கும்பகோணம் கடப்பா | Kumbakonam Kadappa Recipe In Tamil
            ஒவ்வொரு ஊருக்கும்ஒவ்வொரு விதமான தனித்துவம் உண்டு அதில் சமையல் கலையில் வித்தியாசமான முறையில் அவரவர்ஊரில் சில பிரசித்தி பெற்ற சமையல் வகைகள் இருக்கும். அப்படியான ஒரு வித்தியாசமானகும்பகோணம் கடப்பா ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.சிறு பருப்பு கொண்டு செய்யப்படும் இந்த கடப்பா இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்றுஎல்லாவற்றுக்குமே சைட் டிஷ் ஆக தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அவ்வளவு ருசியாக இருக்கும். தினமும் இட்லி, தோசை செய்வதென்பதுஅனைவரின் வீட்டிலும் வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. இதற்காக தொட்டுக்கொள்ள தினமும்ஏதாவது ஒரு சைடிஷ் செய்து கொண்டிருக்கின்றனர்.