சின்ன வெங்காய கார சட்னி | Small Onion Chutney
வித்தியாசமாகஅதே நேரத்தில் ரொம்ப சுலபமாகவும் ருசியாகவும் செய்யக் கூடிய சட்னி ரெசிபியைபற்றி தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். தக்காளி இல்லாமல்ஒரு சைட் டிஷ் செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது, இந்த சட்னி ரெசிபியை முயற்சிசெய்து பார்க்கலாம். அது மட்டும் இல்லாமல் இது சின்ன வெங்காயத்தில் செய்யப் போகும்சட்னி ரெசிபி என்பதால், இதன் ருசியும் கூடுதலாக இருக்கும். ஆரோக்கியமும் கொஞ்சம் கூடுதலாககிடைக்கும். ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல்,நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்துசாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும். சுட சுட இட்லிக்கு இந்த சட்னி இருந்தா எத்தனை இட்லி சாப்பிட்டோம்னுதெரியாது.