Recipes

மரவள்ளி பணியாரம் | Tapioca Paniyaaram

ஒரு வருடத்திற்கு சில மாதங்கள் மட்டுமே சில வகையான காய்கறிகள், கிழங்குகள் மற்றும் பழங்கள் அதிகமாக கிடைக்கும்.அவ்வாறு மரவள்ளி அதிக அளவில் கிடைக்கிறது. மரவள்ளி கிழங்கு அப்படியே வேக வைத்துசாப்பிட்டாலும் மிகவும் சுவையாக இருக்கும். இந்த மரவள்ளி கிழங்கு வைத்து பாயாசம், சிப்ஸ்போன்ற உணவுகளையும் சமைக்க முடியும். அப்படி சட்டென செய்யக்கூடிய, சுட சுட அனைவரும்விரும்பி சாப்பிடக்கூடிய இந்த மரவள்ளி பணியாரமும் செய்ய முடியும். மாலை டீ குடிக்கும்நேரத்தில் இதனையும் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். அவ்வளவு சூப்பராக இருக்கும்.இந்த மரவள்ளி பணியாரத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

கோதுமை மாவு இடியாப்பம் | Wheat Mavu Idiyappam Recipe in Tamil

தென்னிந்தியாவின் பாரம்பரிய செய்முறையான கோதுமை இடியாப்பம் ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவு ஆகும்.கோதுமை மாவில் பூரி, சப்பாத்தி இப்படியே சாப்பிடுவதற்கு பதில் இடியாப்பம் செய்து சாப்பிடலாம். இது கொஞ்சம் வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கோதுமை மாவு இடியாப்பம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

தக்காளி குழம்பு | Thakkaali Kulambu Recipe In Tamil

ரோட்டுக்கடைகளில் சாப்பிடுவதே தனி ருசிதான். அதிலும் நாம் ரோட்டுக்கடைகளில் இட்லி,தோசைக்கு கொடுக்கப்படும் தக்காளி குழம்பு அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் வீட்டில் இந்த மாரி செய்து சாப்பிட்ருக்க மாட்டோம். ஏனென்றால் அது எப்படி செய்யனும் என்று பலருக்கும் தெரியாது. இனி அந்த கவலை வேண்டாம் ரோட்டுக்கடைகளில் கொடுக்கப்படும் தக்காளி குழம்பு அதே சுவையில் இனி நாம்பளும் செய்து விடலாம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து ருசித்திடுகள். இந்த தக்காளி குழம்பு இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்றவற்றைக்கும் சேர்த்து சாப்பிடலாம் அற்புதமாக இருக்கும்.

வெள்ளை பூசணி சாம்பார் | White Pumpkin Sambar Recipe in Tamil

கோடைக்கு ஏற்ற உடலுக்கு ஆரோக்கியமான வெள்ளை பூசணி சாம்பார். வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். ஆகையால் நாம் வீட்டில் அடிக்கடி சேயும் உணவான சாம்பாரில் வெண் பூசணி சேர்த்து சமைத்து எடுத்துக்கொண்டால் உடலுக்கும் ஆரோக்கியம், மற்றும் சுவையும் அலாதியாக இருக்கும். மேலும் வெள்ளை பூசணி இருக்கும் எண்ணற்ற சத்துக்கள் நமக்கு வாரம் ஒரு முறையாவது கிடைப்பது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. சுவையான வெள்ளை பூசணி சாம்பார் ரெசிபியை சுலபமாக வைப்பது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கீரை மசியல் | Greens Masiyal Recipe In Tamil

கீரை வாங்கினா ஒரு முறை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. சைவ பிரியர்கள் மட்டுமல்ல இனி அசைவ பிரியர்கள்கூட இந்த கீரையின் சுவைக்கு அடிமை.கீரையில்எண்ணற்ற சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். பொதுவாக குழந்தைகள் கீரையில் விரும்பிசாப்பிடுவது கிடையாது. பெரியவர்கள் கூட சைவம் சாப்பிடுபவர்கள் கீரையை விரும்பி சாப்பிடுவார்கள். அசைவ பிரியர்களுக்கு பெரும்பாலும் கீரை என்றாலே ஏதோ சாப்பிடக் கூடாத பொருளை சாப்பிடுவதுபோல தான் முகத்தை சுழிப்பார்கள். இது போல ஒரு முறை கீரையில் மசியல் செய்து கொடுத்துப்பாருங்க எல்லோரும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.வெறும் கீரையை வைத்து மட்டும்இந்த மசியல் செய்யப் போகின்றோம். இதனுடன் பருப்பு வெங்காயம் தக்காளி எதுவுமே சேர்க்கபோவது கிடையாது.

