Recipes

பாதாம் பனீர் கிரேவி | Almond Paneer Gravy Recipe In Tamil

பன்னீர் கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். இந்த கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம். பன்னீர் கிரேவி வட இந்தியாவில் இருந்துபெறப்பட்ட உணவு வகை. இது பன்னீர் பட்டர் மசாலா வில் இருந்து வேறுபட்டது. இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக செய்யலாம். சப்பாத்தி, பரோட்டா, தவிர்த்து சீரக சாதம் வெஜிடபிள் பிரியாணி தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும். பன்னீர் கிரேவி என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும். சுவையான எளிய முறையில் பன்னீர் கிரேவி செய்யும் முறை பற்றிப் பார்க்கலாம்.

மரவள்ளிகிழங்கு கட்லெட் | Tapioca Cutlet Recipe In Tamil

சமோசா,பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கட்லெட்டுகளில் பல வகை உண்டு.அதில் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், வெஜிடபிள் கட்லெட், பன்னீர் கட்லெட், மற்றும் மஸ்ரூம் கட்லெட் பிரபலமானவை. காய்கறிகள் உண்ணாத குழந்தைகளுக்கு பல காய்கறிகளை சேர்த்துஇவ்வாறு கட்லெட்களாக செய்து கொடுக்கலாம். காய்கறிகள் வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளும் கூட இதை விரும்பி உண்பார்கள்.