Recipes

சரவணபவன் சாம்பார் | Saravana Bhavan Sambar

ஒரு சில ஹோட்டல்களில் மிகவும் சுவையாக இருக்கின்ற உணவு வகைகளை நாமும் வீட்டிலேயே செய்ய முடியும். அதற்காகஅவர்கள் செய்யும் சிறிய குறிப்புகளை மட்டும் அறிந்து கொண்டால் போதும். அப்படி சரவணபவன்ஹோட்டல் சாம்பார் ரகசியம் என்னவென்றும், அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.சரவணபவன் ஹோட்டலில் இந்தசாம்பார் வேறு வித வித்தியாசமான சுவையுடன் சாப்பிட ரொம்பவே பிரமாதமாக இருக்கும்.இதை திரும்பத் திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவோம். இப்படி ஒரு நல்ல சுவையான சாம்பார்ஹோட்டல் சரவண பவனில் செய்வது போல அதே ருசியுடன் வீட்டில் எப்படி செய்வது என்பதை இந்தசமையல் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

மாசிக்கருவாடு சம்பல் | Maasi Dry Fish Recipe In Tamil

ஒரு சிலருக்குகறியை விட மீன் மற்றும் கருவாட்டின் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி கருவாட்டுபிரியர்களுக்கு மாசிக்கருவாடு சம்பல் என்றால் சொல்லவே வேண்டாம், நாவில்  இருந்து எச்சில் ஊற ஆரம்பித்து விடும். மாசிக்கருவாடுஎன்பது சுத்தம் செய்யப்பட்ட சூறை மீனை உப்பு நீரில் வேகவைத்து மண்ணில் புதைத்து வைத்துசெய்யப்படுவது. . தமிழகத்தில், தூத்துக்குடி பகுதியிலும் கீழத்தஞ்சை மக்களிடமும் இந்தசம்பலுக்குச் செல்வாக்கு இருக்கிறது. சென்னையிலும் கிடைக்கிறது. விலை கொஞ்சம் அதிகம்,ஆனால் அதன் ருசியை அறிந்தவர்கள் விலையைப் பற்றிக் கவலை படுவதில்லை. கடல் உணவுகளிலேயே எளிமையாகசெய்யக்கூடியது. ஐந்து நிமிடத்தில் செய்து விடலாம். இது இட்லி தோசை, ஆகியவற்றுக்குஅசத்தலான காம்போவாக இருக்கும். இதன் சுவை அபாரமாக இருக்கும்.

முருங்கைக்காய் இறால் மசாலா | Drumstick Prawn Masala

முருங்கைகாயின் வாசனைக்கே பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.அந்த முருங்கைக்காயில் இறாலை சேர்த்தால் அவ்வளவு அருமையான மனம் இருக்கும். இறாலை முருங்கைகாயுடன்சேர்த்து செய்வதால்இறால், முருங்கைகாயின்சத்து  சேர்த்து கிடைக்கப்பெறும்.முருங்கைகாய் இறாலுடன்சேர்ப்பதால் இறாலின்வாசம் முருங்கைகாயில்சேர்ந்து முருங்கைகாய்சாப்பிடாதவர்கள் கூடஇதை விரும்பிசாப்பிடுவார்கள்.  முருங்கைகாய் இறாலுடன்சேர்த்து செய்வதால்குழந்தைகளுக்கு மிகவும்பிடிக்கும் முருங்கைகாயின்சத்தும் குழந்தைகள்உடலுக்கு சேரும்.வாருங்கள் இந்தமுருங்கைக்காய்இறால் மசாலா எவ்வாறு செய்யவேண்டும் என்பதைபற்றி இந்தபதிவின் மூலம்தெரிந்து கொள்வோம்.

புது விதமான பூரி | New Style Poori Recipe in Tamil

வீடுகளில் காலை, இரவு உணவாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளை செய்வது வழக்கமாக வைத்திருப்போம். ஆனால் தொடர்ந்து நாம் எதை செய்து சாப்பிட்டு வந்தால் ஒரு கட்டத்தில் நமக்கே சலித்து போய்விடும்.ஆகையால் இன்று ஒரு உணவை ஒரு புது விதமாக செய்து பார்க்க போகிறோம். இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். ஆம் இன்று பூரியை புதுவிதமான முறையில் மசாலா பொருட்களை சேர்த்து அதன் பின்பு பூரி செய்யப் போகிறோம். நீங்கள் இதை போல் பூரி செய்தால் அப்படியே குருமா இல்லாமல் பூரியை சாப்பிடலாம் அந்த அளவிற்கு அதன் ருசி இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு பூரி சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு பூரி சாப்பிடுவார்கள்.

பீர்க்கங்காய் சட்னி | Peerkangai Chutney Recipe in Tamil

எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சுவை மிகுந்த செய்ய பீர்க்கங்காய் இந்த சுவையான காய்கறியை நமது வழக்கமான உணவில் சேர்த்து அதன் பலனைப் பெற முயற்சிப்போம்.இந்த பச்சை சதைப்பற்றுள்ள காய்கறி உள்ளார்ந்த சுவை கொண்டது. எனவே, சாம்பார், பருப்பு, சட்னி மற்றும் ரைத்தா போன்ற பல வழக்கமான உணவில் பயன்படுத்தப்படுகிறது. பீர்க்கங்காய் எளிதில் சமைப்பதால், இந்த சட்னி 10 நிமிடங்களுக்குள் தயாரிக்கப்படலாம். இது மிகவும் எளிமையான செய்முறையாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீர்க்கங்காய் சட்னி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

ஈரல் மிளகு வறுவல் | Mutton Liver Pepper Fry

அசைவ பிரியர்களுக்கு பிடித்த ஈரல் மிளகு வறுவல், இப்படி ஒரு முறை செய்து சாப்பிடுங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். சாதத்துடன் சைடு டிஷாக சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் ஈரல் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது, இதை சாப்பிடுவதால் உடலுக்கு சத்துக்கள் கிடைக்கும். கர்ப்பிணி பெண்கள் ஆட்டு ஈரல் சாப்பிடுவதால் கர்ப கலைகளில் ரத்த அணுக்களை அதிகரிக்கும்.இவ்வாறு உடல் நலத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய ஈரல் மிளகு வறுவல்எப்படி சுவையாக சமைப்பது என்பதனை பற்றி தான் இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப்போகின்றோம்.

ஒயிட் சாஸ் பாஸ்தா | White Sause Pasta Recipe In Tamil

ஒயிட் சாஸ் பாஸ்தா காலை நேர உணவாகவும், மாலை சிற்றுண்டி, அல்லது இரவு நேர உணவாக எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில்  வைத்து அனுப்பலாம்.   எப்போதும்  இட்லிஅல்லது தோசை  சாப்பிட்டு போர் அடிக்கும் பொழுது சில சமயங்களில் இது போன்ற பாஸ்தாவகைகளை செய்து சாப்பிடலாம்.  பொதுவாக  ஒயிட் சாஸ் பாஸ்தா சாஸ் சேர்த்து செய்யப்படுகிறதுமேலை நாடுகளில் செய்யப்படும் முறை. இதனை நமது வீட்டிலேயே செய்து கொடுத்தால் அனைவரும்மிகவும் விரும்புவார்.சுவையான மசாலா பாஸ்தாவை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.