வாழைக்காய் பூண்டு ரோஸ்ட் | Raw Banana Garlic Roast

வாழைக்காய்என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் ஒரு காய் வகையாகும். வாழைக்காய் ரோஸ்ட்,உருளைக் கிழங்கு ரோஸ்ட் போலவே ரொம்ப ரொம்ப சுவையாக செய்யலாம். வாழைக்காய் சாப்பிட்டால்வாய்வு என்று சொல்லி அதனை பலரும் ஒதுக்கி வைத்து விடுவது உண்டு. எல்லாகாய்கறியும் ஏதோ ஒரு சத்துக்களை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும். வாய்வை நீக்க பூண்டுசேர்த்து சமைக்க வேண்டும். எனவே வாழைக்காயில் இருக்கும் சத்துக்களை இழக்காமல் இப்படிசெய்து பாருங்கள் கறி சாப்பிடுவது போல ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும். வாழைக்காய் பிடிக்காதவர்களுக்குகூட இந்த வகையில் செய்து கொடுத்தால் ஒரு கொஞ்சம் கூட மிஞ்சாது. மிகவும் எளிதாக செய்யக்கூடிய இந்த வாழைக்காய் வறுவல் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்தபதிவை நோக்கி பயணிப்போம்.

ஆந்ரா குண்டூர் கார சட்டினி | Andhra Guntur Kara Chutney

வணக்கம் நண்பர்களே பெரும்பாலும் இட்லி தோசைக்கு சாம்பார் சட்னி வைத்து சாப்பிடுவோம். சட்னி னு எடுத்துக்கிட்டோம் அப்படின்னா அதுல பல வகை இருக்கு. தேங்காய் சட்னி தக்காளி சட்னி, மல்லி சட்னி புதினா சட்னி, கார சட்னி இப்படி வித விதமா சட்னி இருக்கு. பெரும்பாலும் எல்லாரும் விரும்புறது கார சட்னி அதுவும் தோசைய நல்லா முருகலா ஊற்றி கார சட்னி வச்சு சாப்பிட்டால் அறுசுவை தான். காரச் சட்னி நாலே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது மிளகாய் வத்தல் வெங்காயம் வதக்கி அரைச்சு செய்றது தான். ஆனா இந்த பதிவுல நாம என்ன பாக்க போறோம் அப்படின்னா ஆந்ரா குண்டூர் கார சட்னி எப்படி வைக்குறதுனு பார்க்க போறோம். வாங்க சட்னி செய்றதுக்கு என்ன செயல்முறை என்னென்ன பொருள் வேணும் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

புதினாமல்லி சட்னி | Mint Coriander Chutney Recipe In Tamil

ரெண்டே நிமிஷத்துலதேங்காய் சேர்க்காம, வெறும் ஒரு கைப்பிடி மல்லி புதினாவை மட்டும் வெச்சு நல்ல சூப்பரானபுதினாமல்லி சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்புதினா மல்லி சட்னியை ஒவ்வொருவர்வீட்டிலும் ஒவ்வொரு விதமாக அரைக்கும் வழக்கம் இருக்கும். எல்லா சட்னியிலும் கண்டிப்பாகபுதினா தழைகள் இருக்கும். ஆனால் எல்லா சட்னிக்கும் வித்தியாசமான சுவை இருக்கும்.சுலபமான முறையில் வித்தியாசமான புதினா மல்லி சட்னி ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம்நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்க வீட்ல புதினா மல்லி சட்னியை இப்படி அரைத்தால்வீட்டில் இருப்பவர்கள் இரண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவையானசட்னி ரெசிபி உங்களுக்காக. நம் பாரம்பரியமாக செய்துவரும் உணவுகளில் மல்லி , புதினாவும் ஒன்று. ஆனாலும் நிறைய பேருக்கு இந்த புதினா மல்லிசட்னி என்பது அந்த அளவிற்கு விருப்பமான ஒன்றாக இருக்காது.