாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் எப்படி பக்குவமாக, ருசியாக இஞ்சி ரசம் வைக்கலாம் என்று தெரிந்துகொள்ளலாம். புதிய இஞ்சியிலிருந்து தயாரிக்கப்பட்ட இந்த ரசம் வலுவான நறுமணத்தையும் சுவையையும் தருகிறது. இந்த ரசம் தயாரிக்க எளிதானது மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது துவரம் பருப்பு மற்றும் ரசம் பொடியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இந்த சூடான மற்றும் சுவையான ரசம் குளிர்ச்சியான குளிர்காலம் மற்றும் மழை நாட்களுக்கு சரியான தேர்வாகும். இஞ்சி அற்புதமான உணவுப் பொருள் மட்டுமல்ல, அருமருந்தும் கூட! அஜீரணப் பிரச்னையை சரி செய்வதில் இஞ்சி முக்கியப் பங்கு வகிக்கும். இஞ்சி சாறாக பருகுவது ஒருபுறமிருக்க, இஞ்சியை ரசம் வைத்து சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம். உடலுக்கு ஆரோக்கியம்  தரக்கூடிய  இஞ்சிரசத்தை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

கிராமத்து மட்டன் எலும்பு குழம்பு | Mutton Bone Gravy Recipe In Tamil

மட்டனில் உள்ள சத்துக்கள் அனைத்துமே எலும்பில் தான் இருக்கும் என்பதால், எலும்பு குழம்பு ருசிக்கு மட்டுமல்லாது ஊட்டத்துக்கும் நல்லது. மழையோ,குளிரோ, சளியோ, இருமலோ, மட்டன் எலும்பு குழப்பு சமைத்து சாப்பிட்டால் எல்லாம் தூரமாய் போகும் என்பார்கள்.  இறைச்சியைவிட ஆட்டிறைச்சி எலும்பில் சுவை அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சூப் அல்லது கறி குழம்பு தயாரிக்கும் போது, ​​அதிகபட்ச சுவை மற்றும் சுவைக்காக எலும்புகளுடன் கூடிய ஆட்டிறைச்சியைப் பயன்படுத்தவும். இது கிராமத்து ஸ்டைல் ரெசிபி மற்றும் ஆப்பம், இடியாப்பம், சாதம், ரொட்டி, இட்லி அல்லது தோசை ஆகியவற்றுடன் மிகவும் நன்றாக செல்கிறது. இதோ சுவையான மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம்.

மசாலா ரவை இட்லி | Masala Rava Idly Recipe In Tamil

காலை உணவில் பெரும்பாலும் இட்லி தோசை தான் இருக்கும் மற்றப்படி இந்த உப்புமா, பொங்கல் போன்ற உணவுகள்சில நேரங்களில் மாற்றி செய்வோம். அந்த வகையில் எப்போதும் ஒரே மாதிரியாக செய்து கொண்டிருக்காமல்கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மசாலா ரவை இட்லி செய்துசாப்பிடலாம் நல்ல சுவையாக இருக்கும். இவையெல்லாம் சுலபமாக இருந்தாலும் இந்த மசாலா ரவைஇட்லி செய்யும் முறை சரியாக செய்ய வேண்டும் இல்லை என்றால் சொதப்பிவிடும். இந்த மசாலாரவை இட்லி எப்படி பக்குவமாக செய்வதுஎன்பதை இந்த சமையல் குறிப்பு பதிவுதெரிந்து கொள்ளலாம்.

கோதுமை மிளகு தோசை | Wheat Pepper Dosa In Tamil

கோதுமை மாவுஎன்றாலே பலருக்கும் அலர்ஜியாக இருக்கும். கோதுமையில் தோசையா? வேண்டாம் என்று கூறுபவர்களும்உண்டு. ஆனால் இதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம், சப்பாத்தி செய்ய நேரம் இல்லாதவர்கள்சட்டுனு கோதுமை தோசை செய்வார்கள். டயட்டில் இருப்போர் எப்போதும் ஒட்ஸையே காலை வேளையில் சாப்பிடாமல், சற்று கோதுமையையும் சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது.நீங்கள் வழக்கம் போல் செய்யாமல் இது போல ஒரு முறை செஞ்சுபாருங்க, கோதுமை மிளகு தோசை இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.சுவையான கோதுமை மிளகு தோசை எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம்தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

காலிஃபிளவர் குழம்பு | Cauliflower Kulambu Recipe in Tamil

என்னதான் வீடுகளில் சிக்கன், மட்டன் மற்றும் கடல் உணவுகள் போன்று இன்னும் சில அசைவ உணவுகள் தான் இப்போது பலரது நாக்கு அடிமையாகி உள்ளது. ஆகையால் காய்கறியின் பக்கம் கவனம் செலுத்துவதும் நல்லது. இன்று காலிஃபிளவரை கறிச்சுவையில் அருமையாக வீட்டிலேயே எப்படி காலிஃபிளவர் கறி குழம்பு செய்வது என்று பார்க்கலாம். இப்படி ஒரு தடவை உங்கள் வீட்டில் சமைத்து பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உங்களது சமையலுக்கு தான் அடிமையாக இருப்பார்கள். எப்படி கறிகுழம்பு சுவையில் காலிஃபிளவர் குழம்பு செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என என அனைத்தையும் இன்று இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்