சிறுகீரை தக்காளி கடையல் | Sirukeerai Kadaiyal
            உடம்புக்குஆரோக்கியம் வேண்டுமென்றால் காய்கறிகள், கீரை வகைகள் இவற்றை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும்.அதிலும் தினமும் ஒரு கீரையை சாப்பிட வேண்டும் என்பதுதான் மருத்துவர்களின் ஆலோசனை. அவ்வாறு கீரையைஒவ்வொரு நாளும் பொரியல், கூட்டு, கடையல் என்று மாறி மாறி செய்ய வேண்டும். ஆகவே சிறுகீரையுடன்பருப்பு சேர்த்து இப்படி கடையல் செய்து, அதனை சாதத்துடன் கிளறி குழந்தைகளுக்கு சாப்பிடகொடுத்து பாருங்கள், தட்டாமல் சாப்பிட்டு முடிப்பார்கள்.  சிறுகீரையில் சத்து பல நிறைந்துள்ளனஇவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரானஇயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. வாருங்கள் இந்த சுவையானசிறுகீரை, தக்காளி கடையல்எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.