Recipes

தக்காளி பிரியாணி | Tomato Biryani Recipe In Tamil

பிரியாணி என்றதுமே எல்லோருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருவது அசைவ பிரியாணி. அது என்னவோ எத்தனைவகை சைவ பிரியாணிகள் இருந்தாலும், இந்த அசைவ பிரியாணி எனும் போது அதன் ருசியும் மணமும் தனி தான். சைவத்தில் அந்த பிரியாணியைசெய்தாலும் அந்த ருசி இருக்காது. இதற்கு அவர்கள் சேர்க்கும் அசைவ உணவு  தான் முக்கிய காரணம். தக்காளி செய்து பிரியாணி செய்தல்அசைவம் சாப்பிடாத நாளில் இந்த தக்காளி பிரியாணி அசைவ சுவையை ஓரளவுக்கு திருப்தி அளிக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் தக்காளி சாதத்தை பிரியாணி போலவே எப்படி செய்வது என்பதை தான் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

கிராமத்து கோவைக்காய் சட்னி | Kovaikkai Chutney Receipe in Tamil

சட்னியில் எத்தனையோ வகைகள் இருந்தாலும் கோவைக்காய் வைத்து சட்னி செய்ய முடியும் என்பது கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் இதை வைத்து சட்னி அரைத்தால், அது நன்றாக இருக்குமா என்றெல்லாம் யோசனை இருப்பது நியாயம் தான். ஆனால் கோவைக்காய் வைத்து செய்யப்படும் இந்த சட்னியில் கோவைக்காய் வாடை கொஞ்சம் கூட இல்லாமல் சுவையாக செய்ய முடியும். சட்னி அரைக்க ஒன்று தேங்காய் பயன்படுத்துவோம் அல்லது தேங்காய் சேர்க்காமல் அதற்கு பதில் வெங்காயம் அல்லது வெங்காயம், தக்காளி வதக்கி அரைக்கும் சட்னி இப்படி வித விதமாக செய்வோம், ஆனால் கோவைக்காய் வைத்து சட்னி சுவையாக செய்ய முடியும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோவைக்காய் சட்னி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

காரைக்குடி மீன் குழம்பு | Kaaraikudi Fish Gravy

கோழிக்கறி,ஆட்டுக்கறி இவற்றைவிட உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவு என்றால் அது மீன் வகைகள்தான். மீன்களில் உடம்பிற்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் உள்ளது.எனவே சிறுவயது முதலே குழந்தைகளுக்கு மீன் சாப்பிடக்கொடுத்து பழக்குவது மிகவும் நல்ல விஷயமாகும். அதிலும் மீன்களை வறுப்பதை விட, குழம்பில்சேர்த்து சாப்பிடுவது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும். அவ்வாறு பெருமளவில் மீன் குழம்புவைப்பது அனைவருக்கும் இருக்கின்ற ஒரு வழக்கம் தான். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பலரதுவீட்டிலும் மீன் குழம்பு தான் இருக்கும். இந்த ஞாயிற்று கிழமையில் மீன் வாங்கிஇந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் மீன் குழம்புவைத்து பாருங்க. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

கத்தரிக்காய் மிளகு கறி | Brinjal Pepper Fry Recipe In Tamil

ஒரு சிலருக்கு கத்தரிக்காய் என்றால் அதிகம் பிடித்தமான காய்கறியாக இருக்கும். ஒரு சிலருக்கு கத்தரிக்காய் என்றாலே அலர்ஜியாக இருக்கும்.கத்தரிக்காயை ஒருவிதமான ஒவ்வாமை உடையவர்கள் சாப்பிட்டால் நமச்சல் ஏற்படும் என்று தவிர்த்துவிடுவார்கள். ஆனால் கத்தரிக்காய் பிரியர்களுக்கு எவ்வளவு செய்து கொடுத்தாலும் பத்தவேபத்தாது. அத்தகையவர்களுக்கு இந்த கத்தரிக்காய் மிளகு கறி ஒரு முறை  செய்து கொடுத்துப் பாருங்கள்! உங்களை பாராட்டி தள்ளிவிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைஇந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்..

