இறால் அவரை பொரியல் | Prawn Broadbeans Fry In Tamil
            இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படிசமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள்  சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்துசெய்யக்கூடிய ஒரு இறால் அவரை பொரியல் தான் இப்போது பார்க்க போகிறோம். இதில் சேர்க்கப்படும்வெங்காயம், தக்காளி , அவரை இவை அனைத்தும் மிகுந்த வாசனையுடன் சுவையாக இருக்கும். இறாலில்அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது.இறாலை அவரைக்காயுடன் சேர்த்துசெய்வதால் இறால் , அவரைக்காயின் சத்து  சேர்த்துகிடைக்கப்பெறும். அவரைக்காய் இறாலுடன் சேர்ப்பதால் இறாலின் வாசம் அவரைக்காயில் சேர்ந்துஅவரைக்காய் சாப்பிடாதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.