ஃபுல்கா | Phulka Recipe In Tamil

இரவு உணவிற்காக சற்று கூடுதல் நேரம் எடுத்தும் கூட சுவையான உணவினை சமைத்து கொடுக்க பலராலும் முடியும்.எனவே சற்று யோசித்து வித்தியாசமாக என்ன செய்து கொடுக்கலாம் என்று பலரும் சிந்தித்துசமைப்பது உண்டு. அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியமாகவும், சாப்பிட சுவையாகவும் இருக்கும்       ஃபுல்கா மிகவும் அருமையாக இருக்கும். கோதுமைமாவை வைதது நாம் எப்போதும் பூரி அல்லது சப்பாத்தியை தான் அதிகமாக செய்வோம். ஏதாவதுகொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் இந்த புல்காவை முயற்சி செய்துபாருங்கள். இது மிகவும் ருசியாக இருப்பதுடன் குழந்தைகளுக்கு நல்ல ஒரு ஹெல்தியான லஞ்ச்பாக்ஸ் ரெசிபி ஆகவும் இருக்கும். வாங்க இப்போது இந்த ஹெல்த்தி புல்கா எப்படி செய்வதுஎன்று தெரிந்து கொள்ளலாம்.

பீர்க்கங்காய் பால் கூட்டு | Ridge Gourd Milk Kootu Recipe In Tamil

நீர் சத்துள்ள காய்கறிகளை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில் நீர் சத்து குறையும் பொழுது அதை ஈடு செய்யும் வகையில் இது துணையாகஇருக்கும். அந்த வகையில் நீர்ச்சத்து நிறைந்துள்ள பீர்க்கங்காயில் ஏராளமான நன்மைகள்ஒளிந்து கொண்டுள்ளன. குறிப்பாக சருமத்தை பளபளக்க செய்வதில் இதன் பங்கு அதிகம். மேலும்எடை இழப்பு, ரத்த சோகை ரத்த சர்க்கரை அளவு, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு பீர்க்கங்காய்நல்ல ஒரு காய்கறியாக இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த பீர்க்கங்காய் பால் கூட்டு எப்படிசுவையாக வைப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்துநாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கறிவேப்பிலை சட்னி | Curry Leaves Chutney Recipe In Tamil

பொதுவாக கருவேப்பிலை என்றாலே அனைவருக்கும் ஒருவித அலர்ஜி உண்டு. அதை யாரும் மென்று சாப்பிடுவது கிடையாது.சாதாரண சமையலில் கருவேப்பிலையை தனியாக ஒதுக்கி வைப்பவர்களுக்கு, இது போல சட்னி செய்துகொடுத்துப் பாருங்கள், அதனுடைய முழு சத்து சென்றடையும். தலை முடி உதிர்தல் பிரச்சனையைமுற்றிலுமாக நிறுத்தக்கூடிய இந்த கறிவேப்பிலையை தவிர்ப்பது கூடாது. உடலுக்கு ஆரோக்கியம்தரக்கூடிய கருவேப்பிலையை நம் உணவோடு சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஆனால் தாளிப்பதற்காககருவேப்பிலையை பயன்படுத்தினால் அதை நாம் ஒதுக்கி விட்டு தான் சாப்பிடுகிறோம்.  கருவேப்பிலை நம் வயிற்றுக்குள் செல்வதே கிடையாது. சுவையான ஒருகறிவேப்பிலை சட்னியை எளிதாக நம் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின்மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

ஃபிஷ் டிக்கா மசாலா | Fish Tikka Masala Recipe In Tamil

அசைவ வகைகளில் மீன் குழம்பு மீன் வறுவலுக்கு என தனியாக ஒரு கூட்டமே இருக்கும். அசைவத்தில் மற்ற வகைகளைவிட மீனுக்கென தனியாக ஒரு சுவை உண்டு. இந்த மீனை பொறுத்த வரையில் குழம்பு வைப்பதாகஇருந்தாலும் சரி பொறிப்பதாக இருந்தாலும் அதற்கான பக்குவத்தில் தான் செய்ய வேண்டும்.அப்படி மீனை பக்குவமாக அதே நேரத்தில் மசாலா சேர்த்து ஃபிஷ் டிக்கா மசாலா செய்யப்போகின்றோம்.வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உடனடியாக செய்து அசத்தக்கூடிய இந்த வித்தியாசமானஃபிஷ் டிக்கா மசாலா எப்படி சுலபமாக செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம்இனி பார்க்க இருக்கிறோம்.